சகல நோயும் தீர்க்கும் சாம்பார் சாத பிரசாதம்!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குரங்கணி முத்துமாலை அம்மனின் வரலாறு ராமாயணத்துடன் தொடர்புடையது. சீதாதேவியை, ராவணன் சிறைபிடித்து சென்றான். மனைவியை மீட்கும் முயற்சியில், தனக்கு உதவிய வானரச் சேனையை அணிவகுத்து நிற்கச் செய்த இடம்தான் இந்தக் ‘குரங்கணி’.ராவணன் தன்னைக் கடத்திச் சென்றபோது, சீதாதேவி, ராமனுக்கு அடையாளம் காட்ட தன் கழுத்தில் கிடந்த முத்து மாலையை கழற்றி வீசினாள்....
விளாம்பழ நிவேதனம்
பாரததேசத்தின் தொன்மையான மரவகைகளில் ஒன்று விளாமரமாகும். இது படர்ந்து செழிந்து வளர்வது. இதன் காய்கள் நடுத்தரப் பந்து அளவிலும் கனத்த ஓட்டுடன் கூடியதாக இருக்கும். பழத்துள் விதைகளுடன் புளிப்புச் சுவையும் இனிப்பும் கலந்த சதைப்பற்றும் இருக்கும். விநாயகருக்குப் படைக்கப்படும் பழ வரிசைகளில் விளாம்பழமும் ஒன்றாகும். முல்லை நிலமரமான இதனை ஆயர்கள் பெரிதும் போற்றுவர். தயிரானது கெடாமல்...
திருவாசகத் தேன்
உலகில் கெடாத ஒரு சில பொருள்களில் தேனும் ஒன்று. அது தானும் கெடாது, தன்னுடன் சேர்ந்த ஒன்றையும் கெடவிடாது. அதுமட்டுமல்ல, நீரிழிவு நோய் (சர்க்கரை) இருப்பவர்கள் இனிப்புப் பொருள்கள் எவையாக இருந்தாலும் சாப்பிடக் கூடாது. ஆனால், தேனைச் சாப்பிடலாம். அதுவும் இனிப்புச் சுவையுடையதுதான் என்றாலும், அது உடலுக்கு ஊறு விளைவிக்காது. மாறாக, அது மருந்தாக மாறும்....
பாயச அன்னம்
திடமாகவும் திரவமாகவும் இல்லாமல் திடதிரவமாக இருக்கும் உணவு பாயசம் ஆகும். இது இனிப்பு வகையானது. பாலை சுண்டக்காச்சி, அத்துடன் வெல்லம் (அல்லது) சர்க்கரைச் சேர்த்து பாயசம் தயாரிக்கின்றனர். இதில் முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாதாம், அக்ரூட் போன்ற உலர் விதைகளை நெய்யில் வறுத்துச் சேர்க்கின்றனர். இது அடிப்படையாகும். பால் பாயசத்திற்குப் பால்போனகம் என்பதும் பெயராகும். அவலைக்...
மகாதேவனின் பிரசாதங்கள்
நன்றி குங்குமம் ஆன்மிகம் மகாசிவராத்திரி நாளில் சிவனை வழிபட்டு பார்வதி தேவியும், தேவர்களும் வேண்டிய வரங்களை பெற்றதாக புராணங்கள் சொல்கின்றன. அது போல் நாமும் சிவபெருமானை முழு சரணாகதியுடன், உண்மையான பக்தியுடன் வழிபட்டால் நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தையும் சிவபெருமான் நிறைவேற்றி வைப்பார் என்பது ஐதீகம். சிவ பெருமானுக்குரிய அஷ்ட விரதங்களில் மிக முக்கியமானது மகாசிவராத்திரி...