ரூ.1.40 கோடிக்கு பருத்தி ஏலம்
அந்தியூர், ஆக. 5: ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை வேளாண் விளைபொருட்களின் ஏல விற்பனை நடைபெறும். நேற்று நடந்த ஏலத்தில் பருத்தி பி.டி காட்டன் ரகம் 5 ஆயிரம் மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தது. இது கிலோ ஒன்று குறைந்தபட்சம் ரூ.78.09 முதல் அதிகபட்சம் ரூ.80.90 வரை சுமார் ரூ.1...
பாலக்காட்டில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரம்
பாலக்காடு, ஆக. 5: பாலக்காடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாலக்காடு மாவட்டம் கொடும்பு அருகே கல்லிங்கல் பகுதியில் தண்ணீரில் மாசுப்படியாத விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்குள்ள கலைக்கூடங்களில் பல்வேறு வடிவிலான விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றனர். பாலக்காடு மாவட்ட கணேஷ...
பசுந்தேயிலை வரத்து உயர்வால் தேயிலை தூள் உற்பத்தி அதிகரிப்பு
மஞ்சூர், ஆக. 4: குந்தா பகுதியில் பசுந்தேயிலை வரத்து உயர்ந்துள்ளதால் கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் தேயிலை தூள் உற்பத்தி அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் முக்கியத்தொழிலாக உள்ளது. மஞ்சூர், பிக்கட்டி, கிண்ணக்கொரை, குந்தா, கைகாட்டி, மகாலிங்கா, இத்தலார், மேற்குநாடு, நஞ்சநாடு உள்பட மாவட்டம் முழுவதும் 16 கூட்டுறவு ஆலைகள் இயங்கி வருகிறது. இது...
கல்லட்டி மலை பாதையில் விதிமீறும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்து அபாயம் நீடிப்பு
ஊட்டி, ஆக. 4: நீலகிரி மலை மாவட்டம் என்பதால், பெரும்பாலான சாலைகள் மலைப்பாங்கான, குறுகலாகவும் மற்றும் அதிக வளைவுகளை கொண்டதாக உள்ளது. இது போன்ற சாலைகளில் சமவெளிப் பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு வாகனங்களை இயக்கத் தெரிவதில்லை. குறிப்பாக மிகவும் செங்குத்தாக செல்லும் கல்லட்டி சாலையில் வாகனங்களை இயக்க தெரியாமல் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுகிறது....
ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கை தீவிரம்
குன்னூர், ஆக.3: தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் திமுக சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்பில் அதிகமான மக்களை இணைத்து மாபெரும் வெற்றி அடைந்து வருவதற்கு காரணமான திமுக நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டு...
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் கோத்தகிரியில் 1000க்கும் மேற்பட்ட மக்கள் பயன்
கோத்தகிரி, ஆக.3: ஏழை, எளிய மக்கள் தரமான மருத்துவ சிகிச்சை பெற்றிட, அவர்களுக்குள் உள்ள நோயை கண்டறிய தமிழ்நாடு அரசு சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு கொறடா ராமச்சந்திரன் குத்துவிளக்கு ஏற்றி முகாமினை தொடக்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர்...
பந்தலூரில் தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பு
பந்தலூர், ஆக.3: பந்தலூர் பஜார், காலனி சாலை, அட்டி வயல், பந்தலூர் அம்பேத்கர் நகர், எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், காலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் என அனைவருக்கும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் நாய்கள் பாதசாரிகளை பின் தொடர்ந்து செல்வதால் மக்கள்...
நெல்லியாம்பதியில் நோய்கள் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
பாலக்காடு, ஆக.2: நெல்லியாம்பதி கிராமப்பஞ்சாயத்தில் நோய்கள் பரவாமல் தடுக்க அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குளோரின் தெளிப்பு பணி நடந்தது. நெல்லியாம்பதி கிராமப்பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாடகிரி, தோட்டேக்காடு, ராஜாக்காடு, புல்லாலா, ஓரியண்டில், லில்லி, நூரடி, போத்துப்பாறை, மீரப்லோரா, கூனம்பாலம், ஏலம் ஸ்டோர், தேனிபாடி, கைக்காட்டி, ஆரஞ்சு பண்ணை, புலயம்பாறை, ஊத்துக்குழி, சீதார்குன்று, கோட்டயங்காடு மற்றும் சந்திரமலை...
அட்டப்பாடியில் மக்கள் குறைதீர் கூட்டம்
பாலக்காடு, ஆக.2: அட்டப்பாடியில் பாலக்காடு மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கி நடைபெற்ற மக்கள் குறைத்தீர்ப்பு கூட்டத்தில் 139 புகார் மனுக்களை பெற்றனர். இதில், 100 புகார் மனுக்களுக்கு மாவட்ட கலெக்டர் நேரடியாக தீர்வு வழங்கினார். 39 புகார் மனுக்களை ஆய்வு மேற்கொண்டு தீர்வுகள்...