ஆற்றங்கரையில் பனை விதை நடவு செய்த மாணவர்கள்
கீழ்வேளூர், நவ.7: நாகப்பட்டினம் மாவட்டம் வலிவலம் ஊராட்சி காருகுடி வழியாக செல்லும் வெள்ளையாற்று கரையில் தோட்டக்கலைத்துறை சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலத்தடி நீர் வளத்தை மேம்படுத்தல் மற்றும் ஆற்றுக் கரையை பலப்படுத்தும் நோக்கில் பனை விதை நடும் பணி நடைபெற்றது. வலிவலம் தேசிய மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பனை...
பொறையார் கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி
தரங்கம்பாடி, நவ.7: மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் டிபிஎம்எல் கல்லூரியில் நேற்று நடந்த மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழர்களின் மரபையும் தமிழ் பெருமிதததையும் உணர்த்தும் வகையில் மாபெரும் தமிழ் கனவு என்ற பெயரில் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி கடந்த 2023ம் ஆண்டு அண்ணா நினைவு நாளன்று...
கொள்ளிடத்தில் காங்கிரஸ் மூத்த உறுப்பினர் படத்திறப்பு விழா
கொள்ளிடம், நவ.6: கொள்ளிடத்தில் காங்கிரஸ் மூத்த உறுப்பினரின் உருவ படத்தை எம்பி சுதா திறந்து வைத்தார். மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடத்தில் மறைந்த மூத்த காங்கிரஸ் பாரத் சேகரின் உருவ பட திறப்பு விழா நடைபெற்றது. மயிலாடுதுறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுதா கலந்துகொண்டு திருவுருவப்படத்தை திறந்து வைத்து பேசினார். சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், முன்னாள் சிதம்பரம்...
நாகப்பட்டினம் ஆர்டிஓ அலுவலகத்தில் கதண்டு கடித்த 2 பேருக்கு சிகிச்சை
நாகப்பட்டினம், நவ.6: நாகப்பட்டினம் ஆர்டிஓ அலுவலகத்தில் கதண்டு கடித்த 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாகப்பட்டினம் காடம்படியில் ஆர்டிஓ அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு தினந்தோறும் பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் வந்துசெல்கின்றனர்.இந்நிலையில் அங்குள்ள ஆலமரத்தில் கூடு கட்டி இருந்த கதண்டு அங்கு வந்த பொதுமக்கள் ஐந்து பேரை கொட்டியது. இதில் அலறி அடித்து பொதுக்கள் ஓடினர்....
கீழையூர் கிழக்கு ஒன்றியத்தில் வாக்காளர் சிறப்பு திருத்த பணி ஒன்றிய செயலாளர் ஆய்வு
நாகப்பட்டினம், நவ.6: கீழையூர் கிழக்கு ஒன்றியம் பிரதாபராமபுரம் பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை ஒன்றிய செயலாளர் தாமஸ்ஆல்வா எடிசன் பார்வையிட்டார். இந்திய தேர்தல் ஆணையத்தால் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. இதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் முதல் வீடுவீடாக சென்று விண்ணப்பம் வழங்கும் பணி நடந்து வருகிறது....
சீர்காழி அருகே பனை விதைகள் நடவு பணி தொடக்கம்
சீர்காழி, நவ. 5: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நாங்கூர் அறிவியல் மன்றத்தின் சார்பில் பனை மரம் வளர்த்தல் விழிப்புணர்வு மற்றும் நாங்கூர் திருப்பாற்கடல் பகுதியில் பனை விதைகள் நடவு பணிகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பசுமை சேவை சங்க தலைவர் பொறியாளர் சுப்பிரமணியன், பொருளாளர் பாலமுரளி ஆகியோர் கலந்து கொண்டு பனை விதைகள்...
ஆதீன மடாதிபதியை சந்தித்து இஸ்லாமியர்கள், முத்தவல்லிகள் மணிவிழா வாழ்த்து தெரிவிப்பு
மயிலாடுதுறை, நவ. 5: மத நல்லிணகத்தை போற்றும் விதமாக 200 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தருமை ஆதீனத்தின் மணிவிழாவை முன்னிட்டு அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். மயிலாடுதுறையில் தருமை ஆதீன கலை கல்லூரியில் தருமபுர ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா சுவாமிகளின் ஜென்ம நட்சத்திர திருவிழா...
நாகப்பட்டினம் நகர பகுதியில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த படிவம் வழங்கும் பணி துவக்கம்
நாகப்பட்டினம், நவ. 5: நாகப்பட்டினம் நகர பகுதியில் நகர்மன்ற தலைவர் மாரிமுத்து தலைமையில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த படிவம் வழங்கும் பணி தொடங்கியது. இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் செய்யும் பணி நேற்று(4ம் தேதி) தொடங்கியது. இதற்காக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் விண்ணப்பங்கள்...
கொள்ளிடம் பகுதியில் சத்துணவு மையங்களுக்கு எரிவாயு அடுப்பு வழங்கல்
கொள்ளிடம், நவ.1: கொள்ளிடம் பகுதியில் உள்ள சத்துணவு மையங்களுக்கு புதியதாக எரிவாயு அடுப்பு வழங்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம். கொள்ளிடம் வட்டாரத்தில் உள்ள 42 ஊராட்சிகளில் உள்ள பள்ளிகளில் சத்துணவு மையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு சத்துணவு சமைப்பதற்கு விறகு அடுப்புகள் சில இடங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் சுற்றுப்புற சுகாதாரத்தை பாதிக்காத வகையிலும், சத்துணவு சமையலர்கள்...

