கலெக்டரிடம் மக்கள் மனு
திண்டுக்கல், ஆக. 5: திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி ஜம்புளியம்பட்டியில், விநாயகர், பாலமுருகன், ஆஞ்சநேயர் கோயிலை சுற்றியுள்ள பகுதி மற்றும் சிலுவத்தூர் ரோட்டில் அரசுக்கு பாத்தியப்பட்ட வண்டிப் பாதையை சிலர் ஆக்கிரமித்து செய்துள்ளனர். அதனை அகற்றி தர வலியுறுத்தி கலெக்டர் சரவணனிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். மனுவில் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் ஜம்புளியம்பட்டி பாலகிருஷ்ணாபுரம் 7வது வார்டில்...
சின்னக்காம்பட்டியில் ஆக. 7ல் ‘பவர் கட்’
ஒட்டன்சத்திரம், ஆக. 5: ஒட்டன்சத்திரம் வட்டம் சின்னக்காம்பட்டி 22 கே.வி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக, ஆக.7ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, சின்னக்காம்பட்டி, இடையகோட்டை, குத்திலுப்பை, ஐ வாடிப்பட்டி, கொங்கபட்டி,நவகானி, இடையன் வலசு, இ.கல்லுப்பட்டி, வலையபட்டி, கொ. கீரனூர், சாமியாடிபுதூர், நரசிங்கபுரம், ஜவ்வாதுபட்டி, பாறைப்பட்டி,...
அய்யலூரில் ஆலோசனை கூட்டம்
வேடசந்தூர், ஆக. 4: அய்யலூர் பேரூர் திமுக சார்பில் வார்டு செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. பேரூர் செயலாளர் கருப்பன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துதல், தலைமை அறிவுறுத்தலின்படி கட்சி வேலைகளை சரிவர செய்து முடிக்க வேண்டும் என பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில் அனைத்து...
மக்காச்சோளத்தில் தண்டு துளைப்பான் பாதிப்பா?
பழநி, ஆக. 4: பழநி மற்றும் தொப்பம்பட்டி பகுதியில் சுமார் 11 ஆயிரம் ஹெக்டேர் அளவிற்கு மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. இப்பயிர்கள் வளர்ச்சி நிலையை அடையும் போது தண்டுதுளைப்பான் நோய் ஏற்படும். இதனை தவிர்க்க என்டோசல்பான் மருந்தை ஒரு ஏக்கருக்கு 200 மில்லி எனும் அளவில் கலந்து தெளிக்க வேண்டும். 15 நாட்களுக்குப்பின் மீண்டும் இதேபோல் அமைக்க...
திண்டுக்கல்லில் புத்தக திருவிழா இலச்சினை வெளியீடு
திண்டுக்கல், ஆக. 4: திண்டுக்கல் அங்கு விலாஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நுாலக இயக்ககம் மற்றும் இலக்கிய களம் சார்பில் 12வது புத்தக திருவிழா ஆக.28ம் தேதி துவங்கி செப்.7ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு புத்தக திருவிழா இடநெருக்கடி இன்றி, வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், அனைவரும்...
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்; 45.50 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை: ஒட்டன்சத்திரத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்
ஒட்டன்சத்திரம், ஆக. 3: ஒட்டன்சத்திரத்தில் தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த நபர்களுக்கு குடும்ப அட்டைகள், கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கி பேசியதாவது: 1972ம் ஆண்டு ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில்...
திண்டுக்கல் அருகே கொலையில் கைதான 3 பேருக்கு குண்டாஸ்
திண்டுக்கல், ஆக. 3: திண்டுக்கல் அருகே ராஜக்காபட்டி கல்லுப்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (39). பாரதிய ஜனதா கட்சி பிரமுகர். இவர், கடந்த ஜூலை 3ம் தேதி மடூர் பிரிவில் நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு 2 டூவீலர்களில் வந்த கும்பல், அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியது. இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து 10...
பழநி வணிகர்கள் கவனத்திற்கு
பழநி, ஆக. 3: பழநி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மளிகை கடை, ஹோட்டல், டீக்கடை, லாட்ஜ், திருமண மண்டபம், கறிக்கடை உள்ளிட்ட அனைத்து தொழில் செய்யும் வணிக நிறுவனத்தார் நடப்பு ஆண்டிற்கான தொழில் உரிமம் புதுப்பித்து, தொழில் வரித்தொகையை நகராட்சி அலுவலகத்தில் உடனடியாக செலுத்தியிருக்க வேண்டும். தவறும் பட்சத்தில் செலுத்தக்கூடிய உரிமத்தொகையில் 50% அபராத தொகையாக...
மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் படுகாயம்
வேடசந்தூர், ஆக. 2: வேடசந்தூர் அருகே திருக்கம்பட்டியை சேர்ந்தவர் சசிகுமார் (37). தனியார் நூற்பாலை எலக்ட்ரீசியன். நேற்று நூற்பாலையில் உள்ள மின்பெட்டியில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனை சரிசெய்யும் பணியில்சசிகுமார் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டு சசிகுமார் படுகாயமடைந்தார். உடனே சக பணியாளர்கள் அவரை...