கங்கைகொண்ட சோழபுரம் ரூ.1.32 கோடி மதிப்பிலான பிரகதீஸ்வரர் கோயில் நிலம் மீட்பு
ஜெயங்கொண்டம், நவ.19: அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டமைக்கப்பட்ட பிரகதீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான இடங்கள் தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, அரியலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தலைமையில் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடங்கள் ரூ.1 கோடியே 32 லட்சம்...
அரியலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
அரியலூர், நவ. 19: அரியலூர் அண்ணாசிலை அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் ஒருநாள் விடுப்பெடுத்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 30 சதவீத பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். இடைநிலை,...
பெரம்பலூர் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 68 பயனாளிகளுக்கு ரூ.12.75 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
பெரம்பலூர்,நவ.18: பெரம்பலூரில் நடந்த பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 336 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, 68 பயனாளிகளுக்கு ரூ.12.75 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மிருணாளினி வழங்கினார். பெரம்பலூர் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்று கலெக்டர் மிருணாளினி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மாற்றுத்...
சம்பா நெல் பயிரில் தண்டு துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: வேளாண் உதவி இயக்குநர் ஆலோசனை
ஜெயங்கொண்டம், நவ.18: ஜெயங்கொண்டம் வட்டாரத்தில் தற்போது சம்பா பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது நிலவி வரும் காலநிலை மாற்றங்களுக்கேற்ப பூச்சி, நோய் தாக்குதல் ஆங்காங்கே தென்படுகிறது. இலை நுனியில் பழுப்பு நிற முட்டைக் குவியல் மற்றும் தூர்களில் நடுப்பகுதி காய்ந்திருத்தல் மற்றும் நடுத்தண்டை இழுத்தால் எளிதாக வெளியில் வருதல் ஆகியவை...
மக்களைத்தேடி மருத்துவம் ஊழியர்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார்
பெரம்பலூர்,நவ.18: தொற்றாநோய் களப் பணிகளை மட்டும் செய்திட உதவிடவேண்டும் என பெரம்பலூர் மாவட்ட மக்களைத் தேடி மருத்துவம் ஊழியர்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் குறை தீர்க்கும் நாள் கூட்டஅரங்கில் நேற்று திங்கட் கிழமை காலை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மிருணாளினி தலைமையில் நடைபெற்றது....
778 பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி
அரியலூர், நவ. 15: அரியலூர் மாவட்டத்தில் 778 பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டியை அமைச்சர் சிவசங்கர் நேற்று வழங்கினார். சிரமமின்றி படிப்பேன் என மாணவி பெருமிதமாக குறிப்பிட்டார். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உயர் தரமான கல்வியை கிடைக்கச் செய்து...
18ம்தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
அரியலூர், நவ. 15: அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு தனியார்துறை வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. தற்போது தத்தனூர், மீனாட்சி இராமசாமி பொறியியல் கல்லூரி வளாகத்தில் 18ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை...
செழிப்பாக வளர்ந்துள்ள பணப்பயிர்... குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி, கையெழுத்து இயக்கம் அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்
அரியலூர், நவ. 15: அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடை பயண பேரணியினை மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்து தேசிய...
அரியலூர் எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
அரியலூர், நவ. 13: அரியலூர் எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது. அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் வாரந்தோறும் புதன்கிழமை அன்று நடைபெற்று வருகின்றது. அதன்படி, நேற்று மாவட்ட காவல் அலுவலகத்தில், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி தலைமையில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது....


