ராஜபாளையம் அருகே குண்டும் குழியுமான தெருக்கள்: சரிசெய்ய கிராம மக்கள் கோரிக்கை
ராஜபாளையம், செப். 8: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே அய்யன் கொல்லங்கொண்டான் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 800-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அதிகரிக்கும் மக்கள்தொகைக்கு ஏற்ப குடிநீர் வசதியை மேம்படுத்தும் வகையில், கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்குவதற்காகத் தெருக்கள் தோண்டப்பட்டன....
சாத்தூர் பகுதியில் ரூ.1.45 லட்சம் புகையிலை பறிமுதல்
சாத்தூர், செப்.8: சாத்தூர் தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளருக்கு, சின்னகொல்லபட்டி பிள்ளையார் கோவில் அருகே புகையிலை மூட்டைகளை காரில் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் கார்களுக்கு மாற்றி கொண்டு இருப்பதாக நேற்று முன்தினம் இரவு தகவல் வந்தது. இதனால் சம்பவ இடத்திற்கு போலீசாருடன் சென்ற போது, போலீசாரை பார்த்தவுடன் 2 கார்கள், இருசக்கர...
நூதனமான முறையில் ரூ.17 லட்சம் மோசடி: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை
சிவகாசி, செப்.7: சிவகாசி அருகே பூலா ஊரணியை சேர்ந்தவர் கடற்கரை மகன் குருசாமி (44). இவரது செல்போனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரில் இருந்து பேசுவதாக பிரகாஷ் என்பவர் பேசியுள்ளார், டிரேடிங் மூலம் அதிக லாபம் பெறலாம் என்று ஆசை வார்த்தை கூறி குருசாமியிடம் ரூ.4 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் ராகவ்சவுத்ரி...
பட்டாசு தயாரித்தவர் கைது
சிவகாசி, செப்.7: சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி போலீஸ் நிலைய போலீசார், எம்.மேட்டுப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் கண்ணன் (45) என்பவர் அவரது வீட்டில் சட்ட விரோதமாக பட்டாசுகளை தயாரித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை...
குற்றங்களை தடுப்பதற்கு கூடுதல் போலீசாரை நியமிக்க கோரிக்கை
அருப்புக்கோட்டை, செப்.7: அருப்புக்கோட்டை நகர் பகுதியில் திருட்டு வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெற்றால், போலீசார் தான் விசாரணை செய்து குற்றத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்கின்றனர். இதற்காக நகர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. ஆனால் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஒரே ஒரு இன்ஸ்பெக்டர் மட்டுமே பணியில் உள்ளார். அவருக்கு கீழ்...
காரியாபட்டி ஜிஹெச்சில் புதிய சுகாதார வளாகம் திறப்பு
காரியாபட்டி, செப். 5: காரியாபட்டி அரசு மருத்துவமனையில் புதிய சுகாதார வளாகம் கட்டி தர வேண்டும் என நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று பேரூராட்சி நிர்வாகம் சார்பாக ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிய சுகாதார வளாகம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. இதனை பேரூராட்சி தலைவர் செந்தில் திறந்து...
விவசாய நிலங்களில் மண் மாதிரி எடுப்பது எப்படி?.. வேளாண் துறை ஆலோசனை
விருதுநகர், செப். 5: மண் பரிசோதனைக்கு மண் எடுப்பது குறித்து வேளாண் துறையினர் கூறியுள்ளனர். இதுகுறித்து வேளாண் துறையினர் கூறியிருப்பதாவது: மண் மாதிரி ஆய்வுக்கு அரை கிலோ மண் கொடுத்தால் போதும். அந்த அரை கிலோ மண் குறிப்பிட்ட நிலத்திற்கு சரியான மாதிரியாக இருந்தால் தான் நிலத்தின் உண்மையான வளம் தெரியும். மண் மாதிரி...
வெம்பக்கோட்டையில் மழை
ஏழாயிரம்பண்ணை, செப்.5: வெம்பக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விருதுநகர் மாவட்டத்தை பொருத்தவரையில் வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் பருவ மழை பெய்யாததால் நீர் நிலைகள் வறண்டு காணப்படுகிறது....
கொசு ஒழிப்பு பணியாளர்கள் பணி வழங்க கோரி தர்ணா போராட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர், ஆக.29: ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணியில் உள்ள ஒப்பந்த பணியாளர்கள் பணி வழங்க கோரி, நகராட்சி அலுவலகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 2013ம் ஆண்டு முதல் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் தினக்கூலி அடிப்படையில் 50 பேர் பணியாற்றி வருகின்றனர்....


