ஆடி அம்மனின் அருளாடல்கள்
ஆடி மாதம் என்றாலே அம்மன் நினைவு வந்துவிடும். ஆடி மாதம் கடக மாதம். சந்திரனுக்கு உரிய மாதம். சந்திரன் தாயைச் சுட்டும் கிரகம். எல்லோரும் தங்கள் தாயாகக் கருதுவது அம்மனைத்தான். எனவே, சந்திரன் அம்மனைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். இந்த மாதத்தில் தந்தை கிரகமாகிய சூரியன், தாய்க் கிரகமாகிய சந்திரனின் இல்லத்தில் பிரவேசிக்கிறார். சக்தியும் சிவனும்...
இந்த வார விசேஷங்கள்
12.7.2025 - சனி திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் தேர் திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வைணவத் திருத்தலம். இந்த திருத்தலம் விருதுநகர் சிவகாசி அருகே அமைந்துள்ளது. திருத்தங்கல் பெருமாள் கோயில் ‘தங்காலமலை’ மீது அமைந்துள்ளது. பெருமாளின் தேவியர் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி ஆகியோரிடையே யார் உயர்ந்தவர்...
இந்த வார விசேஷங்கள்
5.7.2025 - சனி பெரியாழ்வார் திருநட்சத்திரம் பெரியாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றிப் பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். திருவில்லிபுத்தூரில் ஆனிமாதம் சுவாதி நட்சத்திரத்தில் கருடன் அம்சமாக அவதரித்தவர் ‘விஷ்ணு சித்தர்’ என்பது இயற்பெயர். திருவில்லி புத்தூரில் கோயில்கொண்டுள்ள வடபத்திரசாயி பெருமாளுக்கு அன்றலர்ந்த மலர்களைப் பறித்துப் பூமாலையாகச் சாற்றுவதைக் கைங்கர்யமாகக் கொண்டிருந்தார். ஆண்டாளின்...
இந்த வார விசேஷங்கள்
28.6.2025 - சனி ஆவுடையார் கோயில் ரிஷப வாகனத்தில் சிவபெருமான் உலா திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினை கொண்டது. ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே எழுப்பப்பட்ட இந்தக் கவிபாடும் கலைக் கூடத்தின் சிறப்புகளை ஒன்றிரண்டு வரிகளிலே சொல்லி அடக்கி விட முடியாது. இந்தக் கோயிலிலே மற்ற சிவாலயங்களில் இருப்பதுபோல கொடிமரம் இல்லை. பலி பீடம்...
அலைகடல் கடைந்த ஆரமுதே
கூர்ம ஜெயந்தி: 23-6-2025 “பிறப்பில் பல் பிறவிப்பெருமாள்” என்று பகவானைச் சொல்வார்கள். ஆயினும் அவன் பிறப்பெடுக்கிறான். இதனை வேதம் “அஜாயமானோ பஹூதா விஜாயதே'' என்று போற்றுகிறது. நம் பிறப்பு கர்மத்தின் அடியாகவும், அவன் பிறப்பு கருணையின் அடியாகவும் இருக்கிறது. அவதாரம் என்றாலே மேலே இருந்து கீழே இறங்குவது (descending) என்று பொருள். அப்படி எடுத்த...
இந்த வார விசேஷங்கள்
21.6.2025 - சனி திருத்தணி முருகன் திருக்குளம் வலம் வருதல் திருத்தணி முருகன் கோயிலில் உள்ள சரவணப் பொய்கை திருக்குளத்தில், பக்தர்கள் திருக்குளத்தை வலம் வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். திருக்குளத்தின் சுற்றிலும் சென்று, முருகப் பெருமானின் திருவருளைப் பெறுகின்றனர். திருத்தணி முருகன் கோயிலில், தெப்பத் திருவிழாவின்போது, உற்சவர், வள்ளி, தெய்வானையுடன் சமேதராய் மலையடிவாரத்தில் உள்ள சரவணப்...
இந்த வார விசேஷங்கள்
14.6.2025 - சனி சங்கடஹர சதுர்த்தி ஸ்திர வாரமான சனிக்கிழமை சங்கடஹர சதுர்த்தி வருகிறது. சங்கடஹர சதுர்த்தி விரதம் என்பது, விநாயகப் பெருமானை வேண்டி விரதம் இருக்க உகந்த நாள் ஆகும். வாழ்வில் சேரும் சகல சங்கடங்களையும் நீக்கும் சதுர்த்தி விரதம். சங்கடஹர சதுர்த்தி அன்று, காலையில் குளித்துவிட்டு, அருகிலுள்ள விநாயகர் ஆலயத்துக்குச் செல்ல வேண்டும்....
இந்த வார விசேஷங்கள்
7.6.2025 சனி சர்வ ஏகாதசி இந்த மாதம் வளர்பிறையில் வருகின்ற ஏகாதசிக்கு நிர்ஜலா ஏகாதசி என்று பெயர். இந்த ஏகாதசியில் நீரை கூட உட்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதால், இதற்கு “நிர்ஜலா ஏகாதசி” என்று பெயர் இந்த ஏகாதசியில் தான் பிரம்மா குபேரனைத் தோற்றுவித்தார். அவனுக்குச் சகல நிதிகளையும் தந்தார். எனவே இந்த ஏகாதசி உபவாசம்...
இந்த வார விசேஷங்கள்
31.5.2025 - சனி சேக்கிழார் குருபூஜை தெய்வச் சேக்கிழார் குலோத்துங்க சோழனின் அரசவையில் முதன்மை அமைச்சராக இருந்தவர். அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றை விளக்கும் “திருத்தொண்டர் புராணத்தினை” இயற்றியவர். பெரியபுராணத்தைப் பாட தில்லையில் சிவபெருமானே ‘உலகெலாம்’ என்று அடியெடுத்துக் கொடுத்தார். தில்லையில் சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திர நாளன்று புராணம் தொடங்கி, அடுத்த வருடம்...