கோபி அருகே மூதாட்டி சடலம் மீட்பு

ஈரோடு, நவ.13: கோபி அடுத்த மொடச்சூர் வாரச்சந்தையில் நேற்று முன்தினம் 60 வயது மதிக்கதக்க மூதாட்டி சடலம் கிடப்பதாக, மொடச்சூர் விஏஓ சுரேஷிற்கு, அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். அதன்பேரில், அங்கு வந்த சுரேஷ், கோபி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்....

ஈரோட்டில் 3 அரசு பள்ளிகள் சிறந்த பள்ளிகளுக்கான கேடயம் பெறுகின்றன

ஈரோடு, நவ. 13: தமிழ் நாட்டில், தொடக்க கல்வித் துறையின் கீழ் அரசு பள்ளிகள், ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடு நிலைப்பள்ளிகளில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளை, கல்வித் துறையில் உள்ள உயர்மட்டக்குழு ஆய்வு செய்து, அதில் 3 பள்ளிகளை தேர்வு செய்து கேடயம் பரிசு வழங்கப்படுகிறது. அதன்படி,...

அதிகமாக மாத்திரை சாப்பிட்டவர் பலி

ஈரோடு, நவ.13: ஈரோடு திருநகர் காலனியைச் சேர்ந்தவர் முகமது குத்துசூல் யாசர் அராபத் (40). இவர் தனக்கு திருமணமாகாத விரக்தியில் 2005ம் ஆண்டு முதல் மனநிலை பாதிக்கப்பட்டார். இதனால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தும், மனநல பாதிப்புக்கான மாத்திரைகளை சாப்பிட்டும் வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 9ம் தேதி அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை அவர் சாப்பிட்டுள்ளார். மயக்க...

கிணற்றில் தவறி விழுந்த முதியவர் பலி

ஈரோடு, நவ.12: திருப்பூர் மாவட்டம் பெரிய ஒட்டர்பாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (75). இவர், கடந்த 9ம் தேதி சின்ன ஒட்டர்பாளையத்தில் ஆடு, எருமைகளை மேய்க்க சென்றுள்ளார். இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு வராததால், சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் தேடி சென்றனர். அப்போது, அங்கிருந்த காட்டுப்பகுதியில் உள்ள கிணற்றின் அருகே நடராஜனின் கைத்தடி இருந்தது. இது...

இரும்பு ஷீட் திருடிய 2 வாலிபர் கைது

ஈரோடு, நவ.12: ஈரோட்டில் கான்கிரீட் போட பயன்படும் இரும்பு ஷீட்டுகளை திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் சிவகிரி கொடுமுடி சாலையை சேர்ந்தவர் லோகநாதன் (37). கட்டிட கட்டுமான பணிக்கு தேவையான உபகரணங்களை கான்ட்ராக்ட் எடுத்து தொழில் செய்து வருகிறார். லோகநாதன் ஈரோடு வீரப்பன்சத்திரம் தென்றல் நகரில் கான்கிரீட் போட தேவையான...

முற்றுகை போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் 116 பேர் கைது

ஈரோடு, நவ.12: தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர். ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். உதவி தலைவர் ராஜு முன்னிலை வகித்தார். இதில், தமிழ்நாடு அரசு சாதாரண மாற்றுத்திறனாளிகளுக்கு 1,500ம், கடும் ஊனமுற்றோருக்கு ரூ.2,000மும்...

மாவட்டத்தில் டெட் தேர்வை 41 மையங்களில் 13,660 பேர் எழுதுகின்றனர்

ஈரோடு, நவ.11: ஈரோடு மாவட்டத்தில் டெட் தேர்வு வருகிற 15ம் தேதி மற்றும் 16ம் தேதி இரண்டு நாட்களில் 41 மையங்களில் 13,660 பேர் எழுதுகின்றனர்.தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வை (டெட்) ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இதில், நடப்பாண்டுக்கான டெட் தேர்வு மாநிலம் முழுவதும் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. அதன்படி, வருகிற...

வாலிபரை எரித்து கொல்ல முயன்ற தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

பவானி, நவ.11: அந்தியூரை அடுத்த எண்ணமங்கலம் கோவிலூரை சேர்ந்தவர் சித்தமலை மகன் முருகன் (52). அதே பகுதியைச் சேர்ந்தவர் அரியா கவுண்டர் மகன் தங்கராசு (38). இருவருக்கும் மது வாங்கி வருவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 2.8.2020ம் தேதி தங்கராசு தனது மாமா சின்னசாமி என்பவர் புதிதாக கட்டிக் கொண்டிருக்கும் வீட்டின்...

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 295 மனுக்கள்

ஈரோடு, நவ.11: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்தார். முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட உதவித்தொகைகள் கேட்டும், வீட்டுமனைப்பட்டா, கல்விக்கடன், கலைஞரின் கனவு இல்லம் மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் 295 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்றன. மனுக்களை பெற்றுக் கொண்ட...

ஈரோட்டில் பாஜவினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, நவ.7: ஈரோடு காளைமாட்டு சிலை பகுதியில் பாஜ மகளிர் அணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதற்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் சண்முகபிரியா தலைமை தாங்கினார். சரஸ்வதி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.  கோவை பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம்...