பாதுகையின் பெருமை
நமக்காக வலிய திருமாலிடம் சென்று நாம் படும் வலிகளையும் வேதனைகளையும் குறைக்க செய்து திருமாலின் திருவருள் எனும் வலிமையை நம்மிடம் கொண்டு சேர்ப்பவள் பாதுகா தேவியே. திருமாலின் திருவடிக்கோ அல்லது திருமகளின் திருவடிக்கோ எந்த விதத்திலும் வலி என்பதோ சிறு காயம் என்பதோ ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே, ராமபிரான் வனவாசத்திற்காக காட்டிற்கு செல்ல புறப்பட்ட போது,...
பொம்மைக்குள் பிரம்மம்
நவராத்திரி போன்ற பண்டிகைகள் மாபெரும் தத்துவத்தின் பின்புலம் கொண்டவை. ஒட்டுமொத்த லௌகீக வாழ்வினுக்கு மத்தியில் நம்மை தேடலில் ஈடுபடுத்துபவை. ‘‘ஏன் எல்லாத்தையும் பொம்மை பொம்மையா வச்சு கும்பிடறாங்க’’ என்று கேள்வியில் தொடங்கி அனைத்தும் சக்தியின் அம்சமே…. எங்கு காணினும் சக்தியடா…. என்று சுய அனுபூதியில் முடிவடைய வேண்டும். அதெப்படி இந்த பொம்மையை வைத்து சுய அனுபூதியில்...
நவகிரகங்களும் நவமணிகளும்
நவமணிகள் என சொல்லக்கூடிய ரத்தினக்கற்களை மனிதன் அறிந்தும் அறியாமலும் பயன்படுத்தி இருக்கிறான். நவமணிகளே நவகிரகங்களுடன் உள்ளதால் நவகிரகங்களின் காரகங்களாக கொண்டு அவற்றை அணிந்தால் மாற்றங்கள் உண்டாகும் என்பது மறுக்க முடியாத உண்மை. நவமணிகளுக்கு விலைமதிப்பற்ற கல் (Precious Stone) என ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது. இதன் பொருள் என்னவென்றால் இவ்வுலகில் நம் கண்முன் ஏராளமான கற்கள் உள்ளன....
தெய்வ நிலைக்கு உயர்த்தும் திருமணச் சடங்குகள்
ஒவ்வொரு மனிதனும், ஆணோ பெண்ணோ, இந்நிலவுலகில் பிறந்து, படிப்படியாக வளர்ந்து, தனக்குரிய அறத்தைக் கடைப் பிடித்து வாழ்ந்து, தன் புகழையும் சந்ததிகளையும் விட்டுச் செல் கிறான். அவன் வாழ்வு ஒவ்வொரு நிலையிலும் அறம் சார்ந்ததாக இருக்க வேண்டும். அப்போது தான் அவனும், அவன் சார்ந்த சமூகமும், அமைதியுடனும் சந்தோஷத்துடனும் வாழ முடியும். அறம் தவறும் போது...
உப்பைப் போற்றினால் உயர்ந்த வாழ்வு வாழலாம்!
உபன்யாசம் முடிந்த பிறகு புறப்படும் நேரத்தில் ஒருவர் வந்து கேட்டார். ‘‘ஆன்மிகத்திலும் வாழ்க்கையிலும் முன்னேற ஒரு ஆலோசனை சொல்லுங்கள்’’.உபன்யாசகர் ‘‘உப்பைப் பிடித்துக்கொள்ளுங்கள், உயர்வாக வாழலாம்’’ என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். இவருக்குக் குழப்பம் மிஞ்சியது.“உப்பைப் பிடித்துக்கொண்டு எப்படி உயர்வாக வாழ்வது?” என்று யோசித்துக் கொண்டே வந்தார்.வழியில் ஒரு நண்பரின் வீட்டில், அவரைச் சந்தித்து, இதைப்பற்றிச் சொன்ன பொழுது...
ராசிகளின் ராஜ்யங்கள் ரிஷபம்
ரிஷபம் என்றால் காளை மாடு என்று பொருள். இந்த ரிஷபமானது காலபுருஷனுக்கு இரண்டாம் பாவகமாகிறது. முகத்தையும் அதன் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் தன்மையையும் பேச்சையும் குறிக்கிறது. இந்த ரிஷபத்தில் ஆட்சி ஆளுமைத் திறனை சுக்ரன் பெறுகிறார். இந்த ரிஷப ராசியானது நிலத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.மேலும், நீள்வட்டப்பாதையில் இரண்டாவது வட்டப்பாதையில் பயணிக்கும் கிரகம். இந்த வீனஸ் என்ற...
அர்த்தநாரி யோகம்
‘அர்த்த’ என்பதற்கு ‘பாதி’ என்ற பொருளுண்டு. ‘நாரி’ என்பதற்கு ‘பெண்’ என்ற பொருளுண்டு. பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் உள்ளதையே ‘அர்த்தநாரி’ எனக் குறிப்பிடுகின்றது. இவ்வுலகமானது முழுமையடைய வேண்டுமானால் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ இருவருக்கும் இரண்டு சக்திகளான ஆளுகின்ற குணம்கொண்ட ஆண்சக்தியும் ஈர்க்கின்ற குணம் கொண்ட பெண் சக்தி யும் இருந்தால் மட்டுமே ஒருவன்...
ஆசிரியர் தொழிலுக்கான விதிகள்
ஜோதிட ரகசியங்கள் சென்ற இதழில் தொழிலுக்கு அதாவது ஜீவனத்திற்கு பாவகங்களும் கிரக காரகங்களும் எப்படி இணைய வேண்டும் என்று சில விதிகளைப் பார்த்தோம். குறிப்பாக, ஆசிரியராக உத்தியோகம் செய்வதற்கு எப்படி கிரக நிலைகள் இருக்க வேண்டும் என்பதை சில அசல் ஜாதகங்களுடன் பார்த்தால் விளங்கும் என்பதைச் சொல்லி இருந்தோம். அப்படி சில ஜாதகங்களில் பலன்களைப் பார்ப்போம்....
பாக். சிந்து மாகாணத்தில் போராட்டத்தில் வெடித்த வன்முறையில் 2 பேர் பலி: அமைச்சர் வீடு தீவைத்து எரிப்பு
கராச்சி: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள சிந்து நதியில் புதிய கால்வாய்கள் கட்ட மாகாண அரசு முயற்சி மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மோரோ, மதியாரி மற்றும் நவ்ஷேரா பெரோஸ் மாவட்டத்தில் சிந்தி சபா தேசியவாத கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் ஒருபகுதியாக தேசிய நெடுஞ்சாலைகள் மறிக்கப்பட்டன. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்ததால், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த போலீசார்...