உரிமைக்கு குரல்

‘வீரன் சாவதே இல்லை. கோழை வாழ்வதே இல்லை’ என்றார் கலைஞர். கடந்த 4 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒன்றிய அரசுக்கு எதிராக திமுகவின் ஒவ்வொரு போராட்டங்களும் அந்த வகையில் வீரனுக்குரிய வீரியத்தை வெளிப்படுத்துகின்றன. தமிழை காக்கவும், தமிழ்நாட்டை காக்கவும், மாநில உரிமைகளை காக்கவும் இன்று இந்தியாவிலே ஒன்றிய அரசிடம் முட்டி மோதுகிற முன்னணி மாநிலமாக...

பகடைக்காய்

இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர், கடந்த ஜூலை 21ம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட விவகாரங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்....

அடுத்த மணிமகுடம்

ஒரு நாட்டின் மக்களுக்கு கல்வி மற்றும் சுகாதாரம் இரண்டுமே மிக முக்கியமானவை. கல்வி அறிவை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துகிறது. சுகாதாரம், உடல் மற்றும் மனநலத்தை பேணுவதற்கு இன்றியமையாதது. இவை இரண்டும் ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கான இரட்டைக் கூறுகளாக இருந்து வருகின்றன. இதை கருத்தில் கொண்டு தான் தமிழ்நாடு அரசு கல்வி மற்றும் சுகாதாரம்...

இரு ஹீரோக்கள்

கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் துணை முதல்வராக இருந்து வருகிறார். இருவருக்குள்ளும் ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் முதல்வர் பதவிப்போட்டி நடந்து வருகிறது. இருவரது ஆதரவாளர்களும் அடிக்கடி மோதிக்கொள்வது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது இவ்விஷயம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. வரும் நவம்பர்...

மாற்றம்... ஏமாற்றம்

பிரதமர் கடந்த 26, 27ம் தேதி தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க திறப்பு விழா, கங்கைகொண்டசோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்றார். 2 விழாக்களிலும் வேட்டி, துண்டு அணிந்து தன்னை தமிழ் உணர்வாளராகவே காட்டிக் கொண்டார். இது மகிழ்ச்சியான செய்தி தான். அதேநேரம் அந்த உணர்வானது தமிழ் மொழியின் பெருமை, பாரம்பரியத்தை...

பதில் இல்லை

பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர்; தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்து முடிந்து இருக்கிறது. ஒன்றிய அமைச்சர்கள், எதிர்க்கட்சி எம்பிக்கள் என இருதரப்பும் காரசாரமாக கேள்வி எழுப்பி, பதில் அளித்து இருக்கிறார்கள். ஆனால் பஹல்காம் தாக்குதல் ஏன், எப்படி நடந்தது? இது யாருடைய தோல்வி என்ற கேள்விக்கு மட்டும் இதுவரை பதில் கிடைக்கவில்லை. காஷ்மீர் மாநிலம்...

‘ரகசியம்’ வெளியாகுமா?

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து மே 7ம் தேதி இந்திய ராணுவம் `ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது. இதையடுத்து, இந்தியா-பாகிஸ்தான்...

தீர்வு கிடைக்குமா?

தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி வழக்கம்போல் இம்முறையும் தமிழகத்திற்கு நாங்கள் நிதியை அள்ளி அள்ளி தருகிறோம் என்கிற கோணத்தில் பேசிவிட்டு சென்றுள்ளார். ஆனால் தமிழகத்திற்கு ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டிய நிதியை பட்டியலிட்டு கொண்டே செல்லலாம். வெள்ள நிவாரண நிதி தொடங்கி கல்வி நிதி வரை பலமுறை கேட்டு கேட்டு தமிழகம் சலிப்படைய தொடங்கிவிட்டது என்பதே...

பெற்று தந்த பெருமை

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாத மாநிலங்களில் கவர்னர்களை கைப்பாவையாக வைத்து அத்துமீறலில் ஈடுபடுவது ஒன்றிய பாஜ அரசின் சர்ச்சைக்குரிய வாடிக்கைகளில் மிகவும் முக்கியமானது. தமிழ்நாடு, கேரளா போன்ற தென் மாநிலங்கள் மற்றும் மேலும் சில மாநிலங்களிலும் இந்த அடாவடி தொடர்கிறது. சமூக மேம்பாட்டின் மீது பெரும் அக்கறை கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளும் கவர்னர்களின்...

கேலிக்கூத்து

பீகாரில் வரும் நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன்பாக, இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் திருத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதற்கு ‘தீவிர சிறப்பு திருத்தம்’ என பெயரிட்டுள்ளது. தற்போது பீகாரை மையம் கொண்டிருக்கும் இந்த பணி நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திருத்த பணிக்கான தொடக்க புள்ளியாக 2003ம்...