Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஜிம்பாப்வே - இந்தியா பலப்பரீட்சை: மாலை 4.30க்கு தொடங்குகிறது

ஹராரே: இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதும் முதல் டி20 போட்டி, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று மாலை 4.30க்கு தொடங்குகிறது. ஜிம்பாப்வே சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்டி டி20 தொடரில் விளையாடுகிறது. இப்போட்டிகள் ஹராரேவில் ஜூலை 6, 7, 10, 13, 14 தேதிகளில் நடைபெற உள்ளன. கில் தலைமையிலான இந்திய அணியில் இளம் மற்றும் அறிமுக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் விளையாடிய சஞ்சு சாம்ன், ஜெய்ஸ்வால், ஷிவம் துபே ஆகியோர் நேற்று முன்தினம் தான் இந்தியா வந்தனர். அதனால் நாட்களுக்கு முன்பு ஜிம்பாப்வே புறப்பட்டுச் சென்ற இந்திய அணியுடன் இணைய முடியவில்லை. அதனால் முதல் 2 டி20 ஆட்டங்களுக்கு தமிழக வீரர் சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா, ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டுள்ளனர். சிக்கந்தர் ரஸா தலைமையிலான ஜிம்பாப்வே அணியிலும் பலர் சர்வதேச போட்டியில் முதல் முறையாக விளையாட உள்ளனர். இரு அணிகளும்தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்தியா: சுப்மன் கில் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்கள்), ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே, சாய் சுதர்சன், ஹர்ஷித் ராணா.

ஜிம்பாப்வே: சிக்கந்தர் ரஸா (கேப்டன்), பிரையன் பென்னட், கிளைவ் மடன்டே (விக்கெட் கீப்பர்), ஜோனதன் கேம்பெல், டெண்டை சதாரா, பராஸ் அக்ரம், லூக் ஜாங்வே, இன்னொசென்ட் கயா, டடிவன்ஷே மருமணி, வெலிங்டன் மசகட்ஸா, பிராண்டன் மவுடா, பிளெஸ்ஸிங் முஸரபானி, டியான் மையர்ஸ், மில்டன் ஷும்பா, அன்டும் நக்வி, வெஸ்லி மாதவரே, லூக் ஜோங்வே, ரிச்சர்ட் என்கரவா.

நேருக்கு நேர்

* இரு அணிகளும் 8 டி20ல் மோதியுள்ளதில் இந்தியா 6-2 என முன்னிலை வகிக்கிறது.

* இரு அணிகளும் மோதிய 3 டி20 தொடர்களும் ஜூன் மாதத்திலேயே நடந்துள்ளன. இந்த 3 தொடர்களும் ஜிம்பாப்வேயில் மட்டுமே நடந்துள்ளன.

* இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் இந்தியா கடைசி 3 ஆட்டங்களில் வென்று ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளது. அதற்கு முன் விளையாடிய 2 ஆட்டங்களில் ஜிம்பாப்வே வென்றுள்ளது.