இரண்டு மான்கள் இறந்த நிலையில் மீட்பு
ரெட்டியார்சத்திரம், அக். 4: ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான கன்னிவாடி, தருமத்துப்பட்டி, ஆடலூர், பன்றிமலை உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக வனவிலங்குகள் வேட்டையாடப்படுவது அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் கன்னிவாடி அருகே காட்டுப்பன்றிகளை வேட்டையாடிய கரூர் மாவட்டம், தோகமலை பகுதியை சேர்ந்த 14 பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.2 லட்சத்து 30...
ஆக்கிரமிப்பை அகற்ற கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
தேவதானப்பட்டி, அக். 4: தேவதானப்பட்டி அருகே, ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மேல்மங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். தேவதானப்பட்டி அருகே மேல்மங்கலம் ஊராட்சி 12வது வார்டு அம்மாபட்டி தெருவில் 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள ஆலமரத்து முனியாண்டிகோயிலில் இருந்து மேல்மங்கலம் பஸ் ஸ்டாப் வரை சுமார் 200 மீட்டர் தொலைவிற்கு பொதுப்பாதை...
கம்பம் பகுதியில் ரசாயனம் கலந்த உணவு விற்பனை: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கம்பம்:தேனி மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகராட்சியாக கம்பம் உள்ளது. இதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக, கம்பத்தை நோக்கியே வணிகர்கள் அதிகளவில் வருகின்றனர். இந்நிலையில் கம்பத்தில், சிறுவர்களுக்கான தின்பண்டங்கள் விற்பனை செய்யும் சில கடைகளில் பல்வேறு ராசயன கலவை சேர்க்கப்பட்ட்ட மற்றும் சீன இறக்குமதி மிட்டாய்கள், சாக்லேட்டுகள், கார வகைகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நொறுக்கு...
ஆன்லைன் வர்த்தகத்தில் கவனம் தேவை
தேனி: சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், போனில் வங்கி கணக்கு விபரங்களை கேட்டால் தெரிவிக்க வேண்டாம். ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவது, வர்த்தகத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட அனைத்திலும் விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும் வங்கியில் இருந்து எந்த விபரமும் கேட்கப்படுவதில்லை என தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. போனுக்கு மெசேஜ் மூலம் வரும் தேவையற்ற லிங்க்களை திறக்கக்கூடாது...
அக்.5, 6 தேதிகளில் இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம்
தேனி: வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆக.12ல் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் கூட்டுறவுத்துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் 2வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 36,105 குடும்ப...
மலைச்சாலையில் மது அருந்தினால் நடவடிக்கை: வனத்துறை எச்சரிக்கை
பழநி, செப்.30: கொடைக்கானல் மலைச்சாலையில் மது அருந்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். இவர்கள் செல்லும் பழநி-கொடைக்கானல் மலைச்சாலை இயற்கை எழில் சூழ்ந்ததாகும். இங்கு சிறுத்தை, யானை, குரங்கு உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டம் அதிகளவு உள்ளது. இந்நிலையில் பழநி-...
மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி
திண்டுக்கல், செப்.30:திண்டுக்கல்லில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் பஞ்சப்பட்டி அணி முதலிடம் பிடித்தது.திண்டுக்கல்லில் ஒன்றிய அரசின் மேரா யுவ பாரத் மற்றும் இளைய பாரதம் சார்பில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி சூசைப்பட்டியில் நடைபெற்றது. இதில் 8 அணிகள் கலந்து கொண்டன. அதில் பஞ்சம்பட்டி அணி முதலிடமும், சூசைப்பட்டி அணி இரண்டாம் இடம் பெற்றது....
தீ விபத்து இடத்தில் தேனி எம்பி ஆய்வு
கம்பம், செப். 30: கம்பம் ஆசாரிமார் தெருவை சார்ந்தவர் வெங்கடேசன் (60). இவர் கம்பம் வேலப்பர் கோயில் தெருவில் மளிகை கடை ஒன்றினை நடத்தி வருகிறார். நாள் தோறும் இரவு 10 மணிக்கு கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு செல்வது வழக்கம். அதன் படி நேற்று இரவு கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்ற போது,...
வாக்குத் திருட்டை கண்டிக்கும் வகையில் காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்
தேனி, செப். 27: வாக்குத்திருட்டை கண்டிக்கும் வகையில் தேனி நகர காங்கிரஸ் கட்சியினர் தேனி நகர் முஸ்லீம் புது பள்ளிவாசலில் கையெழுத்து இயக்கம் நடத்தினர். இந்திய சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குத்திருட்டு நடப்பதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சி சார்பில்...