மளிகை கடை மேற்கூரையை பிரித்து கொள்ளை முயற்சி

தர்மபுரி, நவ.15: தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே ஜக்கசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்(47). இவர், அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல கடையை திறந்துள்ளார். அப்போது, கடையின் பின்பக்க மேற்கூரை பிரிக்கப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், மகேந்திரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தார். இதன்பேரில், போலீசார் சம்பவ இடம்...

குழந்தைகள் தினவிழா கொண்டாட்டம்

தர்மபுரி, நவ.15: தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியை சுதா தலைமை வகித்தார். முன்னாள் பிரதமர் நேருவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அவரது சிறந்த பண்புகள் குறித்து விளக்கி பேசினர். தொடர்ந்து மாணவிகளின் சார்பில் பரதநாட்டியம், தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. மேலும்,...

11,935 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

தர்மபுரி, நவ.15: தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டு 11,935 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் சதீஸ் தெரிவித்தார். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நேற்று காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இருந்து காணொலி மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்...

இளம்பெண் மாயம் போலீசில் புகார்

அரூர், நவ. 13: மொரப்பூர் அருகே செட்ரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கைலாசம் மகள் சுகன்யா (25). இவர் தனது படிப்பை முடித்து விட்டு, கடந்த 4 ஆண்டுகளாக கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். வேலையை விட்டு விட்டு, கடந்த ஒரு மாதமாக வீட்டில் இருந்த அவர், கடந்த 10ம் தேதி இரவு...

தர்மபுரியில் கடும் குளிர்

தர்மபுரி, நவ. 13: தர்மபுரி மாவட்டத்தில், நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்துள்ளது. இதேபோல், வடகிழக்கு பருவமழையும் பரவலாக பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. இந்நிலையில், கடந்த 2 தினங்களாக வானம் வறண்டு காணப்பட்டது. கடும் குளிர்காற்று வீசியது. மேலும், பனிமூட்டம் காரணமாக, சாலையில் 30 அடி தொலைவில் உள்ள வாகனங்கள்...

தர்மபுரியில் டிரைவர் நடத்துனர்களுக்கு பயிற்சி

தர்மபுரி, நவ. 13: தர்மபுரி மண்டல அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் டிரைவர், நடத்துனர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவ் ராஜ் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு பாதுகாப்பான இயக்கம் குறித்து சிறப்பு பயிற்சி அளித்தார். இந்நிகழ்ச்சியில், பொதுமேலாளர் செல்வம், துணை மேலாளர் (தொழில்நுட்பம்), துணை மேலாளர் (வணிகம் மற்றும் போக்குவரத்து) மற்றும் ஓட்டுநர்,...

நிதி நிறுவன ஊழியர் உள்பட 3 பேர் மாயம்

தர்மபுரி, நவ.12: தர்மபுரி மாவட்டம், தொப்பூர் ஈசல்பட்டி சாமியார் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (55), விவசாயி. இவருக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். நேற்று முன்தினம் காலை, வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்ைல. இதுகுறித்த புகாரின் பேரில், தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதே...

வனவிலங்கு வேட்டையாட முயன்ற தந்தை, மகனுக்கு ரூ.2.50 லட்சம் அபராதம்

அரூர், நவ.12: தர்மபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் உத்தரவின் பேரில், வனப்பகுதிகளில் வேட்டைத்தடுப்பு, ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று காலை, மொரப்பூர் வனச்சரக அலுவலர் அருண்பிரசாத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, வனவர்கள் விவேகானந்தன், பவித்ரா, ஐயப்பன், வனக்காப்பாளர்கள் ரமேஷ்குமார், இளவரசன், வனக்காவலர் லட்சுமி ஆகியோர் கொண்ட குழுவினர், மொரப்பூர் வனச்சரகம், வாதாப்பட்டி பிரிவு,...

நிழற்கூடத்தை ஆக்கிரமித்து வைத்த தள்ளுவண்டி கடைகள்

காரிமங்கலம், நவ. 12: காரிமங்கலம் பேரூராட்சியில் ராமசாமி கோவில் பஸ் நிறுத்த பகுதியில், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்கூடத்தின் முன்புறத்தில், பானிபூரி கடை உட்பட தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால், இந்த நிழற்கூடத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இங்கிருந்து...

உழவர் தின விழா நிகழ்ச்சி

அரூர், நவ. 11: அரூர் வேளாண்மை துறை சார்பில், அட்மா திட்டத்தில் நாளை (12ம் தேதி) காலை 10 மணி அளவில், அரூர் வேளாண்மை துறை ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தில், உழவர் தின விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண் அறிவியல் நிலையம் பாப்பாரப்பட்டி வேளாண் பொறியியல்...