பொம்மராஜ்பேட்டையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு
பள்ளிப்பட்டு, செப். 7. பள்ளிப்பட்டு அருகே உள்ள பொம்மராஜ்பேட்டையில் 30க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகின்றது. வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில்,...
மீஞ்சூர் பேரூராட்சி திமுக கவுன்சிலர் ரூ.1 லட்சம் மதிப்பில் விழா மேடை திறப்பு: பொதுமக்கள் பாராட்டு
பொன்னேரி, செப்.7: மீஞ்சூர் பேரூராட்சி திமுக கவுன்சிலர் தனது சொந்த செலவில் ரூ. 1 லட்சம் மதிப்பில் பொதுமக்கள் பயன்பாட்டிக்காக விழா மேடை அமைத்து கொடுத்துள்ளார். இதனை பொதுமக்கள் பாராட்டினர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சி 16வது வார்டுக்கு உட்பட்ட கே.ஜி.எல் பிரபு நகரில் விழா மேடை திறப்பு விழா நேற்றுமுன்தினம்...
பேரூராட்சி கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம்; பருவ மழைக்கு முன்பாக மழைநீர் கால்வாய்களை தூர் வாரவேண்டும்: பல்வேறு தீர்மானம் நிறைவேற்றம்
புழல், செப்.5: செங்குன்றம், நாரவாரிகுப்பம் தேர்வு நிலை பேரூராட்சி கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம், பேரூராட்சி தலைவர் தமிழரசி குமார் தலைமையிலும், பேரூராட்சி துணை தலைவர் விப்ர நாராயணன், நிர்வாக செயல் அலுவலர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையிலும் நேற்று கலைஞர் கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது: 14வது வார்டுக்கு உட்பட்ட அறிஞர் அண்ணா தெருவில்...
திருத்தணி, ஆர்.கே.பேட்டையை சேர்ந்த ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு
திருத்தணி,செப்.5: டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரங்களை பள்ளி கல்வித்துறை சார்பில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில், திருத்தணி அருகே பெரிய கடம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் த.ஜெ.கோகுல்ராஜ், ஆர்.கே.பேட்டை ஒன்றியம் மைலார்வாடா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கே.பாபு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்....
திருவள்ளூர் அருகே கட்டிட பணியின்போது மின்சாரம் பாய்ந்து பெண் பரிதாப பலி
திருவள்ளூர், செப்.5: திருநின்றவூர் அடுத்த நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் முருகன் (40). இவரது, மனைவி சகிலா (35). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கட்டிடப் பணியில் சித்தாள் வேலை செய்து வருகின்ற சகிலா, செவ்வாய்பேட்டை அடுத்த சிறுகடல் பகுதியில் தனியார் நிறுவனம் மூலம் நடைபெற்று வரும் கட்டுமான பணியில் சித்தாள் வேலை செய்து வந்தார்....
வாரத்தில் 5 நாள் சேவையை அமல்படுத்த கோரி வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர், ஆக.29: வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகி, பாரத் ஸ்டேட் வங்கி மண்டல துணை செயலாளர் வேலாயுதம் தலைமை தாங்கினார். வங்கிகளின் தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கணேஷ், ராஜேஷ், மணிகண்டன் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒப்பந்தத்தை மதிக்க வேண்டும். 5 நாள் வங்கி சேவையை அமல்படுத்த வேண்டும், அரசின் ஒருதலைபட்சமான மற்றும்...
கோயில் திருவிழாவில் தகராறை தட்டி கேட்ட வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு
திருவள்ளூர்,ஆக.29: திருவள்ளூர் அடுத்த புன்னப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கமல்(27). இவர் வழக்கறிஞர் தொழில் செய்து வருகிறார். கடந்த ஆடி மாதம் புன்னப்பாக்கம் முத்து மாரியம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்றது. அப்போது, அந்த கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனை வழக்கறிஞர் கமல் தட்டிக் கேட்டுள்ளார். பிறகு இந்த தகராறு குறித்து...
திருத்தணி முருகூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு: காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
திருத்தணி, ஆக.29: திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட முருகூர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சித்தூர் மாநில நெடுஞ்சாலையில் முருகூர் பகுதியில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் நகராட்சி சார்பில் டிராக்டர், டேங்கர் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இருப்பினும் அப்பகுதி...
விரல் ரேகைகளை பதிவு செய்ய ரேஷன் கடைகளில் இன்று சிறப்பு முகாம்
திருவள்ளூர், ஆக. 28: திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயன்பெறும் முன்னுரிமை குடும்ப அட்டைகள் மற்றும் அந்த்யோதயா அன்னை யோஜனா மற்றும் குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரர்களின் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களது விரல் ரேகையை பதிவு செய்யாதவர்கள் தங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள நியாய...


