ஆத்தூர் பேரூராட்சியில் சரஸ்வதி பூஜை விழா
ஆறுமுகநேரி, அக். 1: ஆத்தூர் பேரூராட்சியில் சரஸ்வதி பூஜை விழா கொண்டாடப்பட்டது. ஆத்தூர் பேரூராட்சியில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் ஆத்தூர் பேரூராட்சி தலைவர் கமால்தீன் தலைமையில் பூஜை நடத்தப்பட்டு அனைவருக்கும் இனிப்பு மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் கவுன்சிலர்கள் அசோக்குமார், சிவா, முத்து, பாலசிங், முருகன், கமலச்செல்வி, வசந்தி,...
ஸ்டேட் வங்கி சார்பில் கோவில்பட்டி ஜி.ஹெச்சுக்கு பேட்டரி ஆம்புலன்ஸ் வழங்கல்
கோவில்பட்டி, அக். 1: கோவில்பட்டி தலைமை அரசு மருத்துவமனைக்கு தூத்துக்குடி ஸ்டேட் வங்கி சார்பில் பேட்டரியில் இயங்கும் ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆம்புலன்ஸ் சாவியை கலெக்டர் இளம்பகவத்திடம் ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் ஆல்வின் மார்ட்டின் ஜோசப் வழங்கினார். கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பாரத ஸ்டேட் வங்கியின் சிஎஸ்ஆர் திட்டத்தின் மூலம் நோயாளிகள்...
தூத்துக்குடியில் ஆட்டோ - பைக் விபத்தில் தியேட்டர் பங்குதாரர் பலி
தூத்துக்குடி, செப். 30: தூத்துக்குடியில் ஆட்டோ - பைக் மோதிய விபத்தில் தியேட்டர் பங்குதாரர் பலியானார். தூத்துக்குடி பாளை ரோடு நேரு தோட்டத்தை சேர்ந்தவர் சங்கர்(62). இவர், பானுமதி தியேட்டரின் பங்குதாரர் ஆவார். நேற்று முன்தினம் இரவு எட்டயபுரம் சாலையில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு தனது பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அண்ணாநகர் மெயின் ரோடு,...
குலசை தசரா திருவிழா 6ம் நாளில் மகிஷாசூரமர்த்தினி திருக்கோலத்தில் வீதியுலா
உடன்குடி, செப். 30: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா 6ம் நாளில் மகிஷாசூரமர்த்தினி திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். லசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா, கடந்த 23ம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் தினமும் பல்வேறு கோலங்களில் அம்மன் திருவீதியுலா நடக்கிறது....
கயத்தாறு அருகே ஊரணியை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை
தூத்துக்குடி,செப்.30: கயத்தாறு அருகே முடுக்கலான்குளத்தில் ஊரணியை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கயத்தாறு வட்டம் முடுக்கலான்குளம் கிராமத்தை சேர்ந்த மக்கள் ஊர் நாட்டாமை முத்துப்பாண்டி தலைமையில் மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: முடுக்கலான்குளம் கிராமத்தில் 0.83 ஹெக்டேர் நிலத்தில் அமைந்துள்ள வண்டிப்பாதை, வாய்க்கால் மற்றும்...
ஆறுமுகநேரியில் ரயிலில் அடிபட்டு பெண் பலி
ஆறுமுகநேரி,செப்.27: ஆறுமுகநேரியில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காணியாளர் தெரு பின்புறமுள்ள ரயில்வே தண்டவாளத்தில் நேற்று அதிகாலை காலை 5.30 மணியளவில் சென்னையில் இருந்து திருச்செந்தூர் வந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி அடையாளம் தெரியாத பெண் பலியானதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில்...
மாலத்தீவு அருகே தோணியிலிருந்து கடலில் தவறி விழுந்த தூத்துக்குடி கேங்மேன் உடல் மீட்பு
தூத்துக்குடி,செப்.27: தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு, காந்தி நகர் மீனவர் காலனியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (40). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தோணியில் கேங்மேனாக வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ஜெகதீஷ் கடந்த 19ம் தேதி தூத்துக்குடி பழைய துறைமுகத்திலிருந்து மாலத்தீவிற்கு உணவுப்பொருள்களை ஏற்றிச்சென்ற தோணியில் 12 பேருடன்...
பலத்த சூறைக்காற்று எதிரொலி தூத்துக்குடியில் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை பலத்த சூறைக்காற்று எதிரொலி தூத்துக்குடியில் விசைப்படகுகள்
தூத்துக்குடி, செப்.27: வங்கக்கடலில் வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, தெற்கு ஒடிசா- வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக வங்கக்கடலிலும், மன்னார் வளைகுடா பகுதி கடற்பகுதியில் 45 கி.மீட்டரிலிருந்து 55 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை மையம்...
புளியம்பட்டி அருகே அய்யப்பபுரத்தில் பகுதி நேர ரேஷன் கடை
ஓட்டப்பிடாரம், செப். 26: புளியம்பட்டி அருகே மருதன்வாழ்வு ஊராட்சிக்கு உட்பட்ட அய்யப்பபுரம் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடையை சண்முகையா எம்எல்ஏ திறந்துவைத்தார். ஓட்டப்பிடாரம் யூனியன், மருதன்வாழ்வு ஊராட்சிக்கு உட்பட்ட அய்யப்பபுரம் கிராம மக்கள் நீண்டகாலமாக மருதன்வாழ்வு கிராமத்தில் உள்ள கடைக்குச்சென்று குடிமைப்பொருட்கள் வாங்கிவந்த நிலையில் தங்கள் கிராமத்திலேயே பகுதிநேர ரேஷன் கடை அமைத்துத்தர வேண்டும்...