மண்ணுக்குள் புதைக்கப்பட்ட பூஜை பெட்டி!

உடல் நலக்குறைவு உத்தராதி மடத்தின் வழிவந்த ஒன்பதாவது பீடாதிபதியான மகான் ஸ்ரீ ராமச்சந்திர தீர்த்தர், துவைத வேதாந்தத்தினை போதிப்பதில் மிக சிறந்தவராக திகழ்ந்தவர். இவர், கர்நாடக மாநிலத்தில் இருக்கக்கூடிய ஸ்ரீ ரங்கப்பட்டினத்திலும், அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும், மத்வ சித்தாந்தத்தை பரப்புவதில், நீண்ட காலம் அங்கயே தங்கியிருந்தார். அப்போது, ராமச்சந்திரதீர்த்தருக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், தான்...

உள்ள(த்)தைச் சொல்கிறோம்

இவ்விதழ் மிகவும் அருமையாக இருந்தது. குறிப்பாக, ஆடி மாத திருவிழாக்கள் திருமால் ஆலயங்களில் நடைபெறுவதை கண்முன் நிறுத்தி, இதயம் நிறைய செய்தது. மேலும், தெளிவு பெறுவோம் பகுதி, பல வினாக்களுக்கு விடை அளித்து தீர்வு கிடைக்க துணை நிற்பது இதழுக்கு ஈடு சேர்ப்பதாகும். மேலும், இதழில் A to Z வரை அனைத்து பக்க தகவல்கலும்...

சுந்தர மகாலட்சுமியின் அபூர்வ ஆறுவிரல் திருவடி தரிசனம்

செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள அரசர்கோயில் எனும் இடத்தில் ஆலயம் கொண்டுள்ள சுந்தரமகாலட்சுமியின் வலது பாதத்தில் ஆறு விரல்கள் இருப்பது தனி அதிசயமாகக் கொண்டாடப்படுகிறது. ஒரு முறை ஜனக மகாராஜாவும் பெருமாளும் இத்தலத்தில் சேர்ந்திருக்க நேரிட்டதால் இத்தலம் அரசர்கோயில் என்றானதாம். நான்முகனுக்கு ஒரு முறை சாபம் ஏற்பட்டது. கலங்கிய நான்முகன் சாபவிமோசனத்தை நாடி முனிவர்களிடம் ஆலோசனை கேட்டபோது...

இந்த வார விசேஷங்கள்

15.8.2026 - சனி அரவிந்தர் தினம் “மனிதன் இப்போது இருப்பதைவிட உயர்ந்த நிலையை அடையப் பிறந்தவன்.” என்று சொன்ன அரவிந்தர், 1872 - ஆகஸ்ட் 15 அன்று கொல்கத்தாவில் பிறந்தார். விடுதலைப் போராட்ட வீரர், தத்துவ ஞானி, கவிஞர், யோகி, கல்வியாளர் எனப் பல துறைகளில் சிறந்து விளங்கினார். பின்னர், புதுச்சேரியில் ஆன்மிக வாழ்வை மேற்கொண்டு...

குற்றங்களை களையும் குற்றம் பொறுத்தநாதர்

ஓரு மனிதன் புரிந்த பாவங்கள் அவனை துன்புறுத்தினாலும், அவன் செய்த புண்ணியம் அவனைக் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும். அத்தகைய பாவங்களைக் கழித்து, குற்ற எண்ணங்களை நீக்கி, நல்லருள் புரியும் திருத்தலமாகத் திகழ்கிறது சு.ஆடுதுறை. பொன்னி நதியென்னும் காவிரியை விடவும் புண்ணியம் மிகுந்த நீவாநதி எனப்படும் வடவெள்ளாற்றின் தென்கரை மீது அமைந்துள்ளது இந்த ஆடுதுறை. திருஞானசம்பந்தர் தனது...

ராமருக்குக் காவலாய் நிற்கும் வியாசராஜர் அனுமன்!

கும்பகோணம் ஸ்ரீ ராஜகோபாலசுவாமி கோயில் சென்ற இதழ் தொடர்ச்சி... திருவாசியுடன் அமைந்த அனுமன் கும்பகோணம் ஸ்ரீ ராஜகோபாலசுவாமி கோயிலின் அனுமனுக்கு மேலும் சிறப்பு என்னவென்றால், ஒரே சிலா ரூபத்தில், அனுமனுக்கு மேலே ``அஸ்மானகிரி’’ என்று சொல்லக்கூடிய ``திருவாசி’’ அமைந்திருப்பதுதான். திருவாசி என்னும் பெயரை இன்னும் எளிமையாக சொல்லவேண்டும் என்றால், ``பிரபை’’ என்று சொல்லலாம். மிக தத்ரூபமாக...

ஒரு நபரின் பிறந்த தேதி சொத்து வாங்குவதை பாதிக்கிறதா?

?கட்டுப்பாட்டுடன் சிறுக சிறுக தேவைக்கேற்றவாறு செலவழித்தாலும் திடீரென உண்டாகும் எதிர்பாராத மருத்துவ செலவுகளால் கடன் வாங்கி அவதிப்பட நேரிடுகிறதே, இதுவும் கர்ம வினைதானா? இது தீர வழி சொல்லுங்கள். - சங்கீத சரவணன், மயிலாடுதுறை. அனுபவித்து தீர்ப்பதுதான் வழி. அதனை எதிர்கொள்ளும் மனோபலத்தையும் உடல் பலத்தையும் அடியேனுக்குத் தந்து துணைநிற்க வேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டுவதே...

ஆண்டவனையே ஆட்கொண்ட ஆண்டாள்!

``திருவாடிப்பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே ஒரு நூற்று நாற்பத்தி மூன்றுரைத்தாள் வாழியே உயரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே வண்புதுவை நகர்க் கோதை மலர்ப்பதங்கள் வாழியே’’ - என்று திருவாடிப்பூரத்தன்று இந்த உலகில் நாம் எல்லோரும்...

ஆசைகளை நிறைவேற்றித் தரும் ஆடிப்பூரம்

பூரம் நட்சத்திரம் (ஆடிப்பூரம்) ஆண்டாள் அவதரித்த திருநட்சத்திரம் என்பதால் வைணவர்களுக்கு மிகவும் முக்கியமான நாள் ஆடிப்பூரம். ஆண்டாள் திருக்கல்யாண உற்சவங்கள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி பாராயணம் போன்றவை நடைபெறும். அம்மன் கோயில்களிலும் ஆடிப்பூரம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருவாடிப் பூரத்தின் பெருமை இந்த ஆண்டு திருவாடிப்பூரம் 14.08.2026, வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. குறிப்பிடத்தக்க வகையில், அன்றே ஆடி...

திருமாலின் நித்திய சேவகர்

*திருப்பதியில் உள்ள ஏழுமலைகளுள் ஒன்று ``கருடாசலம்’’ எனப் போற்றப் படுகிறது. *எந்த ஒரு முக்கியமான செயலைத் தொடங்கும்போதும் கருடனை தியானித்து கருட துதியைக் கூறினால் காரியசித்தி தரும் எனக் கூறப்பட்டுள்ளது. *சுவாமி தேசிகர் கருடனை உபாசனை செய்தல் மனநோய், வாய்வுநோய், இதயநோய், தீராத விஷ நோய்கள் தீரும் என தன் ``கருடதண்டகத்தில்’’ அருளியுள்ளார். *கருடன் அருள்...