இந்தியாவில் 9 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் அபாயம்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு
டெல்லி: இந்தியாவில் 9 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது. இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2022ஆம் ஆண்டில் இந்தியாவில் 14.60 லட்சம் பேருக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. நடப்பாண்டில் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு 15.70 லட்சமாக அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு 70,000 குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்புகள்...
பீகார் சட்டப்பேரவை சபாநாயகர் பதவியை கைப்பற்றுவதில் பாஜக-நிதிஷ் கட்சி இடையே மோதல்
பீகார்: பீகார் சட்டப்பேரவை சபாநாயகர் பதவியை கைப்பற்றுவதில் பாஜக-நிதிஷ் கட்சி இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சபாநாயகர் பதவி தொடர்பாக டெல்லியில் இரு கட்சியினர் இடையே நடக்கும் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது. ...
அரக்கோணத்தில் இருந்து கேரளாவுக்கு தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் விரைந்தனர்!
திருவனந்தபுரம்: அரக்கோணத்தில் இருந்து கேரளாவுக்கு தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் விரைந்தனர். சபரிமலையில் ஐயப்ப பக்தர்களால் கூட்ட நெரிசல் ஏற்படுவதால் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள மீட்புக்குழு விரைந்தனர். அரக்கோணத்தில் இருந்து 2 குழுக்களைச் சேர்ந்த 60 வீரர்கள் கேரளாவுக்கு புறப்பட்டுச் சென்றனர். ...
சபரிமலையில் தரிசன டிக்கெட் பதிவு மையம் மாற்றம்
திருவனந்தபுரம்: சபரிமலையில் நெரிசலை குறைக்க உடனடி பதிவு கவுன்ட்டர் நிலக்கல்லுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மண்டல பூஜைக்காக சபரிமலையில் நடை திறக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 18ம் படியில் நீண்ட நேரம் நிற்காமல் உடனுக்குடன் தரிசனம் முடித்து திரும்புமாறு பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ...
எடியூரப்பாவுக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன்
பெங்களூரு: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் எடியூரப்பா, டிசம்பர் 2ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. 2024ல் கல்வி உதவித்தொகை கோரி தன்னை சந்திக்க வந்த சிறுமிக்கு எடியூரப்பா பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. ...
தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநிலங்களின் பார் கவுன்சில் தேர்தலை நடத்தி முடிக்க கெடு விதிப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: நாடு முழுவதும் 20 பார் கவுன்சில் உள்ள நிலையில் 5 வருடங்களுக்கு ஒரு முறை பார் கவுன்சில்களுக்கான தேர்தலை இந்திய பார் கவுன்சில் நடத்த வேண்டும். ஆனால் 16 மாநில பார் கவுன்சிலர்களுக்கு 5 வருட பதவிக்காலம் நிறைவடைந்த பிறகும் இன்னும் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு...
தலைக்கு ரூ.1.5 கோடி அறிவிக்கப்பட்டிருந்த தம்பதி உட்பட மாவோயிஸ்ட் 6 பேர் சுட்டுக் கொலை: ஆந்திராவில் அதிகாலை பரபரப்பு
திருமலை: ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜூ மாவட்டம் மாரேடுமில்லியில் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் உயர்மட்ட மாவோயிஸ்ட் தலைவர்கள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு நேற்று காலை விரைந்த போலீசார் மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். போலீசாரும் அதிரடியாக பதில் தாக்குதல் நடத்தினர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் நடந்த...
இலவச ரேஷன் தகுதியற்ற 2.25 கோடி பேர் நீக்கம்
புதுடெல்லி: தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (என்எப்எஸ்ஏ) ஏழைகளுக்கு ரேஷன் கடைகளில் மாதந்தோறும் 5 கிலோ உணவு தானியம் (கோதுமை அல்லது அரிசி) இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், தகுதியான பயனாளிகள் மட்டும் பயனடைவதை உறுதி செய்ய அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வுகளின் மூலம் கடந்த 4 அல்லது 5 மாதத்தில்...
டெல்லியில் டிசம்பர் முதல் வாரத்தில் எஸ்ஐஆரை எதிர்த்து பிரமாண்ட பேரணி: காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு
புதுடெல்லி: பீகாரைத் தொடர்ந்து 2ம் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்ள அழுத்தம் கொடுக்கப்படுவதால் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பிஎல்ஓக்களும் எஸ்ஐஆர் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்....


