ரோகிணி கல்லூரியில் ஆயுத பூஜை விழா

அஞ்சுகிராமம், அக். 1: அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் உள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் ஆயுதபூஜை நடந்தது. கல்லூரி தலைவர் நீலமார்த்தாண்டன், துணை தலைவர் முனைவர் நீலவிஷ்ணு, நிர்வாக இயக்குனர் முனைவர் பிளஸ்ஸி ஜியோ, முதல்வர் முனைவர் ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.விழாவில் அனைத்து துறை சார்பில் பேராசிரியர்கள், மாணவர்களும் இணைந்து கொலு...

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு ரூ. 21.95 கோடியில் ராஜகோபுரம்

சுசீந்திரம், அக். 1: கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோயிலில் ரூ. 21 கோடியே 95 லட்சத்து 40 ஆயிரம் செலவில் 9 நிலை கொண்ட ராஜகோபுரம் கட்டுவதற்கு சமீபத்தில் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. இக் கோபுரம் கட்ட உபயதாரதாக குமரி மாவட்ட முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பிரபாஜி ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அதற்கான அரசாணை...

கடையல் பேரூராட்சி முன்பு கவுன்சிலர் காத்திருப்பு போராட்டம்

அருமனை, அக். 1:கடையல் அருகே உள்ள கோலஞ்சி மடம் பாலத்தை சீரமைக்க 2023ம் ஆண்டு ரூ.2 கோடியே 18 லட்சத்தில் நிதி ஒதுக்கப்பட்டது. பாலம் கட்ட வனத்துறை அனுமதி வழங்காததால் பாலம் கட்டும் பணி கைவிடப்பட்டது. இதனையடுத்து பொமக்கள் மீண்டும் வலியுறுத்தியதால் பேரூராட்சி சார்பில் பாலம் அமைக்க ரூ.81 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதுவும் பணி...

கொல்லங்கோடு அருகே மருமகனை கத்தியால் குத்திய மாமனார்

நித்திரவிளை, செப்.27 : கொல்லங்கோடு அருகே மார்த்தாண்டன் துறை கோவில்வளாகம் பகுதியை சேர்ந்தவர் புதுசீர் (44). மீன்பிடி தொழிலாளி. இவரது மாமா கொல்லங்கோடு மதர் தெரேசா ஜங்ஷன் பகுதியை சேர்ந்த ததேயுஸ். மீன்பிடி தொழிலாளி. கடந்த 21ம் தேதி மார்த்தாண்டன் துறையில் கால்பந்து போட்டி நடந்த போது, அங்கு வைத்து புதுசீருக்கும், ததேயுஸூக்கும் வாய் தகராறு...

கொல்லங்கோடு அருகே சானல் பக்கச்சுவர் உடைந்து வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் பொதுமக்கள் அவதி

நித்திரவிளை, செப். 27: கொல்லங்கோடு அருகே நடைக்காவு ஊராட்சி பகுதியான மணலி - குரங்காடி - சாத்தன்கோடு சாலையின் பக்கவாட்டில், நெய்யார் இடதுகரை கிளை கால்வாய் செல்கிறது. இதில் தெற்கே முள்ளுக்கோடு என்னுமிடத்தில் கால்வாயின் பக்க சுவரில் 3 இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக, சானலில் வரும்...

பூங்காவை சுத்தம் செய்த அஞ்சல் ஊழியர்கள்

நாகர்கோவில், செப். 27:இந்திய அஞ்சல் துறை சார்பில் மக்களிடையே சுற்றுபுற தூய்மை மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் மேற்பார்வையில் தபால்துறை ஊழியர்கள் நாகர்கோவில் அவ்வைசண்முகம் சாலையில் அமைந்துள்ள பூங்காவை சுத்தம் செய்தனர். நிகழ்ச்சிக்கு நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தின் முதன்மை அஞ்சல் அதிகாரி சுரேஷ் தலைமை வகித்தார்....

திங்கள்சந்தையில் எம்சாண்ட் கடத்திய டெம்போ பறிமுதல்

திங்கள்சந்தை, செப். 26: இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆன்றோ கெவின் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை திங்கள்நகர் பெரியாபள்ளி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிவேகமாக வந்த கனரக டெம்போவை நிறுத்த முயன்றனர். ஆனால் டிரைவர் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பிச் சென்றார். அதைத்தொடர்ந்து டெம்போவை பரிசோதனை செய்த போது எவ்வித அரசு...

பைங்குளம் நூலக வாசகர் வட்ட கூட்டம்

புதுக்கடை , செப்.26: பைங்குளம் அரசு முழு நேர நூலக வாசகர் வட்ட கூட்டம் தலைவர் முருகன் தலைமையில் நடந்தது. நூலகர் துளசி முன்னிலை வகித்தார். வாசகர் வட்ட உறுப்பினர்கள் ராமலட்சுமி, கிருஷ்ணன், சின்னையன், ராஜேஸ்வரி ,கோவிந்தராஜ், வில்சன், ராஜேஷ் ,பேராசிரியர் சஜீவ் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நூலக வார விழாவை சிறப்பாக...

விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம்

மார்த்தாண்டம், செப்.26: வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில மையம் சார்பாக விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் நேற்று மாலை 3 மணி முதல் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி சுமை மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளைவலியுறுத்தி நடந்த இந்த போராட்டத்தில் விளங்கோடு வட்டத் தலைவர் குமார் தலைமை வகித்தார். செயலாளர்...

மார்த்தாண்டம் அருகே விபத்து ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி காயம்

மார்த்தாண்டம், செப். 25: மார்த்தாண்டம் அருகே மாங்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெயகுமார் (61). ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி. இவரது மனைவி செல்வி (61). சம்பவத்தன்று ஜெயகுமார் பைக்கில் மேல்புறத்தில் இருந்து, குழித்துறை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது வட்டவிளை பகுதியில் சென்றபோது, எதிரே வேகமாக வந்த பைக் ஜெயகுமார் பைக் மீது மோதியது. இதில்...