பஞ்சபூத ஸ்தலங்களுக்கு உரிய பரிகாரங்கள்
உலக இயக்கத்திற்கு காரணமே பஞ்ச பூதங்கள் என்று சொல்லக்கூடிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்கள்தான். இவ்வைந்து பூதங்களை தமிழின் உயிர் எழுத்துக்கள் வடிவம் கொண்ட வல்லூறு (Falcon), ஆந்தை, காகம், கோழி, மயில் ஆகிய ஐந்து பட்சிகளுக்கு பிரித்து கொடுத்தவர் ``காகபுஜண்டர்’’ என்ற சித்தர்தான். காகபுஜண்டர் இறையருளாலும், தம் ஞான...
விரைந்து கடன் தீர எளிய பரிகாரங்கள்
தற்போது பெரும்பாலான மக்களுக்கு தலையாய பிரச்னையே கடன்தான். ‘‘கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’’ - என்ற வரிகளை கம்பர் தனது கம்பராமாயணத்தில் குறிப்பிட்டிருப்பதிலிருந்து கடன் பிரச்னை உள்ளோரின் துயர மன நிலையை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. கடன் பிரச்னை, கந்து வட்டி கொடுமையால் நாட்டில் தனது உயிரை மாய்த்தோர் ஏராளம்....
நீத்தார் கடன் நிறைவேற்றும் தலங்கள்
*ராமேஸ்வரத்தில் 64 தீர்த்தக் கட்டங்களில் ஒன்றான அக்னி தீர்த்தம் எனப்படும் கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் சகல பாவங்களும் நீங்கும். *திருச்சியில் ரங்கநாதர் பள்ளி கொண்டுள்ள ரங்கத்தில் காவிரி நதிக் கரையில் சாஸ்திர விதிப்படி தர்ப்பணம் செய்தால் அபரிமிதமான பலன்கள் கிட்டும். *பவானி சங்கமேஸ்வரர் ஆலயம், கூடுதுறையில், பக்தர்கள் முன்னோர்களுக்கு சிராத்தம் கொடுத்து மங்கலங்கள்...
அன்னமிட்டவர்களுக்கு நீங்கும் பிரச்னைகள்
பல வருடங்களுக்கு முன்பு, காஞ்சி மகா ஸ்வாமிகள் கலவையில் தங்கியிந்த நேரம். அன்று ஞாயிற்றுக்கிழமை. தரிசனத்துக்கு ஏகக் கூட்டம். ஒவ்வொருவராக நமஸ்கரித்து ஸ்வாமிகளிடம் ஆசி பெற்று நகர்ந்தனர். ஒரு நடுத்தர வயதுத் தம்பதி, ஆச்சார்யாளை நமஸ்கரித்து எழுந்து, கை கூப்பி நின்றனர். அவர்களைக் கூர்ந்து ேநாக்கிய ஸ்வாமிகள், “அடடே… யாரு… பாலூர் கோபாலனா! ஒரு வருஷத்துக்கு...
ராசிகளின் ராஜ்யங்கள் மகர ராசி
மகர ராசி என்பது காலபுருஷனுக்கு ஒன்பதாம் (10ம்) பாவகத்தை குறிக்கிறது. நிலம் ராசியாக உள்ளது. இதன் திரிகோண ராசிகளாக ரிஷபம், கன்னியாக வருவது மகர ராசியின் தனிச்சிறப்பாகும். கருமமே கண்ணாக இருக்கக்கூடிய ராசியாகும். காலபுருஷனுக்கு தொழில் ஸ்தானமாக இருப்பதால் சிறப்பான அமைப்பாகும். மற்ற ராசிகளுக்கு இல்லாத தனிச்சிறப்பு மகரம் மற்றும் கும்பத்திற்குரிய சனிபகவானின் வீடுகள் அருகே...
ராசிகளின் ராஜ்யங்கள் துலாம்
துலாம் என்பது காலபுருஷ லக்னத்திற்கு ஏழாம் (7ம்) பாவகத்தை குறிக்கிறது. துலாம் ராசி என்பது காற்று ராசியாக உள்ளது. இந்த காற்று ராசியின் அதிபதி சுக்ரன். கலைகளுக்கு அதிபதியாக உள்ளவராக உள்ளார். இந்த ராசியில் உள்ளவர்கள் ஓரளவு நீதியை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். காரணம், இந்த ராசியில்தான் சனி கிரகம் தனது உச்சமான...
உத்திரட்டாதி நட்சத்திரங்கள்; பலன்கள்; பரிகாரங்கள்...
கால புருஷனுக்கு இருபத்தி ஆறாவது நட்சத்திரம் (26) உத்திரட்டாதி நட்சத்திரமாகும். உத்திரட்டாதி இது ஒரு முழுமையான நட்சத்திரம். மீனத்தின் நடுப்பகுதியை ஆக்கிரமித்துள்ள நட்சத்திரமாகும். உத்திரட்டாதி என்பது சனி பகவானின் ஆதிக்க நட்சத்திரம். இருப்பத்தி ஏழு நட்சத்திரங்களில் மூன்று நட்சத்திரமாகிய பூசம் (8), அனுஷம் (17), உத்திரட்டாதி (26) ஆகியவற்றின் கூட்டுத் தொகையானது எட்டாம் எண்ணுடன்...
பூரட்டாதி
நட்சத்திரங்கள்; பலன்கள்; பரிகாரங்கள்... கால புருஷனுக்கு இருபத்தி ஐந்தாவது நட்சத்திரம் (25) பூரட்டாதி நட்சத்திரமாகும். பூரட்டாதி நட்சத்திரத்திற்கு கொழுங்கோல், நாழி, புரட்டை ஆகியவனவாகும். இது ஒரு உடைபட்ட நட்சத்திரமாகும். இதில் மூன்று பாதங்கள் கும்பத்திலும் ஒரு பாதம் மீனத்திலும் உள்ளது. இதனை சமஸ்கிருதத்தில் ‘பூர்வப்ரோஷ்டபதா’ என்று அழைக்கப்படுகிறது. இரு குருவின் நட்சத்திரமாகும். கன்னிராசியில் சூரியன் பிரவேசிக்கும்...
உத்திராடம் நட்சத்திரங்கள்; பலன்கள்; பரிகாரங்கள்...
கால புருஷனுக்கு இருபத் தொன்றாவதாக (21) வரக்கூடிய நட்சத்திரம் உத்திராடம் நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரம் காலபுருஷ ராசி மண்டலத்தில் ஒன்பதாம் (9ம்) மற்றும் பத்தாம் (10ம்) பாவகத்தை உடைய ஒரு உடைபட்ட நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தின் அதிபதி சூரியன் ஆவார். வடமொழியில் உத்திராஷாடம் என்பது பெயராக உள்ளது.உத்திராடம் என்பது சூரியனின் உத்ராயணப் பயணத்தை தொடங்கும் நட்சத்திரத்தின்...

