இலங்கை சிறையில் உள்ள 30 ராமேஸ்வரம் மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்தது நீதிமன்றம்!
யாழ்ப்பாணம் : இலங்கை சிறையில் உள்ள 30 ராமேஸ்வரம் மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்தது நீதிமன்றம். அபராதத் தொகையை செலுத்தினால் உடனே விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அபராதத் தொகையை செலுத்தாவிடில் 6 மாதம் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ...
பிலிப்பைன்சில் புயல் பலி 85 ஆக உயர்வு
மணிலா: பசிபிக் பெருங்கடலில் உருவான குறைந்தழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு கால்மேகி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் பிலிப்பைன்ஸ் நகரை நோக்கி நகர்ந்தது. அங்குள்ள பாலவான் தீவு அருகே மணிக்கு 20 கி.மீ வேகத்தில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 220 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசியதுடன் இடி, மின்னலுடன் கனமழை...
கிறிஸ்தவர்கள் படுகொலையா? - நைஜீரியா விளக்கம்
நைஜர் : கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்படுவதாக குற்றம்சாட்டி, நைஜீரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பேன் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி வருவதற்கு அந்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. "தீவிரவாதத்தை எதிர்த்துதான் நாங்கள் போராடுகிறோம், கிறிஸ்தவர்களை எதிர்த்து அல்ல. நைஜீரியாவின் இறையாண்மை உறுதி செய்யப்படும்வரை, தீவிரவாதத்தை எதிர்க்க அமெரிக்காவின் உதவியை வரவேற்போம்,” எனவும் நைஜீரியா கூறியுள்ளது....
தனது போட்டோ மூலம் மோசடி: பிரேசில் மாடல் அதிர்ச்சி
பிரேசில்: ஹரியானாவில் தனது புகைப்படத்தை பயன்படுத்தி தேர்தல் மோசடி நடந்தது குறித்து பிரேசில் மாடல் லாரிசா அதிர்ச்சி அடைந்துள்ளாரம். இது எந்த மாதிரியான செயல் என்று வீடியோ வெளியிட்டு இந்திய அரசியல்வாதிகளுக்கு லாரிசா கேள்வி எழுப்பி உள்ளார். ஹரியானா வாக்காளர் பட்டியலில் பிரேசில் மாடல் லாரிசாவின் புகைப்படத்தை பயன்படுத்தி போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். லாரிசா புகைப்படத்தை...
மெக்சிகோ அதிபருக்கு முத்தம் தந்தவர் கைது
மெக்சிகோ : மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாமுக்கு பொது இடத்தில் திடீரென முத்தம் தந்த நபரை போலீசார் கைது செய்தனர். மெக்சிகோவில் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது கிளாடியாவின் பின்னால் வந்த நபர் திடீரென முத்தமிட்டார். 63 வயதான கிளாடியா ஷீன்பாம் பார்டோ, கடந்த ஆண்டு மெக்சிகோ அதிபராக பதவியேற்றார். ...
அமெரிக்காவுக்கு பதிலடியாக ரஷ்யாவும் அணு ஆயுத சோதனைகளை நடத்தும்: புடின் எச்சரிக்கை
மாஸ்கோ: அமெரிக்காவுக்கு பதிலடியாக ரஷ்யாவும் அணு ஆயுத சோதனைகளை நடத்தும் என புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். எந்த நாட்டிடமும் இல்லாத வகையில் அணுசக்தியில் இயங்கும் புரேவெஸ்ட்னிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துப் பார்த்ததாக புதின் கடந்த மாதம் 26-ஆம் தேதி அறிவித்தார். அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக் கூடிய அந்த ஏவுகணை, எத்தனை ஆயிரம் கி.மீ....
அமெரிக்காவில் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி 7 பேர் பலி: 11 பேர் காயம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் யுபிஎஸ் சரக்கு விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள லூயிஸ்வில் முஹம்மது அலி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, ஹவாய் மாகாணத்தின் ஹொனலூலு நகருக்கு யுபிஎஸ் நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று நேற்று முன்தினம் உள்ளூர்...
அதிபர் டிரம்பின் கடும் எதிர்ப்பை மீறி நியூயார்க் நகர மேயராக இந்திய வம்சாவளி முஸ்லிம் ஜோரன் மம்தானி வென்று சாதனை
நியூயார்க்: அமெரிக்காவில் நியூயார்க், சின்சினாட்டி, அட்லான்டா, டெட்ராய்ட், ஜெர்சி, பிட்ஸ்பர்க், மின்னியாபோலிஸ் மற்றும் பப்பலோ ஆகிய நகரங்களுக்கான மேயர் தேர்தல் கடந்த செவ்வாய்கிழமை நடந்தது. வாக்குப்பதிவு இரவு 9 மணிக்கு முடிந்ததைத் தொடர்ந்து, பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முன்தினம் அதிகாலை முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், அமெரிக்காவின் முக்கிய பொருளாதார நகரமான நியூயார்கின் முடிவு பலராலும்...
பிலிப்பைன்சில் கல்மேகி புயலுக்கு 66 பேர் பலி: 26 பேர் மாயம்
மணிலா: மத்திய பிலிப்பைன்சில் வீசிய கல்மேகி புயலுக்கு 66 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 26 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாயமாகி உள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டை கல்மேகி என்ற சூறாவளி தாக்கியது. இதன் காரணமாக பல்வேறு மாகாணங்களிலும் கனமழை பெய்தது. இந்நிலையில் புயல், மழை வெள்ளத்தில் சிக்கி ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக செபு மாகாணத்தில்...
