சிற்பங்கள் நிறைந்த அனுமன் சந்நதி!
மிக பிரம்மாண்ட கோயில், அழகிய சிற்பங்கள், நுழைவாயிலில் மட்டுமே கோபுரம் காணப்படுகிறது, எந்த சந்நதிக்கும் கோபுரங்கள் கிடையாது. ஆங்காங்கு செடிகளைக் கொண்ட தோட்டங்கள் பறந்து விரிந்து காணப்படுகிறது. ஆலயத்தை சுற்றி பார்க்கவே அரை நாள் தேவைப்படும் போல. அத்தகைய பெரிய கோயில். இதன் உள்ளே, நம் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமனும் இருக்கிறார். இது...
பைரவர் பிரதிஷ்டை செய்த பரமன்
ராமகிரியில் இரண்டு பெரிய கோயில்கள் உள்ளன. ஒன்று மலையுச்சியில் அமைந்துள்ள சுப்பிரமணிய ஸ்வாமி கோயில். இன்னொரு கோயில் மலையடிவாரத்தில் உள்ளது. மலை மீது உள்ள சுப்பிரமணிய ஸ்வாமி கோயில், 1969-ல் கட்டப்பட்ட புதிய கோயில். மலையடிவாரத்திலுள்ள வாலீஸ்வரர் கோயில் பழமையானது. இது ஒரு சிவாலயமாக இருந்தாலும், இங்குள்ள பிரதான மூர்த்தி காலபைரவர். இவர் சந்தான ப்ராப்தி...
அன்னாபிஷேகம்
அன்னாபிஷேகம் என்பது சிவாலய விழாக்களில் ஒன்றாகும். சோற்றை வடித்து ஆறவைத்து அதனை தெய்வத்திருமேனியில் சாற்றி, அதன் மீது அதிரசம், வடை போன்றவற்றைக் கொண்டு அலங்கரித்து, வழிபடுவதே அன்னாபிஷேகம் ஆகும். சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யும்போது பால், தயிர், தேன், கரும்புச்சாறு போன்ற பொருட்களின் வரிசையில், அன்னத்தையும் அபிஷேகம் செய்வர். சிதம்பரத்தில், ஸ்படிக லிங்க மூர்த்திக்கு தினமும் அன்னாபிஷேகம்...
தினப் பொருத்தம் முக்கியமானதா?
தினப் பொருத்தம் என்பதே தினந்தோறும் கணவன் மனைவிக்குள் உண்டான பேச்சுக்கள், உரையாடல்கள், வாதங்கள் போன்றவற்றை குறித்துப் பேசுவதாகும். ஒரு நாளோ இரு நாளோ அல்ல மரண பரியந்தம் வரை தினந்தோறும் பார்த்துப் பழகுவதற்கான பொருத்தமென்பதால்தான் முதலில் இதை வைத்திருக்கிறார்கள். தினமும் எப்படியிருப்பார்கள் என்பதால்தான் தினப் பொருத்தம். மேலும், இந்த பொருத்தத்தை பார்த்துவிட்டால் முரண்பாடுகளற்ற வாழ்க்கையை எளிதாக...
சனி கொடுப்பாரா? கெடுப்பாரா?
சனி கொடுக்குமா? கெடுக்குமா? - நண்பர் ஒருவர் கேட்டார். நான் சொன்னேன்; ``சனி கொடுக்கும், கெடுக்கும்’’ ``என்ன இரண்டாகச் சொல்கிறீர்கள்?’’ நான் அவருக்கு விளக்கமாக சொன்னேன்; ``யாருக்குக் கொடுக்க வேண்டுமோ, அவர்களுக்கு சனி அள்ளிக் கொடுப்பார். யாரைக் கெடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டாரோ, அவரை உண்டு இல்லை என்று செய்து விடுவார். இரண்டும் அவருடைய...
சிக்கல் தீர்க்கும்சிக்கல் சிங்காரவேலவர்
ஒரு பஞ்ச காலத்தில், உண்ண உணவில்லாத நிலையில், மாமிசத்தைத் தின்றதால் தேவலோகப் பசுவான காமதேனு, ஈசன் சாபத்தால் புலி முகம் பெற்றது. அந்த சாபத்தை காமதேனு நிவர்த்தி செய்து கொண்ட தலம், சிக்கல். ‘‘அந்த பால் குளத்திலிருந்து வசிஷ்டர் வெண்ணெய் எடுத்து சிவலிங்கத்தை உருவாக்கி பூஜித்தார். பின் அதை அகற்ற முற்பட்டபோது, லிங்கம் பூமியில் சிக்கிக்...
காசி யாத்திரை
திருமண வைபவத்தில் காசியாத்திரை சடங்கிற்கான ஆதாரம் ஸ்மிருதிகளில் காணப்படுகிறது. எந்த ஒரு மனிதனும் நான்கு நிலைகளில் தமது வாழ்வை நடத்தி நிறைவு செய்ய வேண்டும். அதில் ஒன்று பிரம்மச்சரியம். இது கல்விக்கான காலம் ஒரு குருவிடம் சென்று கல்வி பயில வேண்டிய காலம். ஒரு பொழுதின் காலைப்பொழுது என்று இந்தக் காலத்தைச் சொல்லலாம். இக்காலத்தில் செய்ய...
தீராத நோய் தீர்க்கும் மருதமலை முருகன்
மருத மரங்கள் நிறைந்து காணப்படுவதால் இப்பகுதிக்கு மருதமலை என்ற பெயர் வந்ததாக கூறுவார்கள். அதே நேரம் மலை முழுவதும் நோய் தீர்க்கும் அபூர்வ மூலிகை மரங்களும், செடிகளும் நிறைந்து காணப்படுவதால் ‘மருந்து மலை’ என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு வருவோர் மீது மூலிகை காற்று படுவதால் உடல் நோய், மனநோய் தீர்ந்து நிம்மதி கிடைக்கிறது. கோயில் இரு...
அருள்மிகு அவிநாசி அப்பர் திருக்கோயில்
கிரகங்களே தெய்வங்களாக நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர் அவிநாசி வந்த பொழுது ஒரு வீதியின் வழியே சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு வீட்டில் பூணூல் கல்யாணம் நடந்து கொண்டிருந்தது. அதற்கு எதிர் வீட்டில் துக்கம் அனுசரித்து வீடு சோகமாக இருந்தது. அப்பொழுது அங்கு விசாரித்த பொழுது, ஒத்த வயதுடைய இரு சிறுவர்கள் இருந்தனர். அதில், ஒரு சிறுவனுக்கு...

