சரஸ்வதி பூஜையும் விஜயதசமியும்
சரஸ்வதி பூஜை 1-10-2025 விஜயதசமி 2-10-2025 1. முன்னுரை நவராத்திரி உற்சவம் 10 நாட்கள் நடைபெறுகிறது. பத்தாம் நாள் தசமி. வெற்றியைத் தரும் விஜய தசமி. அதற்கு முதல் நாள் சரஸ்வதி பூஜை. கல்வி தேவதைக்கான விழா. வீரத்திற்கு மூன்று நாட்களும், செல்வத்திற்கு மூன்று நாட்களும், கல்விக்கு மூன்று நாட்களும், என ஒன்பது நாட்கள் நடைபெறும்...
சப்தகன்னியர் தரிசனம்
* கன்னியாகுமரி, திருவட்டாறுக்கு அருகே உள்ள அருவிக்கரையில் சப்தகன்னியர்களும் கருவறையில் பிரதான தெய்வங்களாக வீற்றிருக்கிறார்கள். தேவியரின் தேவியின் இருபுறமும் விநாயகரையும், வீரபத்திரரையும் காணலாம். * நாகை, தரங்கம்பாடி செம்பனார்கோயிலில் உள்ளது சுவர்ணபுரீஸ்வரர் ஆலயம். இங்கு, ஒன்பது இலையில் மங்கலப்பொருட்களை வைத்து சப்தகன்னியரை வணங்கி, ஏழு இலைகளை தானமாகவும், ஒரு இலையை பூஜை செய்பவருக்கும் மற்றுமொரு இலையை...
கொல்கத்தா காளி
(காளியின் பாதி உருவம் கொல்கத்தாவில், மறுபாதி உருவம் அஸ்ஸாமில்!) கொல்கத்தா என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது காளி கோயில் தான். கொல்கத்தாவின் நகர தேவதை காளி.தெற்கு கொல்கத்தாவில் உள்ள காளி கட்டத்தில் ஜன நெருக்கடி அதிகமாக உள்ள பகுதியில் அமைந்திருக்கும். இந்தப் புராதனக் காளிக்கோயில் 1809-இல் சீரமைக்கப்பட்டு விரிவான ஆலயமாக அமைக்கப்பட்டது. வடநாட்டுப் பாணியில்...
அரசலீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
வாமதேவர் என்ற முனிவர் தான் பெற்றிருந்த சாபத்திற்கு விமோச்சனம் தேடி பல தலங்களுக்கு சென்று சிவபெருமானை வணங்கி வந்தார். அவர் இந்த ஒழுந்தியாபட்டு வந்தபோது அரச மரத்திற்கு கிழே அமர்ந்து சற்று நேரம் ஒய்வெடுத்தார். குளிர்ச்சி தரும் இந்த அரசமரத்தடி நமக்கே இவ்வளவு சுகமாக இருக்கிறதே இங்கு சிவபெருமான் இருந்தால் எப்படி இருக்கும் என நினைத்துக்...
மகாபரணியில் மகிமைபுரிந்த அக்னீஸ்வரர்
பரணி நட்சத்திரக்காரர்கள் தம் வாழ்நாளில் அடிக்கடிச்சென்று விசேஷ வழிபாடு செய்யவேண்டிய தலம் நாகப்பட்டினம் நல்லாடை அக்னீஸ்வரர் திருக்கோயிலாகும். இத்தல இறைவன் மேற்கு நோக்கியும் அம்மன் சுந்தர நாயகி தெற்கு நோக்கியும் அருட்பாலிக்கிறார்கள். சுவாமி அக்னி சொரூபமாக உள்ளதால் அதனை தணிக்கும் வகையில் மூலஸ்தானத்தில் உள்ள லிங்கத்தை சுற்றி தண்ணீர் ஊற்றப்பட்டு இருப்பது தலத்தின் முக்கிய சிறப்பம்சமாகும்....
நலம் தரும் நவராத்திரியின் அதிசய வழிபாடுகள்!
நாடெங்கும் நவராத்திரி விழா கோலாகலமாகவும் விமரிசையாகவும் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலும் முப்பெருந்தேவியரான லட்சுமி, சரஸ்வதி, துர்க்கையைப் போற்றி வழிபடுகிறார்கள். ஆனால், மும்பை போன்ற பகுதிகளில், லட்சுமியைச் சிறப்பித்தும், கேரளாவில் பல பகுதிகளில் சரஸ்வதியைப் போற்றியும், மேற்கு வங்காளத்தில் துர்க்கைக்கு முக்கியத்துவம் அளித்தும் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் வித்தியாசமாகக் கொண்டாடப்படும். நான்கு நவராத்திரிகள் பற்றிய...
மஹாளயபட்ச அமாவாசையின் மகிமை
உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் என்றாவது ஒரு நாள் இறந்துதான் ஆக வேண்டும். இது இயற்கை, தவிர்க்க முடியாதது. யாருக்கும் விதி விலக்கு கிடையாது. அப்படி இறந்தவர்கள் ‘பித்ரு லோகத்தில்’ வசிப்பதாக ஐதீகம். அமாவாசை நாட்களில் தர்ப்பணமும் அவர்கள் இறந்த மாதத்தில் வரும் திதி நாளில் சிரார்த்தம் செய்து எள்ளும் ஜலமுமாக மந்திரங்களைச் சொல்லி செய்தால் பித்ருக்கள்...
புட்டுக்கு நோய் தீர்க்கும் பிட்டாபுரத்தி அம்மன்!
அகிம்ஸா ஆலயங்களான சிவன், விஷ்ணு கோயில்கள் ஏற்படுவதற்கு முன் பாரத தேசமெங்கும் முக்கியமான ஊர்களில் எல்லாம் இம்சை-ரத்த பலிகளை அடிப்படையாகக் கொண்ட காளி கோயில்களே சமூகத்தில் பேராதிக்கம் செலுத்தி வந்தன.சிவமதம் எனும் சைவ சமயம் தோன்றி காளி மதத்தைக் கட்டுக்குள் வைத்தது. இதையே சிவனுடைய ஊர்த்துவத் தாண்டவம், காளியின் தலை குனிவு என்று கற்பனையாகச் சொல்லப்பட்டது....
மழலை வரமருளும் பத்மநாப பெருமாள்
அனந்தகோடி கல்யாண குணங்கள் கொண்ட பரம்பொருளாகிய மஹாவிஷ்ணுவை, ஆழ்வார்களும், மகான்களும், ரிஷிகளும் நேரில் கண்டுகளித்தனர். நம்மைப் போன்றவர்கள் வணங்கி அருள் பெற இப்பூவுலகில் ஸ்ரீமன் நாராயணன் சில தலங்களில் அர்ச்சாரூபமாய் விளங்கி சேவை சாதிக்கின்றார். அதில் செந்தலை எனும் இத்தலமும் ஒன்று. கிருதயுகத்தில் பிரம்மாவும், துவாபரயுக ரிஷிகளும், பிருகத்தச்சனும், கலியுகத்தில் சந்திரலேகை என்ற தேவதாசியும் பூஜித்துள்ளனர்....