புதுகையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

புதுக்கோட்டை, ஆக.5: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் வகையில், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில், நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல்;...

கறம்பக்குடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி

கறம்பக்குடி, ஆக.5: கறம்பக்குடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூடை பின்னும் தொழிலாளி இறந்தார். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அடுத்த ஆத்தங்கரை விடுதி ஊராட்சி கீழவாண்டான் விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமயன்(56), கூடை பின்னும் தொழிலாளி. இவருக்கு, விஜயா என்ற மனைவியும், இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், இவர் நேற்று முன்தினம்...

போலீஸ் விசாரணை மோகனூர் அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி தொடக்கம்

கந்தர்வகோட்டை, ஆக. 5: தமிழகத்தில் மட்டுமல்ல நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெண்களுக்கு பணிபுரியும் இடங்கள், படிக்கும் இடங்கள் என எங்கும் பாலியல் ரீதியான தொல்லைகள் தினமும் நடந்துகொண்டுதான் உள்ளன. இதனால், அரசும், காவல்துறையும் பல்வேறு வகையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், மாணவிகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த கல்விநிலையங்களுக்கு போலீசார் அறுவுறுத்தியுள்ளது. இதனால், பள்ளிகள் தோறும்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொல்லியல் வட்டம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் வலியுறுத்தல்

  புதுக்கோட்டை, ஆக. 4: பொற்பனைக்கோட்டை உள்ளிட்ட பல தொல்லியல் எச்சங்கள் நிறைந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் தொல்லியல் வட்டம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மாநகர கிளையின் 16-ஆவது மாநாடு புதுக்கோட்டையில் நடைபெற்றது. கிளைத் தலைவர்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் வரும் 5ம் தேதி நடக்கிறது

  புதுக்கோட்டை, ஆக. 4: “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்களில் நகர்ப்புறப் பகுதிகளில் 13 அரசுத்துறைகளின் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத்துறைகளின் 46 சேவைகளும் வழங்கப்படும். பிற இனங்களில் அதிகபட்சமாக 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். மாவட்டத்தில் வரும் 5ம் தேதி கீழ்க்கண்ட இடங்களில் புதுக்கோட்டை மாநகராட்சி, 12 மற்றும் 30 வார்டு...

திருவரங்குலம் தீர்த்த குளத்தில் ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு ஏராளமான பெண்கள் பங்கேற்பு

  புதுக்கோட்டை, ஆக. 4: திருவரங்குலத்தில் தீர்த்த குளமான நைனார குளக்கரையில் ஆடிப்பெருக்கையொட்டி, மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் வேண்டி சுமங்கலி பெண்கள், கன்னிப் பெண்கள் வழிபாடு நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குலத்தில் தீர்த்த குலமான நைனார குளக்கரையில் ஆடிப்பெருக்கையொட்டி, மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் வேண்டி சுமங்கலி பெண்கள், கன்னிப் பெண்கள் கலந்து கொண்டு...

திருக்களம்பூர் மதகடி கருப்பர் கோயில் விழாவில் அரிவாளில் ஏறி குறி சொல்லிய சாமியாடி

  பொன்னமராவதி, ஆக. 3: பொன்னமராவதி அருகே திருக்களம்பூர் மதகடி கருப்பர் கோயில் விழாவில் சாமியாடிகள் நீண்ட தூரம் அரிவாளில் ஏறி நின்று சாமியாடி காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. பொன்னமராவதி அருகே திருக்களம்பூர் மதகடி கருப்பர் கோயிலில் ஆடி பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மதகடி கருப்பர் சாமியாடி, வீரபத்திரர் சாமியாடி, சின்ன...

பொன்னமராவதியில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு பேரணி

  பொன்னமராவதி, ஆக. 3: பொன்னமராவதியில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பொன்.புதுப்பட்டியில் தொடங்கிய பேரணிக்கு ரோட்டரி சங்கத்தலைவர் சுதாகரன் தலைமை வகித்தார். மண்டல ஒருங்கிணைப்பாளர் கருணாகரன் செயலாளர் முத்துக்குமார், பொருளாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ரோட்டரி மாவட்ட செயலாளர் குமரப்பன், டாக்டர் அழகேசன் ஆகியோர் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.பொன்.புதுப்பட்டி வர்த்தகர்...

புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டையில் இடியுடன் கூடிய திடீர் மழை

  புதுக்கோட்டை, ஆக.3: புதுக்கோட்டையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய திடீர் மழை பெய்தது. இத்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை உருவானதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெளியே...

திருமயத்தில் இன்று நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

  திருமயம், ஆக.2: திருமயத்தில் இன்று நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைய வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கிராமப்புற ஏழை, எளிய மக்களின் நலன் காக்கும் வகையில் மக்களின் தேவை அறிந்து அனைத்து வசதிகளும் தங்கு தடை இன்றி பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிக்கே சென்று கிடைத்திட...