மாதவரம் அருகே ஆட்டோவில் வந்த பயணியிடம் 6 சவரன் நகை பறிப்பு: ஓட்டுநர் கைது
மாதவரம், நவ.13: மாதவரம் அருகே ஆட்டோவில் வந்த பயணியிடம் 6 சவரன் நகை பறித்த ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். மாதவரத்தை சேர்ந்தவர் அஜித் நாயர்(33). வட பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று நிறுவனத்திற்கு செல்ல இவரும் அதே நிறுவனத்தில் பணி புரியும் 20 வயது பெண்ணும் மாதவரம் பேருந்து...
ஆன்லைன் செயலியில் பழகி இளம்பெண் பலாத்காரம் கன்னியாகுமரி வாலிபர் கைது
தண்டையார்பேட்டை, நவ.13: ஆன்லைன் செயலியில் பழகி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கன்னியாகுமரி வாலிபரை போலீசார் கைது செய்தனர். புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மோஜ் என்ற செயலி மூலமாக நண்பர்களோடு பழகி வந்தார். அந்த வகையில் கன்னியாகுமரியை சேர்ந்த லிபின் ராஜ் என்ற வாலிபர் இளம் பெண்ணுடன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆன்லைன்...
நந்தனம் மெட்ரோ ரயில் நிலைய பகுதியில் முதல்கட்ட வழித்தட சுரங்கப்பாதைக்கு அடியில் 2ம் கட்ட வழித்தட சுரங்கம்: அதிகாரிகள் தகவல்
சென்னை, நவ.12: சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக, பனகல் பூங்கா முதல் போட் கிளப் வரையிலான சுரங்கப்பாதை, ஏற்கனவே உள்ள நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தின் முதல் கட்ட சுரங்கப்பாதைக்கு அடியில், செங்குத்தாக அமைக்கப்பட உள்ளது. சென்னையில் முதல் கட்டத்தில் 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு 2 வழித்தடங்களில்...
வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கியவருக்கு 3 ஆண்டு சிறை
திருவொற்றியூர், நவ.12: சென்னை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் எழிலன், மணலி காவல் சரகத்தில் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பணியாற்றியபோது, மணலி எம்எப்எல் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது பைக்கில் வந்த எண்ணூர் தாழங்குப்பம் பகுதியை சேர்ந்த மணிமாறன் என்பவரிடம், மது அருந்தியுள்ளாரா என கருவி மூலம் சோதனை செய்துள்ளார். அதில்,...
செம்பரம்பாக்கத்தில் உள்ள பிரபல பிலிம் சிட்டிக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் சோதனை
சென்னை, நவ.12: செம்பரம்பாக்கத்தில் உள்ள பிரபல பிலிம் சிட்டிக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால், போலீசார் தீவிர சோதனை நடத்தினர். பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் தனியாருக்கு சொந்தமான பிரபல பிலிம் சிட்டி உள்ளது. இங்கு தமிழ் திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், ரியாலிட்டி ஷோ உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன....
சென்னை விமான நிலையத்திற்கு வந்த வெளிநாட்டு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை, நவ. 11: சென்னை, விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு கடந்த சனிக்கிழமை காலை, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில், வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக, மர்ம இ-மெயில் வந்தது. இதையடுத்து ஞாயிற்றுக் கிழமை காலை, கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக மர்ம இமெயில் வந்தது. இரண்டு நாட்களிலும், சென்னை விமான நிலைய...
குளத்தில் மூழ்கி மகன் பலியானதால் விரைவு ரயில் முன் பாய்ந்து மகளுடன் தாய் தற்கொலை
சென்னை, நவ.11: கோயில் குளத்தில் மூழ்கி மகன் பலியான சோகத்தில் விரைவு ரயில் முன் பாய்ந்து மகளுடன் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அச்சிறுப்பாக்கம் அருகே சோகத்தை ஏற்படுத்தியது. அச்சிறுப்பாக்கம் அருகே கொங்கரை மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் புருஷோத்தமன் (11), கொங்கரைமாம்பட்டில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். இவர்,...
மாதவரம் மண்டலத்தில் ரூ.1.1 கோடியில் 3 குளங்களை சீரமைக்கும் பணி தீவிரம்
சென்னை, நவ.11: சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலத்தில் உள்ள ராமச்சந்திரா குளம், படவேட்டம்மன் கோயில் குளம் மற்றும் ஊத்துகுளம் குளம் ஆகிய 3 நீர்நிலைகளை சீரமைக்கும் பணியை தொடங்கியுள்ளது. இந்த குளங்கள் மழைநீரை சேமிக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் உதவும். இதற்காக மாநகராட்சி 1.1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இந்த குளங்களை பொதுமக்கள் பயன்படுத்தும்...
கணக்கீட்டு படிவம் வீடு வீடாக சென்று வழங்கும் பணி தீவிரம் எஸ்ஐஆர் குறித்த சந்தேகங்களுக்கு ‘1950’ எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
சென்னை, நவ.7: சென்னையில் கணக்கீட்டுப் படிவம் வீடு வீடாக சென்று வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், எஸ்ஐஆர் குறித்த சந்தேகங்கள் இருந்தால் ‘1950’ என்ற எண்ணில் வாக்காளர்கள் தொடர்பு கொள்ளலாம், என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர்...
