வந்தவாசி அருகே துணிகரம் வீட்டின் பூட்டு உடைத்து நகை, ரூ.1.50 லட்சம் திருட்டு: போலீசார் விசாரணை
வந்தவாசி, ஆக.14: வந்தவாசி அருகே விவசாயி வீட்டின் பூட்டு உடைத்து 1 சவரன் நகை மற்றும் ரொக்கப்பணம் ரூ.1.50 லட்சத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர். வந்தவாசி அடுத்த ராமசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் தர்மன்(70), விவசாயி. இவர் தனக்கு சொந்தமான விவசாயி நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் வீட்டை பூட்டிக்கொண்டு தனது...
வந்தவாசி அருகே ஏரிக்கரையில் சந்தனமரங்கள் வெட்டி கடத்திய நபர்கள் யார்? தடயம் கிடைக்காமல் போலீசார் திணறல்
வந்தவாசி, ஆக.14: வந்தவாசி அருகே சந்தன மரங்கள் வெட்டி கடத்திய நபர்கள் யார்? என தெரியாததால் போலீசார் திணறி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெய்யார் கிராமத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிக்கரையில் சந்தனமரங்கள் உள்ளன. இவற்றில் 2 மரங்களை கடந்த 10ம் தேதி இரவு மர்மநபர்கள் வெட்டி திருடிச்சென்றனர். இவற்றின் மதிப்பு ரூ.10...
தமிழக வேளாண் பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து செய்யாற்றில் திதி கொடுத்து விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்: போலீஸ் குவிப்பால் பரபரப்பு
செய்யாறு, ஆக. 13: தமிழக வேளாண் பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆடி அமாவாசைக்கு செய்யாற்றில் விவசாயிகள் திதி கொடுத்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆடி அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். ஆனால் இதற்கு மாறாக திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாற்றில் புதிய சம்பவம் நடந்துள்ளது. கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் வறட்சி...
முன்விரோத தகராறில் தந்தை, மகன் மீது தாக்குதல் 5 பேருக்கு வலை
ஆரணி, ஆக.13: ஆரணி அருகே முன்விரோத தகராறில் தந்தை, மகனை தாக்கிய வழக்கில் 5 பேரை போலீசார் தேடிவருகின்றனர். ஆரணி அடுத்த சங்கீதவாடி கிராமம் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் மண்ணு(60), இவரது மகன் சங்கர்(36), விவசாயிகள். அதேபகுதியை சேர்ந்த உறவினர்கள் சந்திரன்(45), மன்னார்(50). இவர்களுக்குள் வழித்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்...
ஆரணி அருகே நள்ளிரவில் மெடிக்கல் ஷாப் ஷட்டரை உடைத்து பணம் திருட்டு: முகமூடி கொள்ளையர்கள் 2 பேருக்கு வலை
ஆரணி, ஆக. 13: ஆரணி அடுத்த களம்பூர் வள்ளலார் தெருவை சேர்ந்தவர் லோகேஷ்(32), இவர் களம்பூர் டவுன் அண்ணா சிலை அருகில் மெடிக்கல் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வியாபாரம் முடித்துவிட்டு கடையின் ஷட்டரை பூட்டிக் கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று காலை லோகேஷ் அவரது கடைக்கு...
திருவண்ணாமலை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 18 கிராமங்களை ஊராட்சியாக மாற்றக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை, ஆக.12: திருவண்ணாமலை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 18 கிராம ஊராட்சிகளை, மீண்டும் ஊரக பகுதியில் சேர்க்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாநகராட்சியாக கடந்த ஆண்டு தரம் உயர்த்தியபோது, அதனை சுற்றியுள்ள கிராம ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. அதனால், தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதால் மீண்டும் ஊரக பகுதியுடன் இணைக்க வலியுறுத்தி திருவண்ணாமலை கலெக்டர்...
வந்தவாசி அருகே 2 சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்: மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
வந்தவாசி, ஆக.12: வந்தவாசி அருகே ஏரிக்கரையில் இருந்த 20 ஆண்டுகள் பழமையான 2 சந்தன மரங்களை மர்ம கும்பல் வெட்டி கடத்தி சென்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெய்யார் கிராமத்தில் ஏரிக்கரையில் சுமார் 30க்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் 15 முதல் 20 ஆண்டுகளாக வளர்ந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம...
செய்யாறு அருகே 3 வயதான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை: போக்சோ சிறப்பு கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
திருவண்ணாமலை, ஆக 12: செய்யாறு அருகே 3 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வட மாநில கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ கோர்ட் தீர்ப்பு அளித்தது. ஹிமாச்சலபிரதேச மாநிலம், ஹமீர்பூர் மாவட்டம், நாதோன் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்சந் மகன் தேசுராஜ்(48). இவர், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, பில்லாந்தாங்கல் கிராமத்தில்...
ஏஐ கூலிங் கிளாஸ் மூலம் படம் பிடித்த 2 வாலிபர்கள் ஜாமீனில் விடுவிப்பு; அண்ணாமலையார் கோயிலில்
திருவண்ணாமலை, ஆக.10:திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஏஐ கேமரா பொருத்திய கண் கண்ணாடி அணிந்து கருவறையை படம் பிடித்த இரண்டு வாலிபர்களை போலீசார் ஜாமீனில் விடுவித்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று முன்தினம், ஏஐ தொழில்நுட்ப நவீன கேமரா பொருத்தப்பட்ட கண் கண்ணாடி அணிந்து வந்த தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள், கருவறையை படம்...
