செங்கல் சூளை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
தஞ்சாவூர், அக்.4: தென்காசி மாவட்டம் செங்கோட்டை பூலான் இருப்பு கதிரவன் காலனியில் வசிப்பவர் கனகராஜ் மகன் முருகன் வயது (37). கூலி தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி. இவர், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் முருகன் தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள உமையாள்புரம், தட்டுமால், பகுதியில் ஜாபர் அலி என்பவருக்கு சொந்தமான...
செல்போன் பறித்த 2 பேர் கைது
தஞ்சாவூர், அக்.4: தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை காமராஜர் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் தமிழரசன் வயது (34) மெக்கானிக். இவர் கடந்த 1ம் தேதி தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த இரண்டு பேர் திடீரென தமிழரசனிடமிருந்து செல்போனை பறித்து அவரை கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடினர்....
நாட்டுப்புற இசை விழா; சாரத்தில் நின்று வேலை பார்த்தபோது தவறி விழுந்த பெயிண்டர் சாவு
வல்லம், செப். 30: தஞ்சாவூர் அருகே வல்லம் அண்ணா நகர் பகுதியில் ஒரு வீட்டில் பெயிண்டிங் வேலை பார்த்த போது தவறி விழுந்து பெயிண்டர் பரிதாபமாக இறந்தார். தஞ்சாவூர் அருகே வல்லம் ஹை ஸ்கூல் ரோடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் கண்ணன் (49). பெயிண்டர். இவர் வல்லம் அண்ணா நகர் பகுதியில் ஒரு...
மெலட்டூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மண்டி கிடக்கும் செடிகள் அகற்றிட வலியுறுத்தல்
தஞ்சாவூர், செப். 30: திருக்கருகாவூர், மெலட்டூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள செடி, கொடிகள் அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாவட்டம் பாபநாசம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட திருக்கருகாவூர், மெலட்டூர் நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையோரத்தின் இருபுறமும் சீமை கருவேலமர முட்செடிகள்...
திருவையாறு கல்யாணபுரத்தில் தூய்மை சேவை இயக்க விழா
திருவையாறு, செப். 30: திருவையாறு அருகே கல்யாணபுரம் பகுதிகளில் தூய்மையே சேவை 2025 இயக்க விழா நடைபெற்றது. இதில் கல்யாணபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்திரா, கீதா, கல்யாணபுரம் கிளை மேலாளர் நாத், வட்டார ஒருங்கிணைப்பாளர்...
பட்டுக்கோட்டையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
பட்டுக்கோட்டை, செப்.27: பட்டுக்கோட்டையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் 618 மனுக்கள் பெறப்பட்டன. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. பட்டுக்கோட்டை நகராட்சித் தலைவர் சண்முகப்பிரியாசெந்தில்குமார், வருவாய் கோட்டாட்சியர் சங்கர் தொடங்கி வைத்தனர். நகர...
பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ்.சிறப்பு முகாம்
திருக்காட்டுப்பள்ளி, செப். 27: பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ்.சிறப்பு முகாம் நடைபெற்றது. தலைமையாசிரியர் ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அய்யாராசு, பள்ளி மேலாண்மைக்குழு தலைவி யோகேஸ்வரி முன்னிலை வகித்தனர். முன்னதாக உதவி தலைமையாசிரியர் முத்தமிழ்செல்வன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பூதலூர் வட்டாட்சியர் விவேகானந்தன், போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு...
திருக்காட்டுப்பள்ளி அருகே வேப்ப மரத்தில் பால் வடிந்ததால் பரபரப்பு
திருக்காட்டுப்பள்ளி, செப். 27: திருக்காட்டுப்பள்ளி அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அருகில் உள்ள தோட்டத்தில் பல்வேறு பழமரர் கன்றுகள் உள்ளது. அதில் சுமார் 10 ஆண்டு வயதுடைய வேப்பமரம் ஒன்று உள்ளது. இந்த வேப்பமரத்தில் பால்வடிவதை தோட்டத்தை பராமரிக்கும் பணியாளர்கள் பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறியதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வந்து அந்த மரத்தை...
பாபநாசம் ரயில் நிலையத்தில் ரூ.30 லட்சத்தில் தரைத்தளம் சீரமைக்கும் பணி
கும்பகோணம், செப். 25: கும்பகோணம் அருகே பாபநாசம் ரயில் நிலையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தரைதளம் சீரமைக்கும் பணியை ரயில்வே பொறியாளர்கள் ஆய்வு செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ரயில் நிலையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தரைதளம் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியினை தஞ்சை ரயில்வே முதன்மை பொறியாளர்கள் சத்தியநாராயணன், இளங்கோ, உதவி கோட்ட...