முன்விரோத தகராறில் ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை: 5 பேர் போலீசில் சரண்

தாம்பரம், அக்.1: தாம்பரம் சானடோரியம், துர்கா நகர் பிரதான சாலை, மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வினோத் (எ) ஆத்தா வினோத் (26), ஷேர் ஆட்டோ ஓட்டுநர். இவர் நேற்று முன்தினம் இரவு பல்லாவரம் அருகே நாகல்கேணி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு ஆட்டோவில் இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல்...

கிளாம்பாக்கத்தில் அமைச்சர் ஆய்வு

கூடுவாஞ்சேரி, அக்.1:வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் கிளம்பாக்கம் பேருந்து நிலையம் உள்ளது. இங்கு வட மற்றும் தென் மாவட்டங்களுக்கு தினம் தோறும் ஆயிரக்கணக்கான அரசு பேருந்துகள், அரசு விரைவு பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் உட்பட சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளுக்கு மாநகர பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தொடர்...

ராட்சத அலையில் சிக்கி மாயமான சகோதரிகளின் உடல்கள் கரை ஒதுங்கின: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் சுற்றுலாவில் இறந்த பரிதாபம்

மாமல்லபுரம்,அக்.1: மாமல்லபுரம் அருகே கடலில் குளித்த போது, ராட்சத அலையில் சிக்கி மாயமான சகோதரிகளின் உடல், 2 நாட்களுக்கு பிறகு கரை ஒதுங்கின. சென்னை பெரம்பூர் சக்கரபாணி தோட்டம் அகரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர், உறவினர்கள் 17 பேருடன் ஒரு வேனில் மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு கடற்கரைக்கு 2 நாட்களுக்கு முன் சென்றார்....

விஜயதசமியை முன்னிட்டு அரசு இசைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை: காஞ்சிபுரம் கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம், செப்.30: காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில், விஜயதசமியை முன்னிட்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகையுடன் 2025-2026ம் கல்வி ஆண்டு விஜயதசமியை முன்னிட்டு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது....

காந்தி ஜெயந்தியையொட்டி டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு

காஞ்சிபுரம்,செப்.30: காஞ்சிபுரம் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி, அக்.2ம்தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் மற்றும் உரிம நிபந்தனைகளின்படி அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு டாஸ்மார்க் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் கீழ்கண்ட நாளில் நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும் என்ற...

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்: மேயர் மகாலட்சுமி யுவராஜ் வழங்கினார்

காஞ்சிபுரம், செப்.30: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் சமுதாயக் கூடத்தில் `உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது. ஆணையர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமை தாங்கி, `உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை தொடங்கி வைத்தார். பின்னர், முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, பதிவு செய்வதையும் ஆய்வு...

கேளம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1.70 கோடியில் கூடுதல் கட்டிடம் கட்ட அடிக்கல்

திருப்போரூர், செப்.27: கேளம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1.70 கோடியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய கேளம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் பள்ளி கட்டிடம் கட்ட ரூ.1 கோடியே 70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. கேளம்பாக்கம் ஊராட்சி...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

காஞ்சிபுரம், செப்.27: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வாசலில், வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பு செய்து காத்திருப்பு போராட்டம் நடத்திட மாநில தலைமை உத்தரவிட்டிருந்தது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட...

ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை தொடங்கியது

போரூர், செப்.27: ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் சிறப்பு சந்தை நேற்று தொடங்கியது. அக்டோபர் 5ம் தேதி வரை இந்த சந்தை நடக்கிறது. இதில் பொறி, கடலை, வாழைப்பழம், வாழை இலை, தேங்காய், பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்களை விற்பனை செய்ய தனியாக ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் பொருட்களை விற்பனை செய்து கொள்ளலாம்...

காஞ்சிபுரத்தில் நாளை நடைபெறும் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்க அழைப்பு

காஞ்சிபுரம், செப்.26: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர், பொதுமக்களிடையே உடற்தகுதி கலாச்சாரத்தை புகுத்தும் வண்ணம் அண்ணா மாரத்தான் ஓட்டம் ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களில் நடத்தப்படும் என அறிவித்தார். அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்து விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கும், உடற்தகுதி கலாச்சாரத்தை இளைஞர்களிடையே புகுத்துவதற்காக மாரத்தான் போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர...