சிறுமி கர்ப்பம் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை சிவகங்கை கோர்ட் தீர்ப்பு
சிவகங்கை, செப். 27: சிங்கம்புணரி செட்டியார் தெருவை சேர்ந்தவர் அஜித்குமார் (32). பேக்கரியில் வேலை செய்து வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு 16வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்த புகாரில் சிங்கம்புணரி போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர்....
கிட் அண்டு கிம் இன்ஜி., கல்லூரியில் உலக விண்வெளி விழா கொண்டாட்டம்
காரைக்குடி, செப். 27: காரைக்குடி அருகே கீரணிப்பட்டி கிட் அண்டு கிம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு உலக விண்வெளி தினம் கொண்டாப்பட்டது. துணைபேராசிரியர் தஸ்லிமா பானு வரவேற்றார். கிட் அண்டு கிம் பொறியியல், மேலாண்மை கல்லூரிகள், எஸ்ஆர்விவி சிபிஎஸ்இ பள்ளி கல்விக்குழும சேர்மன் வி.அய்யப்பன் காணொலி காட்சி வழியாக...
பாடத்திட்டம் அவகாசம் பதிவாளர் தகவல்
காரைக்குடி, செப்.26: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக விதிமுறைகளின்படி, அழகப்பா பல்கலைக் கழக இணைப்புக் கல்லூரிகளில் படித்து தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், படிப்புக்காலம் முடிந்ததில் இருந்து தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு தேர்வு எழுத இரண்டு வருடங்கள் மட்டுமே அனுமதிக்கப் படுகின்றனர். எனவே இணைப்புக் கல்லூரிகளில் 2017ம் ஆண்டு பாடத்திட்டத்தின் வழியாக படித்த இளநிலை மாணவர்களின் தேர்வு எழுதுவதற்கான...
இன்று புதுவயலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
சிவகங்கை, செப்.26: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று காரைக்குடி அருகே புதுவயலில் நடைபெற உள்ளது. கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் சிவகங்கை மாவட்டத்தில் ஜூலை 15 முதல் நடைபெற்று வருகிறது. இம்மாதம் வரை ஒவ்வொரு வாரமும், நான்கு நாட்களில் நாள் ஒன்றுக்கு 6 முகாம் வீதம்...
அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை
திருப்புத்தூர், செப்.26: திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பூமாயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சர்வ அலங்காரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து பெண்கள் தங்கள் விளக்கில் தீபமேற்றினர். தொடர்ந்து 1008 காயத்திரி மந்திரங்கள், 108 மகாலெட்சுமி மந்திரங்களை திருவிளக்கின் செல்வி விசாலாட்சி அம்மாள் முழங்க பெண்கள் விளக்கிற்கு குங்குமம் மற்றும்...
வாலிபருக்கு அரிவாள் வெட்டு
காரைக்குடி, செப். 25: காரைக்குடி கேஎம்சி காலனியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (20). இவருக்கும் சத்யா நகர் பகுதி இளைஞர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று மாலை உதயம் நகர் பகுதியில் நடந்து சென்ற சுரேஷ்குமாரை வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி விட்டு டூவீலரில் தப்பி ஓடி தலைமறைவாகினர். படுகாயம் அடைந்த...
சிவகங்கை நகராட்சித் தலைவரை மிரட்டிய ரவுடிகள் கைது
சிவகங்கை, செப். 25: சிவகங்கை நகராட்சி தலைவரை பணம் கேட்டு மிரட்டிய ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை திமுக நகர் செயலாளராக இருப்பவர் துரை ஆனந்த். இவர் சிவகங்கை நகராட்சி தலைவராகவும் உள்ளார். இவர் சிவகங்கை-மானாமதுரை சாலையில் சாமியார்பட்டி விலக்கு அருகே ஓட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் மானாமதுரை அருகே வேலுார் கிராமத்தைச் சேர்ந்த...
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
சிவகங்கை, செப். 25: சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரகவளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பாக்கியராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். மதுரை மாவட்ட செயலாளர் ஜோதிபாசு சிறப்புரை ஆற்றினார். இதில், தூய்மை காவலர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஊதியம்...
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
தேவகோட்டை, செப்.23: தேவகோட்டை தலைமை அஞ்சலகம் சார்பாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி காரைக்குடி உபகோட்ட ஆய்வாளர் ரித்தீஷ் சவுகான், தேவகோட்டை தலைமை அஞ்சல் அதிகாரி செல்வராஜ் ஆகியோர் தலைமையில் நடந்தது. அலுவலகத்தில் இருந்து திருப்பத்தூர் சாலை வழியாக தியாகிகள் பூங்கா வரை பேரணி நடைபெற்றது. இதில் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர். மேலும் பொதுமக்களுக்கு...