திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களையும் உடனடியாக திறக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியருக்கு சி.வெ.கணேசன் எம்எல்ஏ கடிதம்
திட்டக்குடி, செப். 7: திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நல்லூர் ஒன்றிய பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்து நெல் கொள்முதல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் சி.வெ.கணேசன் எம்எல்ஏ வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர், திட்டக்குடி தொகுதி எம்எல்ஏ சி.வெ.கணேசன் கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி...
பரங்கிப்பேட்டையில் கவரிங் நகையை அடகு வைத்து ஏமாற்ற முயன்றவர் கைது
புவனகிரி, செப். 7: பரங்கிப்பேட்டை மெயின்ரோடு பகுதியை சேர்ந்த வினோத்குமார். அந்த பகுதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று இவரது கடைக்கு சிதம்பரம் பள்ளிப்படை பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (40) என்பவர் நகை அடகு வைக்க வந்துள்ளார். தங்க முலாம் பூசப்பட்ட 8 கிராம் கவரிங் நகையை கொடுத்து பணம் கேட்டுள்ளார்....
பல் வலிக்கு வந்த பெண்ணுக்கு அரியவகை மரபணு நோய் நீர்கட்டிகள்
சிதம்பரம், செப். 5: பல் வலிக்கு வந்த பெண்ணுக்கு அரியவகை மரபணு நோய் நீர்கட்டிகள் இருந்ததால் டாக்டர்கள், வெற்றிகரமாக அகற்றினர். கடலூர் மாவட்டம் முஷ்ணத்தை சேர்ந்த 39 வயது பெண் பல் வலி சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள அரசு பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார். கதிரியக்க பரிசோதனையில் மேல் தாடை மற்றும் கீழ்தாடையில்...
வழக்கை வாபஸ் பெறும்படி எங்களுக்கு மிரட்டல், அச்சுறுத்தல்: சகோதரர் பரபரப்பு பேட்டி
புதுச்சேரியில் தமிழக நிதியமைச்சர் மரியவில்சனின் மூத்த சகோதரர் மரிய குளோத் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: வழக்கை வாபஸ் பெறும்படி 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம், நாங்கள் தத்தெடுத்த குழந்தையை அழைத்துச் சென்று எங்களுக்கு அழுத்தம் கொடுத்தனர். இதையடுத்து, 2023 மார்ச் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனு தாக்கல் செய்தேன். அதன் தொடர்ச்சியாக,...
சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கில் புதுச்சேரி நீதிமன்றத்தில் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் ஆஜர்
புதுச்சேரி, செப். 5: சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கில் புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் தமிழக நிதியமைச்சர் மரியவில்சன் நேற்று ஆஜராகினார். தவெக கட்சி சார்பில் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரிய வில்சன், தற்போது தமிழக நிதியமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம்...
திண்டிவனத்தில் நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் திடீர் சாலை மறியல்
மயிலம், ஆக. 29: ஜக்காம்பேட்டையில் அமைந்துள்ள திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முன்பு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வழக்கறிஞர்கள் சாலையில் அமர்ந்து திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம், கடலூர் ஆகிய இரண்டு மாவட்டத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் விழுப்புரத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தை திருவண்ணாமலைக்கு மாற்ற...
குறிஞ்சிப்பாடி அருகே வாலிபருக்கு கத்திவெட்டு சிறுவன் உள்பட 5 பேர் கைது
வடலூர், ஆக. 29: வீட்டின் அருகில் மது அருந்தி தகராறில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட வாலிபரை கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்ற சிறுவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி குட்டக்கரை தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார்(41). கூலி தொழிலாளியான இவரது வீட்டின் அருகே 26ம் தேதி இரவு அதே...
மகன் இறந்த அதிர்ச்சியில் தாய் தற்கொலை: வடலூர் அருகே சோகம்
வடலூர், ஆக. 29: கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அணுக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மகன் சந்தோஷ்குமார்(39). கூலித் தொழிலாளியான இவருக்கு, 11 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 6 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 27ம் தேதி மதியம் வீட்டிலிருந்து வெளியே சென்ற சந்தோஷ்குமார் வெகு நேரமாகியும் வீடு...
பண்ருட்டி அருகே பரபரப்பு: கல்லூரி மாணவர் தூக்கில் மர்ம சாவு
பண்ருட்டி, ஆக. 28: கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த சீரங்குப்பம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாவை யார் நடத்துவது என்பதில் கடந்த சில நாட்களாக ஊரில் உள்ள இரு தரப்பினர்களுக்கிடையே மோதல் இருந்து வந்தது. வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் இருதரப்பினர்களுக்கு இடையே சமரசம் ஏற்பட்டதால் நேற்று முன்தினம் கோயில் திருவிழா கொடி ஏற்றத்துடன்...


