திருவாடானையில் நாளை மின் நிறுத்தம்
திருவாடானை, செப்.8: திருவாடானை மற்றும் நகரிகாத்தான் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருவாடானை துணை மின் நிலையம் மற்றும் நகரிகாத்தான் துணை மின்நிலைய பகுதிகளான திருவாடானை, சி.கே.மங்கலம், பாண்டுகுடி, நகரிகாத்தான், வெள்ளையபுரம், மங்கலக்குடி,...
பரமக்குடி நகராட்சி பகுதியில் சாலையில் கழிவுநீரால் நோய் ஆபத்து
ராமநாதபுரம், செப்.8: பரமக்குடி நகராட்சி 2வது புதுநகர் பகுதி மக்கள், சாலையில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடால் அவதிப்படுவதாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் சிவகுரு பிரபாகரனிடம் மனு அளித்தனர். அப்பகுதி மக்கள் கூறியதாவது: நகராட்சி பகுதியான புதுநகரில் 600 குடும்பங்கள் வசிக்கின்றனர். இதில் கிழக்கு பகுதியில் மட்டும் 300 குடும்பங்கள் வசிக்கிறோம். இப்பகுதியில்...
சுற்றுலா படகு இயக்க நடைமேடை அமைக்கும் பணி மந்தம்: சவாரி செல்வதில் சிக்கல்
மண்டபம், செப்.7: மண்டபம் தென் கடலோரப் பகுதியில் சுற்றுலா படகு சவாரி இயக்க அமைக்கப்பட்டு வரும் நடைமேடை பணிகள் நிறுத்தப்பட்டு பல மாதங்களாகியதால், சுற்றுலாப்படகு இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மண்டபம் பேரூராட்சிக்கு உட்பட்ட தென்கடலோரப் பகுதியில் அமைந்துள்ள பேரூராட்சி கடற்கரை பூங்கா அருகே சுற்றுலாப் படகு இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது....
கீழக்கரை பகுதியில் வாகனம் செல்ல தடுமாறும் சாலை: நடவடிக்கை எடுப்பது எப்போது?
கீழக்கரை, செப்.7: கீழக்கரை நகராட்சி 7, 9 வார்டு வடக்குத்தெரு சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. இச்சாலையில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் தினமும் வந்து செல்கின்றன. இச்சாலை கடந்த சில மாதங்களாக பராமரிப்பின்றி சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகின்றன. இதனால் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் அடிக்கடி...
குடிநீருக்காக அவதிப்படும் மக்கள்
திருவாடானை, செப்.7: திருவாடானை அருகே சீந்திவயல் மற்றும் கீழக்கோட்டை பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு குஞ்சங்குளம் ஊராட்சி சார்பில் வெளியங்குடி கண்மாய் பகுதியின் அருகில் போர்வெல் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த...
ராமநாதபுரத்தில் அரசு மேல்நிலை பள்ளி அமைக்க வேண்டும்: அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்
ராமநாதபுரம்.செப்.5: ராமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கூட்டத்தில் இருபாலர் படிக்கும் அளவில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் இயற்றப்பட்டது. ராமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் விஜயராமலிங்கம் தலைமை வகித்தார். செயலாளர் அப்துல் நஜ்முதீன் முன்னிலை...
கருவேல மரங்கள் அகற்றும் பணி: ஓய்வு நீதிபதி ஆய்வு
ராமநாதபுரம், செப்.5: ராமநாதபுரம், கமுதி, கடலாடி வட்டங்களில் உள்ள கண்மாய்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை ஓய்வு பெற்ற நீதிபதி செல்வம் ஆய்வு செய்தார். ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உயர்நீதிமன்றற வழிகாட்டுதலின்படி சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி செல்வம் ஆய்வு...
நலவாரியத்தில் பதிவு செய்ய முகாம்
தொண்டி, செப்.5: தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவையின் கோரிக்கையை ஏற்று, ராமநாதபுரம் கலெக்டர் உத்தரவின்படி, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் தொண்டி நேற்று நடைபெற்றது. முகாமிற்கு தொண்டி 14வது வார்டு கவுன்சிலர் சமீமா பானு தலைமை வகித்தார். ஜென்னதுல் பிர்தவுஸ் வரவேற்றார்.தமுமுக சாதிக்பாட்சா, தெற்குத்...
கமுதியில் இன்று மின் நிறுத்தம்
கமுதி, ஆக.29: கமுதி உபமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு நடைபெற உள்ளதால், இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. மின் தடை பகுதி: கமுதி, அபிராமம், முதுகுளத்தூர், பார்த்திபனூர், பாக்குவெட்டி, செங்கப்படை, பேரையூர், அ.தரைக்குடி, த.புனவாசல், மண்டலமாணிக்கம் மற்றும் அதன்...


