ஆட்டை தேடி சென்றபோது சுவர் இடிந்து மூதாட்டி பலி
விழுப்புரம், ஆக. 5: விழுப்புரம் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் அருகே தளவானூரை சேர்ந்தவர் வேலு மனைவி ராணி(52). ஆடு வளர்த்து வந்தார். இதனிடையே நேற்று முன்தினம் அவர் வளர்த்து வந்த ஆடு ஒன்று காணாமல்போனதால் அதை தேடி சென்றுள்ளார். அப்போது வாணி...
வீடு புகுந்து தங்க நகை, வெள்ளிப்பொருட்கள் திருட்டு
விழுப்புரம், ஆக.5: விழுப்புரம் அருகே ஆலம்பாடியை சேர்ந்தவர் சிவகுரு(49). இவர் விழுப்புரம் வனத்துறை அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருடைய சகோதரி கலையரசி கனடா நாட்டில் வசித்து வருவதால் விழுப்புரம் பாண்டியன் நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டை சிவகுரு கவனித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். பின்னர் நேற்று முன்தினம் வீட்டுக்குச் சென்று...
ஜெராக்ஸ் கடை உரிமையாளரை சரமாரியாக வெட்டி கொல்ல முயற்சி: 5 பேர் அதிரடி கைது
சங்கராபுரம், ஆக. 3: சங்கராபுரம் சார்பதிவாளர் அலுவலகம் பின்புற பகுதியில் வசித்து வருபவர் முகமது கவுஸ் மகன் முகமது யாசர். இவர், சார்பதிவாளர் அலுவலகம் அருகில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 28ம் தேதி கடையை பூட்டிவிட்டு இரவு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் குடிக்க தண்ணீர்...
கேரளா கண்ணூர்-சென்னை ஓடும் ஆம்னி பேருந்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு விருதுநகர் டிரைவர் போக்சோவில் கைது சினிமாவை மிஞ்சிய பரபரப்பு சம்பவம்
விழுப்புரம், ஆக. 3: கேரளா கண்ணூர்-சென்னை சென்ற ஓடும் ஆம்னி பேருந்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக விருதுநகரை சேர்ந்த டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கேரளா மாநிலம் கண்ணூரிலிருந்து சென்னை நோக்கி நேற்று முன்தினம் இரவு ஆம்னி சொகுசு பேருந்து ஒன்று புறப்பட்டது. இதில் சுமார் 25...
வடமாநிலத்தவர்களை வாக்காளர்களாக சேர்த்தால் தமிழ்நாட்டின் அரசியல் தலைகீழாகும் திருமாவளவன் பேட்டி
திண்டிவனம், ஆக. 3: வடமாநிலத்தவர்களை வாக்காளர்களாக சேர்த்தால் தமிழ்நாட்டின் அரசியல் தலைகீழாகும் என விசிக தலைவர் திருமாவளவன் எச்சரித்து உள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ரோசனை பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து...
ஓடும் பேருந்தில் 2 பவுன் நகை திருட்டு
சின்னசேலம், ஆக. 2: கச்சிராயபாளையம் அருகே பரிகம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாக்கண்ணு மனைவி மாரியம்மாள் (45). விவசாய கூலி தொழிலாளி. இவர் தனது குடும்ப செலவிற்காக கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு நகை அடகு கடையில் தனது இரண்டு பவுன் நகையை அடகு வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாரியம்மாள் கள்ளக்குறிச்சியில் உள்ள நகை அடகு கடைக்கு...
விழுப்புரம் நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் எம்பி மீதான அவதூறு வழக்கு விசாரணை 29ம்தேதிக்கு ஒத்திவைப்பு
விழுப்புரம், ஆக. 2: விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில் கடந்த 10.3.2023 அன்றும், கோட்டக்குப்பம் நகராட்சி திடலில் 1.5.2023 அன்றும் அ.தி.மு.க. சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய கட்சியின் மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் எம்பி தமிழக அரசையும், முதலமைச்சரையும் அவதூறாகவும், அவரது புகழுக்கும் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து...
மரக்காணம் அருகே ஏரிக்கரை அய்யனார் கோயில் உண்டியலை உடைத்து திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலை
மரக்காணம், ஆக.2: மரக்காணம் அருகே கந்தாடு ஏரிக்கரை பகுதியில் அமைந்துள்ளது ஏரிக்கரை அய்யனார் கோயில். இக்கோயில் அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் குலதெய்வ கோயிலாக உள்ளது. இந்நிலையில் தற்போது ஆடி மாதம் என்பதால் அய்யனார் கோயிலுக்கு பக்தர்களின் வருகையும் அபிஷேக ஆராதனைகளும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் மதியம் இக்கோயிலுக்கு ஆடி...
வங்கியில் பெற்ற கடனை திருப்பி செலுத்தாததால் புதுவையில் பிரபல தனியார் ஓட்டலை ஜப்தி செய்ய முயற்சி இருதரப்பு இடையே வாக்குவாதம்-பரபரப்பு
புதுச்சேரி, ஆக. 1: புதுச்சேரியில் கடந்த 2010ம் ஆண்டு தனியார் ஓட்டலின் உரிமையாளர், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.68 கோடிக்கு கடன் பெற்றுள்ளார். வெகுநாட்களாகியும் இந்த கடனை திரும்ப செலுத்தவில்லை. இந்த கடன் வட்டியுடன் சேர்த்து தற்போது ரூ.198 கோடி ரூபாயாக உயர்ந்ததாக கூறப்படுகிறது. ெதாடர்ந்து, உரிமையாளர் பணம் செலுத்தாததால் வங்கி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது....