சாய் பாபாவே நேரில் வந்து உதவிய உண்மை சம்பவம்: ஆனந்தத்தில் ஆழ்ந்த பக்தர்

வெளியே கிளம்பும்போது, ‘நல்லபடியே சென்று வர வேண்டும்’ என்று இறைவனை வணங்கிச் செல்வதே வழக்கம். முக்கியமாக சாய்பாபாவை வணங்கி விட்டுத்தான் செல்வேன். நீண்ட நாட்களாகவே எனக்கு முழங்காலில் வலி உள்ளது. இருப்பினும் தவிர்க்க முடியாத நிலையில், உறவினர்கள் மற்றும் நண்பர்களது இல்ல விசேஷங்களுக்குச் சென்று வருவேன். இப்படித்தான், புதுக்கோட்டையில் நடைபெறும் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக...

அபயக்கரமும் கருனை கடலும்

சென்ற இதழில் இது வரை... அங்கே ஸ்வாமிநாதனிடம், “எனக்கு ஒரே பையன். வயசு இருவத்தாறு ஆகிறது. பேரு ஸ்ரீ ராம். நாங்கல்லாம் தஞ்சாவூர் ஜில்லா. இப்போ மெட்ராஸ். நான் மத்திய அரசாங்கத்தில் வேலை பண்றேன். பையன் கனடாவில் தனியார் கம்பெனிலே உயர்ந்த பதவியிலும் நல்ல சம்பளத்திலும் இருக்கான். அவன் நாளக்கி மெட்ராஸ் வரான். அவனுக்கு மூணு...

உயிர் போகும் வலியில் இருந்து காப்பாற்றிய சாய் பாபாவின் அற்புதங்கள்..!!

நானா என்னும் பக்தர் பாபாவின் மீது மிகுந்த அன்புகொண்டிருந்தார். அவருக்கு முதுகில் ஒரு கட்டி இருந்தது. அது மிகுந்த வலி கொடுத்தது. அவர் எவ்வளவோ மருந்துகளைச் சாப்பிட்டும் வலி நிற்கவில்லை. வலியால் துடிதுடித்தார் நானா. `பக்தர்களின் வலியை, தான் எடுத்துக்கொண்டு, அவர்களைக் குணப்படுத்திவிடுவார் பாபா’ என்பதை நானா அறிந்திருந்தார். எனவே, அவர் பாபாவிடம் செல்லாமலேயே...

விசித்திர தண்டனை

பழனி மலை அடிவாரம்! பெரும் குளம் ஒன்றின் கரையில் ஏராளமான மீன்கள் குவிக்கப்பட்டு, ஒரு சிறு குன்றுபோலக் காட்சியளித்தது. குளத்தில் பிடிக்கப்பட்ட மீன்கள் அவை. அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் குளத்தில் உள்ள மீன்களைப் பிடித்து கரையில் குவிப்பார்கள். மறுநாள் அவற்றைப் பங்கிடுவார்கள். குவிக்கப்பட்டிருக்கும் மீனுக்குக் காவலாகப் பழனித்தேவர் என்பவர் காவலாக நியமிக்கப் பட்டிருந்தார். பெயர்...

பழனியும் திருவண்ணாமலையும்

பதின் மூன்றாம் வயது முதல் பத்தொன்பதாம் வயது முடிய, விசேஷமான காலம்! ‘டீன் ஏஜ்’ என்பார்கள். பதின் மூன்று தொடங்கி பத்தொன்பது வரை ‘டீன், டீன்’ என அடிக்கடி ஒலிப்பதால், இந்தப்பருவ காலத்தை ‘டீன் ஏஜ்’ என்றார்களோ என்னவோ? எது என்ன எங்கே எப்படி எப்போது? என எதுவுமே புரியாத வயது. ஒரு விதத்தில்...

சமர்த்த ராமதாசர்

பகுதி 2 அதே நேரத்தில்... மன்னர் வீர சிவாஜியும், ராமதாசரைத் தரிசிக்க விரும்பிப் பல்லக்கில் ஏறிப் படைகளோடு புறப்பட்டு, நகர எல்லையைத் தாண்டி வந்து கொண்டிருந்தார். வந்த சிவாஜி, தூரத்தில் தம் குருநாதர் வருவதைப் பார்த்ததும், உடனே பல்லக்கில் இருந்து இறங்கி விரைவாக நடந்து வந்து, குருநாதரை வணங்கிப் பணிவோடு ஏதோ பேசினார். ராமதாசர்...

இதனால்தான் பெரியாழ்வார் என்று பெயர் வந்தது!

பெரியாழ்வார். என்ன ஒரு அற்புதமான பெயர்! வேறு எந்த ஆழ்வாருக்கும் கிடைக்காத இந்தப் பெயர் இவருக்கு எப்படிக் கிடைத்தது? அதற்கு ஒரே வரியிலே பெரியவர்கள் பதில் சொல்லி விட்டார்கள். வேறு ஆழ்வார்களுக்கு இல்லாத பரிவு இவருக்கு இருந்ததால் பட்டர் பிரான், விஷ்ணு சித்தர் என்கின்ற பெயர் பெரியாழ்வார் என்னும் பெயராக மாறி நிலைத்தது. எல்லா ஆழ்வார்களுக்கும்...

பகைவர் ஐவர்

பக்தரின் கர்வம் அகற்றுபவர் என்று கண்ணனுக்கு ஒரு திருநாமம் உண்டு. அதை விளக்கும் கதை இது.பகவானான கண்ணன் என் தோழன். தோழமை பக்தியில் எனக்கு இணையானவர் யாருமில்லை என்ற எண்ணம் அர்ஜுனனுக்கு அதிகமாகவே உண்டு; வரவர அந்த எண்ணம் கர்வமாக மாறியது. கண்ணனுக்கு இது தெரியாமல் போகுமா? இந்த அர்ஜுனனுக்குப் பாடம் புகட்ட வேண்டும்”...

அபயக் கரமும் கருணை கடலும்

பல வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது. ஒரு நாள் மாலை நேரம். ஸ்ரீ காஞ்சி சங்கர மடத்தில் மகா பெரியவாளை தரிசிக்க ஏகக் கூட்டம். பெரியவா தன் அறையை விட்டு வெளியே வந்து வழக்கமாக உட்காரும் மேடையில் சாய்ந்தவாறு அமர்ந்தார். ஒவ்வொருவராகப் பெரியவாளை நமஸ்கரித்து, தம் குறைகளைத் கூறினர். தக்க பதிலைப் பொறுமையுடன்...

சமர்த்த ராமதாசர்

சமர்த்த ராமதாசர்! வீர சிவாஜியின் குருவாக இருந்தவர்! இவரைக் கேட்காமல், இவரைக் கலந்து ஆலோசிக்காமல், வீர சிவாஜி எந்த முடிவும் எடுக்க மாட்டார்.அப்படிப்பட்ட ராமதாசர், ஒரு சமயம் தனிமையில் அமர்ந்திருந்தார். அப்போது, தத்து என்பவன் வந்து ராமதாசரை வணங்கி, ‘‘சுவாமி! என் பெயர் தத்து. அடியேனைத் தாங்கள், சீடனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்’’ என வேண்டினான்....