ஒளிப்பதிவாளரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வேலூர் கோர்ட் தீர்ப்பு தனியார் தொலைக்காட்சி
வேலூர், நவ.7: வேலூரில் தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூர் மகிளா கோர்ட் உத்தரவிட்டது. வேலூர் கொசப்பேட்டை எஸ்.எஸ்.கே.மானியம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார்(35). இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் அவர் வசிக்கும் பகுதியில் கஞ்சா விற்பனை புகார் தொடர்பாக போலீசார் அடிக்கடி சோதனை செய்து...
ஓடும் அரசு பேருந்தில் ஆசிரியைக்கு பாலியல் சீண்டல் முதியவருக்கு பயணிகள் தர்ம அடி பள்ளிகொண்டா அருகே பரபரப்பு
பள்ளிகொண்டா, நவ.7: குடியாத்தத்திலிருந்து ஒடுகத்தூர் நோக்கி சென்ற அரசு டவுன் பஸ்சில் ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை பிடித்து சக பயணிகள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், ஒடுகத்தூரிலிருந்து குடியாத்தம் வரை அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வழியாக இந்த ஒரு அரசு பேருந்து மட்டுமே...
மாவட்ட வருவாய் அலுவலர்கள், தனித்துனை ஆட்சியர்கள் பணியிடம் மாற்றம் வேலூர், திருவண்ணாமலை உட்பட
வேலூர், நவ.6: வேலூர், திருவண்ணாமலை உட்பட மாவட்ட வருவாய் அலுவலர்கள், தனித்துணை ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து அரசு முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, கோயம்புத்தூர் ஒழுங்கு நடவடிக்கை தீர்ப்பாயம் ஆணையராகவும், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் (டான்சிட்கோ) பொதுமேலாளர் சிவசுப்பிரமணியன், வேலூர் மாவட்ட வருவாய் அலுவலராகவும், தமிழ்நாடு வன்னிய...
பணம் கேட்ட தகராறில் கறிக்கடைக்காரருக்கு வெட்டு கறி வாங்கியதற்கு
அணைக்கட்டு, நவ. 6:அணைக்கட்டு தாலுகா வேலங்காடு பனந்தோப்புபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (52). இவர் கிராமத்தில் இருந்து கோட்டையூர் செல்லும் சாலையில் கறி இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவருடைய கடையில் ஊனை பள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பரதன் என்பவர் அடிக்கடி கறி வாங்கி செல்வது வழக்கம். இதில் அவர்களுக்குள் கறி வாங்குவதில் பணம் கொடுக்கல்...
வேலை செய்த கடையில் பணம் திருடிய வாலிபருக்கு சிறை வேலூர் கோர்ட் தீர்ப்பு
வேலூர், நவ.6: வேலை செய்த கடையில் பணம் திருடிய வாலிபருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து வேலூர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. வேலூர் ஓல்டு டவுனை சேர்ந்தவர் வினோத்(29). இவர் சுண்ணாம்புக்காரர் தெருவில் உள்ள பிரின்டிங் பிரஸ்ஸில் கடந்தாண்டு வேலை செய்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 22ம் தேதி, இரவு கடையில் இருந்த ரூ.1.30...
கிணற்றில் தவறி விழுந்து பொறியியல் பட்டதாரி பலி
சின்னசேலம், நவ. 6: சின்னசேலம் அருகே வாசுதேவனூர் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கருணாகரன்(56). விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவரது மனைவி ஜெயந்தி(46). இவர்களுக்கு வசந்த்(26), நர்மதா(23) ஆகிய இரு பிள்ளைகள் இருந்தனர். வசந்த் பொறியியல் படித்து பட்டம் பெற்றுள்ளார். மேலும் தற்போது விவசாய வேலையில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் வசந்த் கடந்த 4ந்தேதி இரவு...
கேரள வாலிபரிடம் செல்போன் பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை வேலூர் கோர்ட் தீர்ப்பு
வேலூர், நவ.5: கேளர வாலிபரிடம் செல்போன் பறித்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து வேலூர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கேரளா மாவட்டம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆன்சிவர்கீஸ்(24). இவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் தங்கி நர்சிங் படித்து வந்தார். கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி ஆற்காடு சாலையில்...
மலைப்பாதை வழியாக காரில் கஞ்சா கடத்திய இருவர் கைது கார் பறிமுதல் ஆந்திராவில் இருந்து அரவட்லா
பேரணாம்பட்டு,நவ.5: ஆந்திராவில் இருந்து அரவட்லா மலைப்பாதை வழியாக காரில் கஞ்சா கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா மலைப்பகுதி ஏழு வளைவுகள் கொண்டு அமைந்துள்ளது. இந்த மலைப்பாதையின் வழியாக ஆந்திர மாநிலத்தில் இருந்து காரில் கஞ்சா கடத்துவதாக குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது....
பொய்கை மாட்டுச்சந்தையில் ரூ.75 லட்சத்துக்கு வர்த்தகம்
வேலூர், நவ.5: பொய்கை மாட்டுச்சந்தையில் நேற்று ஒட்டுமொத்தமாக ரூ.75 லட்சத்துக்கு நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். வேலூர் அடுத்த பொய்கையில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மாட்டுச்சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணா மலை மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் விற்பனைக்காக மாடுகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன....

