ஆடிப் பெருக்கு வளம் பெருக்கு!
ஆறுகளில் பெருகிவரும் தண்ணீர் ஆறுகளில் பெருகிவரும் தண்ணீரை, ஆரவாரத்தோடு வரவேற்று, அன்போடு உபசரித்து, வணங்கி வழிபட்டு, சீர் செய்து சீர் பெறும் நாள்தான் ஆடி 18. தமிழர் வாழ்வியலில் நீரே உயிர்; நதியே நாகரிகம். பருவ மழையால் நிரம்பி வழியும் ஆறுகளை வெறும் இயற்கைக் காட்சியாகப் பார்க்காமல், உயிர் வழங்கும் தாயாகக் கண்டு வரவேற்றனர் நம்...
ஆடிப் பெருக்கு தாலிப் பெருக்கு
ஆடி பதினெட்டாம் பெருக்கு தமிழகப் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் பிரதிபிம்பமான விழா. உலகத்துக்கு அச்சாணியாக விளங்குகின்ற நீர் நிலைகளில் ஒன்றான ஆறுகளில் புதுநீர் பெருக்கெடுத்து ஓடும். அதனால் பச்சைப் பயிர்கள் நன்கு விளையும். அந்த ஆறுகளையும் ஆறுகளில் ஓடும் நீரையும் தெய் வமாக நினைத்துக் கொண்டாடி மகிழும் நாள் ஆடிப்பெருக்கு. ஆடிப் பெருக்கு திருநாளன்று பெண்கள்...
ஆடிப்பெருக்கு!
ஆடி மாதம் 18-ம் நாளைதான் நாம் ஆடிப் பெருக்கு என்கிறோம். இது நம் தமிழ்நாட்டில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. காவிரி அன்னைக்கு நன்றி செலுத்தும் விதமாக ‘ஆடிப் பட்டம் தேடி விதை’ என்று சொல்வது வழக்கம். ஆடி மாதமே சிறப்பு வாய்ந்த மாதம் என்றாலும், செவ்வாய், வெள்ளி போன்ற கிழமைகளில் அம்மன் கோயில்களிலும், கார்த்திகை அன்று...
வெற்றியின் முதல் கதவு
ஒரு நாட்டின் அரசன் வித்தியாசமான போட்டி ஒன்றை அறிவித்தான். அரண்மனையின் பிரம்மாண்டமான கோட்டைக் கதவை கைகளால் திறந்து தள்ள வேண்டும். அதைத் திறப்பவன் நாட்டின் ஒரு பகுதியை பரிசாகப் பெறுவான். ஆனால், தோற்றுவிட்டால், அவனுடைய இரண்டு கைகளும் வெட்டப்படும் என்ற கடுமையான நிபந்தனையும் இருந்தது. இந்த அறிவிப்பைக் கேட்ட மக்கள் அனைவரும் பயந்தனர். ‘‘என்ன ஆகும்?”,...
வாய்ப்புக்காகத் தயாராக இருங்கள்
ஒரு சிறிய கிராமத்தில் இரண்டு விவசாயிகள் வாழ்ந்து வந்தனர். இருவரிடமும் நிலம் இருந்தது. இருவருக்கும் விளைச்சல் பெருக வேண்டும், குடும்பம் செழிக்க வேண்டும் என்ற ஒரே கனவு இருந்தது. ஆனால், அவர்கள் வாழ்வை அணுகிய விதம் முற்றிலும் வேறுபட்டது. முதல் விவசாயி ஒவ்வொருநாள் காலையும் வீட்டின் வாசலில் நின்று வானத்தைப் பார்ப்பார். மேகங்கள் திரண்டிருந்தால் மகிழ்ச்சி...
தன்னை கரைத்து, கறை நீக்கும் புனிதமான உறவு
ஒருநாள் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களிடம் ஒரு சிறிய ரப்பரை கையில் எடுத்துக் காட்டினார். “இந்த ரப்பரைப் பாருங்கள். பென்சிலால் எழுதும்போது தவறு ஏற்பட்டால், அது தன்னைத் தேய்த்துக்கொண்டு, அந்தத் தவறை அழித்து விடுகிறது. அது அழிக்கும் ஒவ்வொரு முறையும் தன்னுடைய அளவை மற்றும் அழகை இழக்கிறது. ஆனாலும், மற்றவர்களின் தவறைச் சரிசெய்வதே அதன் பணியாக...
அம்மன் கோயில் விசேஷங்களும் ஆடி மாதச் சிறப்பும்!
1. ஆடி மாதமும் தட்சிணாயன புண்ணிய காலமும் ஆடி மாதம் என்பது சூரியன் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் நுழையும் தட்சிணாயன புண்ணிய காலத்தின் தொடக்கமாகும். இக்காலம் தேவர்களின் இரவு பொழுதாகக் கருதப்படுகிறது.ஆன்மிக ரீதியாக, உலகைக் காக்கும் அன்னை பராசக்தியை வழிபட இது மிக உகந்த நேரமாகும். தேவர்கள் தங்களின் இரவு பொழுதில் விழித்திருந்து...
வாசிப்பே வெற்றியின் வழிகாட்டி
போர் முடிந்த இரவு வேளையில், போர்களத்தில் ஒருவர் புத்தகம் வாசித்துக் கொண்டு இருந்தார். அந்த நபரை பார்த்த ஒரு பெண் மணி கேட்டார்: ‘‘ஏன் எல்லோரும் ஓய்வெடுத்து உறங்கிக் கொண்டு இருக்கும் வேளையில் நீ மட்டும் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறாய்?” என்று. அதற்கு அந்த நபர் சொன்னார்: ‘‘இன்று சிப்பாயாக பணிபுரியும் நான், இந்தப் படைக்கு...
புதையலை இழந்துவிடாதிருங்கள்!
ஒரு நாட்டை ஆட்சி செய்து வந்த மன்னர், தன் நாட்டு மக்களின் வாழ்க்கை முறையைக் கண்டு மிகவும் கவலைப்பட்டார். மக்கள் உழைப்பதைவிட சோம்பலை அதிகமாக விரும்பினார்கள். சிறிய பிரச்னைகளைக்கூட தீர்க்க முயற்சி செய்யாமல், பிறரைக் குறை கூறிக் கொண்டே இருந்தார்கள். அவர்களிடம் முயற்சி, பொறுப்பு உணர்வு, சிந்தனைத் திறன் போன்றவை குறைந்து காணப்பட்டன. இதை மாற்ற...

