பெரம்பலூரில் பாஜ மகளிரணி ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்,நவ.7: பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜ மாவட்ட மகளிரணி தலைவர் விஜயா தலைமை வகித்தார். மாவட்ட பொதுசெயலாளர்கள் வரதராஜ், உமாஹைமாவதி, மாவட்ட துணைத் தலைவர் தேவேந்திரபாலாஜி, மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாஜக மாவட்ட தலைவர் முத்தமிழ்செல்வன், மாவட்ட போராட்டக் குழு தலைவர் வேலுசாமி உட்பட பலர் பேசினர்....

பெரம்பலூரில் 72வது கூட்டுறவு வாரவிழா குழு கூட்டம்

பெரம்பலூர், நவ.7: பெரம்பலூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் 5.11.2025 அன்று 72வது அனைத்து இந்திய கூட்டுறவு வாரவிழாவை முன்னிட்டு பெரம்பலூர் மண்டல இணைப்பதிவாளர், வாரவிழா குழுத்தலைவர் க.பாண்டியன் தலைமையில் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 14.11.2025 முதல் 20.11.2025 வரை கூட்டுறவு வாரவிழா கொண்டாடுவதை முன்னிட்டு கூட்டுறவு சங்கங்களில் கொடியேற்றுதல், மரக்கன்று நடுதல், ரத்ததான முகாம்,...

பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய் அலுவலர் நியமனம்

பெரம்பலூர்,நவ.7: பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலராக கண்ணன் நியமனம். தமிழக அளவில் நேற்று முன் தினம் மாலை தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலாளர் முருகானந்தம் பிறப்பித்த உத்தரவில், மாநில அளவில் மாவட்டவருவாய் அலுவலர்கள் நிலையிலான 26பேர்களுக்கு பணிமாறுதல் உத்தரவுக்கான ஆணையினை பிறப்பித்து இருந்தார். இதன்படி பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலராக கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பணி...

விக்கிரமங்கலத்தில் மது பாட்டில்கள் விற்றவர் கைது

தா.பழூர் நவ. 6: முத்துவாஞ்சேரி பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி விற்றரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான காவல்துறையினர் முத்துவாஞ்சேரி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் அரசு அனுமதி இன்றி பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்...

வேப்பூரில் சிறப்பு தீவிர வாக்காளர் சீராய்வு ஆலோசனை கூட்டம்

குன்னம், நவ. 6: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதிக்கு உட்பட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் வேப்பூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக சிறப்பு தீவிர வாக்காளர் சீராய்வு பற்றிய ஆலோசனை கூட்டம் வேப்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, வேப்பூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகு நீலமேகம் மற்றும் பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன்...

சிறுவாச்சூர் கிராமத்தில் குட்கா விற்றவர் கைது: 106 கிலோ குட்கா பறிமுதல்

பெரம்பலூர்,நவ.6: சிறுவாச்சூர் கிராமத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட 106 கிலோ குட்காபொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா பல்வேறு நடைவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று (5ஆம்தேதி) பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள...

லப்பைகுடிகாடு பகுதியில் நாளை மின் நிறுத்தம்

குன்னம், நவ. 5: மங்களமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்நிறுத்தம் செய்யப்படும் என உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் தெரிவித்தார். மங்களமேடு துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் ரஞ்சன்குடி, பெருமத்தூர், மங்களமேடு, தேவையூர், நகரம், நமையூர், முருக்கன்குடி, சின்னாறு, எறையூர், வாலிகண்டபுரம், மேட்டுபாளையம், க.புதூர், அயன்பேரையூர், அகரம், வி.களத்தூர்,...

செங்குணம் கிராமத்தில் புதிய கிரஷர் அமைக்க அனுமதி ரத்து

பெரம்பலூர், நவ.5: செங்குணம் கிராமத்தில் புதிய கிரஷர் அமைக்க கூடாது என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, ஆய்வுக்குப்பின் கலெக்டர் மிருணாளினி அனுமதியை ரத்து செய்தார். இது தொடர்பாக வெளியிடப் பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெருப்பதாவது : பெரம்பலூர் மாவட்டம், கவுள் பாளையம் பகுதியில் இயங்கி வரும் பல்வேறு கிரஷர் மற்றும் குவாரிகளால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,...

பூலாம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் வளர் இளம் பருவத்தினருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரம்பலூர், நவ.5: பூலாம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் வளர் இளம் பருவத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பாக பூலாம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் வளர இளம் பருவத்தினருக்கான வாழ்வியல் திறன் கல்வி மற்றும் பால்வினை நோய் வாழ்வியல் நன்னெறிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு...

மாநில ஹஜ் ஆய்வாளர்கள் சவுதி அரேபியாவில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர்,நவ.1: பெரம்பலூர் மாவட்டத்தில் 2026 ஆம் ஆண்டு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற, மாநில ஹஜ் ஆய்வாளர்கள் தற்காலிகமாக சவுதி அரேபியாவில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மிருணாளினி தகவல். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: மும்பையில் உள்ள இந்திய ஹஜ்...