கட்டுமஸ்தான உடல், வசீகர பேச்சுகளால் 8 பெண்களை மயக்கி உல்லாசம் கல்யாண மன்னன் அதிரடி கைது: திருமண தகவல் மையம் மூலம் விதவைகளை குறிவைத்து வீழ்த்தியது அம்பலம்

சென்னை: சென்னையில் திருமண இணையதளம் மூலம் அறிமுகமாகி, மறுமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி 8 விதவைப் பெண்ணிடம் இருந்து தங்கச் சங்கிலி, நகையை பறித்துச் சென்ற எம்பிஏ பட்டதாரியை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (39), எம்.பி.ஏ. பட்டதாரியான இவர், ஏற்கனவே 2 திருமணங்களை செய்துள்ளார். அவர்களோடு குடும்பம் நடத்தி...

பழங்குடி மாணவனை அறையில் அடைத்து சரமாரி தாக்குதல் 17 மாணவர்கள் கைது

தர்மபுரி: திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலையை சேர்ந்தவர் திருவரசன் (22). தர்மபுரி ஒட்டப்பட்டி அம்பேத்கர் அரசு விடுதியில் தங்கி, அரசு கல்லூரியில் கணக்கியல் 3ம் ஆண்டு படித்து வருகிறார். பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்.  கடந்த 17ம் தேதி இரவு இவர் தங்கியிருந்த அறையில் இருந்த சக மாணவர், ஹெட்போனை காணவில்லை. நீ தான் திருடிவிட்டாய் என கூறி,...

10ம் வகுப்பு படித்து விட்டு 30 ஆண்டுகளாக மருத்துவம்: போலி டாக்டர் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அன்பழகன்(68). அப்பகுதியில் கிளினிக் வைத்து கடந்த 30 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு மருந்து, மாத்திரைகள் கொடுத்து சிகிச்சை அளித்து வந்தார். இவர் போலி டாக்டர் என வந்த ரகசிய தகவலின் பேரில் மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து நேற்று அம்மாபாளையத்திற்கு சென்று கிளினிக்கில் அதிரடி சோதனை...

ஆந்திராவில் செம்மரக்கட்டைகளை கடத்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 பேர் கைது

கடப்பா பெத்தசெட்டிப்பள்ளி அருகே செம்மரக்கட்டைகளை காரில் கடத்திவந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 பேரை திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 16 செம்மரக்கட்டைகள், 2 கார்கள், கோடரிகள், கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ...

செல்போன் சார்ஜரை திருடியதாக கூறி தனி அறையில் அடைத்து மாணவன் மீது தாக்குதல்: 17 மாணவர்கள் கைது

தர்மபுரி: தர்மபுரியில், கல்லூரி மாணவனை தனி அறையில் அடைத்து தாக்குதல் நடத்தி அதை செல்போனில் வீடியோ பதிவு செய்த, 17 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாமது மலை பகுதியை சேர்ந்தவர் 22வயதுடைய மாணவன் தர்மபுரி மாவட்டம் ஒட்டப்பட்டியில் உள்ள அம்பேத்கர்...

நெல்லையில் குடும்ப தகராறில் பயங்கரம்; காதல் மனைவி கழுத்தறுத்து கொலை: கணவர் போலீசில் சரண்

நெல்லை: நெல்லை, கங்கைகொண்டான் அருகே உள்ள ஆலடிப்பட்டியைச் சேர்ந்தவர் பிரித்திகா (20). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் அன்புராஜ் (24) என்பவரும் காதலித்து வந்தனர். ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், மாப்பிள்ளை வீட்டாரை பெண் வீட்டாருக்கு பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும் அவர்கள் இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம்...

கணவனை உயிருடன் புதைத்து கொன்ற மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள்

தர்மபுரி: தர்மபுரி அருகே 8 ஆண்டுக்கு முன்பு, கை, கால்களை கட்டி உயிருடன் புதைத்து பைனான்ஸ் அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. தர்மபுரி நகரில் காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரூபன் கவியரசு (42). இவர் தர்மபுரியில்...

ஒரகடம் அருகே காதலனை கத்தியால் குத்திய பெண் கைது

ஸ்ரீபெரும்புதூர்: அசாம் மாநிலம், சீல்பேரி பகுதியைச் சேர்ந்தவர் இம்ரான் சையத் (31). இவர், ஒரகடம் அருகே சென்னகுப்பம் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தங்கி, ஒரகடத்தில் ஒரு தனியார் தொழிற்சாலையில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலைபார்த்து வந்துள்ளார். முன்னதாக, அசாம் மாநிலம், குவாதி பகுதியைச் சேர்ந்த பரிதாபேகம் (31) என்ற பெண்ணுடன் சையத்துக்கு பழக்கம் ஏற்பட்டு,...

சென்னையில் பயங்கரம்; 100 பவுன், 2 கிலோ வெள்ளி, ரூ.5 லட்சம் கேட்டு பெண் வழக்கறிஞர் சித்ரவதை: மின்வாரிய செயற்பொறியாளர் கைது: மாமியார், மைத்துனருக்கு போலீஸ் வலை

அண்ணாநகர்: சென்னையில் 100 பவுன், 2 கிலோ வெள்ளி, ரூ.5 லட்சம் ரொக்கம் கேட்டு பெண் வழக்கறிஞரை சித்ரவதை செய்த மின்வாரிய செயற்பொறியாளர் கைது செய்யப்பட்டார். அவரது மாமியார், மைத்துனரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் சுமதி (26, பெயர் மாற்றம்). இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்....

புழல் 24வது வார்டில் அதிமுக கவுன்சிலர் கார் கண்ணாடி உடைப்பு

புழல்: புழல் 24வது வார்டில் வசிக்கும் அதிமுக கவுன்சிலரின் காரை ஷெட்டில் நிறுத்தி வைத்துள்ளார். அந்த காரின்மீது நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி, அதன் பின்பக்க கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பி சென்றனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், புழல் 24வது வார்டில் கிழக்கு வட்ட அதிமுக...