மேகதாது அணையை கட்டும் எண்ணங்களை கர்நாடக அரசு கைவிட வேண்டும்: ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தல்
சென்னை: மேகதாது அணையை கட்டும் எண்ணங்களை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மேகதாதில் அணை கட்டாத நிலையில் தற்போதே உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையத்தினுடைய அறிவுறுத்தலை ஏற்றுக் கொண்டு கொடுக்க வேண்டிய...
நவ.21ல் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!
நவ.21ல் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 23ம் தேதி ஒட்டி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது. ...
வைகை அணை நீர்மட்டம் 67.26 அடியாக உள்ளது!
திண்டுக்கல்: வைகை அணை நீர்மட்டம் 67.26 அடியாக உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 1693 கன அடியாக இருந்து வருகிறது. வைகை அணையில் இருந்து 2,521 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ...
மதுராந்தகம் சுற்று வட்டார கிராமங்களின் குடிநீர் ஆதாரமான நல்ல தண்ணீர் குளம் பாழாகும் அபாயம்: வேலி அமைத்து பாதுகாக்க வலியுறுத்தல்
மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம் தொன்னாடு ஊராட்சியில் 6 ஏக்கர் பரப்பளவில் நல்ல தண்ணீர் குளம் உள்ளது. இந்த குளம் மன்னர் காலத்தில் கிராமத்தின் மையப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குளக்கரையை சுற்றி 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்தக் குளத்தின் நீரை அப்பகுதி மக்கள் பல...
காட்டாங்கொளத்தூர் அருகே 40 சென்ட் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு: அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கடாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த தெள்ளிமேடு கிராமத்தில் சுடுகாட்டுக்கு சொந்தமான 40 சென்ட் நிலம் தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டது. இதன் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் ஆகும் என்று கூறப்படுகிறது. தெள்ளிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன். காவல்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற சந்திரன் கடந்த 25...
நாளை தூய்மை பணியாளருக்கு இலவச உணவு திட்டம்
சென்னை: தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நாளைமுதல் 3 வேளையும் இலவச உணவு வழங்கப்பட உள்ளது. காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் இலவச உணவு வழங்க ரூ.64.73 கோடி ஒதுக்கீடு; 31,373 பேர் பயன்பெறுவர். ...
பெரியபாளையம் காவலர் குடியிருப்பில் துருப்பிடித்து வீணாகும் பறிமுதல் வாகனங்கள்
ஊத்துக்கோட்டை, நவ.14: பெரியபாளையம் காவலர் குடியிருப்பில் பறிமுதல் வாகனங்கள் துருப்பிடித்து வீணாகி வருகின்றன. இவற்றை ஏலம் விட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். பெரியபாளையம் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் தாய் கிராமம், குக்கிராமங்கள் என 73 கிராமங்கள் உள்ளன. இதில், ஒரு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உட்பட தற்போது 30க்கும் மேற்பட்ட போலீசார்...
பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள்
சென்னை: தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசிநாள். டெல்டா மாவட்டங்கள், திருச்சியில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களுக்கு காப்பீடு செய்ய நாளை கடைசி நாள் என்பதால் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வேளாண் இணை இயக்குனர்கள் அறிவுறுத்தியுள்ளார். ...
ட்ரெய்லர் வாகனத்தில் விமானம் எடுத்து செல்லப்பட்டது
புதுக்கோட்டை: கீரனூர் அருகே நேற்று சாலையில் தரையிறங்கிய பயிற்சி விமானம் எடுத்துச் செல்லப்பட்டது. கீரனூர் அருகே அம்மா சத்திரத்தில் பயிற்சி விமானம் நேற்று சாலையில் தரையிறங்கியது. கிரேன் மற்றும் 10 தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவியுடன் ட்ரெய்லர் வாகனத்தில் விமானம் எடுத்துச் செல்லப்பட்டது. சேலத்தில் இருந்து வந்த பயிற்சி விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அம்மாசத்திரத்தில்...
