மன்னார்குடி சார்பு நீதிமன்றத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்
மன்னார்குடி, நவ. 13: மன்னார்குடி சார்பு நீதிமன்ற வளாகத்தில் இலவச கண் பரி சோதனை முகாம் நடந்தது. வட்ட சட்ட பணிகள் குழு, தஞ்சை தனியார் கண் மருத்துவமனை இணைந்து மன்னார்குடி சார்பு நீதிமன்றத்தில் நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் நேற்று நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக வட்ட சட்ட பணிகள் குழு தலைவர்,...
கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் சாலை மறியல்
திருவாரூர், நவ. 13: கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் 90 பேர் கைது செய்யப்பட்டனர். அலுவலக உதவியாளருக்கு இணையான கிராம உதவியாளர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.15 ஆயிரத்து 700 வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் கிராம உதவியாளர்களுக்கு கல்வி தகுதி அடிப்படையில் பணி...
கும்பகோணம் மத்திய கூட்டுறவு திருத்துறைப்பூண்டி வங்கி கிளை இடமாற்றம்
திருத்துறைப்பூண்டி, நவ.12: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வரதராஜ பெருமாள் கோயிலில் 16 அடி உயர ஆஞ்சநேயர் சாமி உள்ளது. இந்த கோயில் எதிர்புறம் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி திருத்துறைப்பூண்டி கிளை இயங்கி வந்தது. இந்த வங்கில் விவசாயிகள்,வர்த்தகர்கள் என ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்து உள்ளனர். இந்நிலையில்...
கட்டிமேடு அரசு பள்ளியில் சர்வதேச அறிவியல் தின கருத்தரங்கம்
திருத்துறைப்பூண்டி, நவ. 12: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச அறிவியல் தினம் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் மு.ச. பாலு தலைமை வகித்து பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10ம் தேதி சர்வதேச அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. சமூகத்தில் அறிவியலின் முக்கிய பங்கு எடுத்துரைக்கவும்,...
பேச மறுத்த காதலியை வெட்டிய வாலிபர் கைது
மன்னார்குடி, நவ. 12: கூத்தாநல்லூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 19 வயதான இளம் பெண். இவர் கல்லூரி படிப்பை பாதியில் கைவிட்டு வீட் டில் இருந்து வந்தார், இவரும், பானிபூரி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த அபிஷேக் (20) என்ற வாலிபரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காத லித்து வந்தாக கூறப்படுகிறது. கருத்து...
பைக்குகள் மோதி ஒருவர் படுகாயம்
திருவாரூர், நவ. 11:திருவாரூர் பெருங்குடி கீழப்படுகை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(40). இவர் தனது ைபக்கில் திருவாரூர் ரயில் நிலையம் அருகே சென்றுக்கொண்டிருந்தார். அப்போது எதிரே கொடிக்கால்பாளையம் சேர்ந்த முகமது ஆதில்(22) என்பவர் ஓட்டிவந்த ைபக் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் சுரேசுக்கு காலில் காயம் ஏற்பட்டது. அவர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு...
வடபாதிமங்கலத்தில் வாலிபர் தற்கொலை போலீசார் விசாரணை
மன்னார்குடி, நவ. 11: திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் காவல் சரகத்திற்குட்பட்ட சோலாட்சி குலமாணிக்கம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம்(45). விவசாய கூலித்தொழிலாளி. இவரது மகன் கெளசிக்(21). திருமணமாகாதவர். மினிவேன் டிரைவராக வேலை செய்து வந்த கெளசிக்கு மது அருந்தும் பழக் கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதனால், அவர் அடிக்கடி வீட்டிற்கு மது அருந்திவிட்டு வருவதை...
ஆண்டாங்காரை கிராமத்தில் சேதமடைந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி
திருத்துறைப்பூண்டி, நவ. 11: திருத்துறைப்பூண்டி அருகே ஆண்டாங்காரை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி இப்பகுதி குடியிருப்புகளின் குடிநீர் தேவைக்காக கட்டப்பட்டது. தற்போது மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் நான்கு தூண்களும் சேதம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக...
மனவளக்கலை அறிவுத்திருக்கோவிலில் மாணவர்களுக்கு காயகல்ப பயிற்சி
திருத்துறைப்பூண்டி,நவ.7: மனவளக்கலை அறிவுத்திருக்கோவிலில் மாணவர்களுக்கு காயகல்ப பயிற்சி நடந்தது. திருத்துறைப்பூண்டி மனவளக்கலை அறிவுத்திருக்கோவிலில் பிரைட் பீப்பிள் சமுதாயக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு காயகல்ப பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியை தஞ்சை மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் தலைவர் பேராசிரியர் பூர்ணச்சந்திரன் நடத்தினார். திருத்துறைப்பூண்டி மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் தலைவர் சுதந்திர மணி தலைமை வகித்தார். பிரைட் பீப்பிள் சமுதாயக்...


