கொரநாட்டுக் கருப்பூர் - பெட்டி காளியம்மன்

கொரநாட்டுக் கருப்பூர் - பெட்டி காளியம்மன் ‘‘ஏம்மா... நீ புள்ளதாச்சி தானேம்மா. ஏம்ப்பா நீ இன்னிக்கு முகச்சவரம் பண்ணினியா’’ தம்பதியர் இரு கேள்விகளுக்கும் தலையாட்டினார்கள். ‘‘மன்னிக்கணும்மா. நீங்க ரெண்டுபேரும் பெட்டிக்காளிய தரிசனம் பண்ணமுடியாதும்மா. ஏம்ப்பா நீ வேணா நாளைக்கு வாப்பா. நீ குழந்தை பெத்துகிட்டு வந்து தரிசனம் பண்ணிக்க தாயி. காளியாத்தா இங்க ரொம்ப உக்கிரமா...

ஒற்றியூர் சிவசக்தியின் பெருமைகள்

பௌர்ணமி நாளில் கடற்கரை ஓரம் கோயில் கொண்டிருக்கும் பெண் தெய்வங்களை வணங்கினோம் என்றால்; நம்முடைய பாவங்கள், பித்ரு தோஷம் நீங்கி, நல்லருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பழமையான கோயில்களில் ஆகர்ஷண ஈர்ப்பு சக்தி மனதிற்கும், உடலுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கும். திருவொற்றியூர் வடிவுடைய அம்மனின் பெருமைகளை எடுத்துக் கூறுவது சொல்லி அடங்காது. இக்கோயில், ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்தோன்றியது....

குரு காணிக்கை

சில வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது. காஞ்சி மகா ஸ்வாமிகள் அப்போது நகரத்தார் ஊர் ஒன்றில் முகாமிட்டு இருந்தார். அவர் தங்கியிருந்தது ஒரு நகரத்தார் சத்திரத்தில். அப்போது மடத்துக்கு பொருளாதார ரீதியாகச் சற்றுச் சிரமம் இருந்து வந்தது. மடத்தின் மானேஜருக்கு ஓர் எண்ணம் உதித்தது. ‘பணக்கார நகரத்தார்கள் வசிக்கும் ஊர் காரைக்குடி. நிறைய வீதிகள்...

யாத்திரையும் மேல்துண்டும்…

பல வருடங்களுக்கு முன்,ஸ்ரீகாஞ்சி மடத்தில் மகா ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தனர் ஓர் இளம் வைதிகத் தம்பதி. அந்த இளம் வைதிகருக்குச் சுமார் 25 வயதிருக்கும். அவர் மனைவிக்கு 20 இருக்கலாம். வேறு ஒரு பக்தரிடம் உரையாடிக்கொண்டிருந்த ஆச்சார்யாள், அதை நிறுத்திவிட்டு அந்தத் தம்பதியை நிமிர்ந்து பார்த்தார். அவர் முகத்தில் மகிழ்ச்சி பரவியது.பெரியவா உற்சாகத்துடன், “ஏண்டாப்பா, நீ...

ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில்

கிரகங்களே தெய்வங்களாக கோசெங்கண்ணன் என்ற மன்னனுக்கு குன்ம நோய் (அல்சர்) ஏற்படுகிறது. மிகுந்த அவதியுற்றான். மூன்று விருட்சங்கள் எங்கு இருக்கிறதோ அங்கு கோயில் கட்டினால் உன்னுடைய நோய் தீரும் என்ற அசரீரி கேட்கிறது. மன்னனும் பல கோயில்கள் கட்டுகிறான். ஆக்கூர் என்னும் இத்தலத்திற்கு வரும் கொன்றை, வில்வம், பாக்கு விருட்சங்களை மன்னன் பார்க்கிறார். உடனே, அந்த...

திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்

ராஜகோபுர தரிசனம்! 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான ஸ்தலம்தான் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில். மதுரைக்கு வடக்கே 12 கிலோ மீட்டர் தொலைவில் ஒத்தக்கடை அருகே அமைந்துள்ளது. இத்தலத்தில் காளமேகப் பெருமாள் மூலவராக அருள்பாலித்து வருகிறார். தாயார் மோஹனவல்லித் தாயார். பாற்கடலை கடைந்தெடுத்த அமுதத்தைப் பங்கிட்டுக் கொள்வதில் தேவர்கள், அசுரர்களுக்கிடையே சர்ச்சை உண்டானது. தங்களுக்கு உதவும்படி...

திருவாரூர் ராஜகோபுர கோஷ்ட சிற்பங்கள்

சிற்பமும் சிறப்பும் ஆலயம்: தியாகராஜர் கோயில் வளாகம், திருவாரூர். திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோயில் இந்தியாவில் உள்ள கோயில்களிலேயே அதிகபட்ச சிற்றாலயங்களைக் கொண்ட பெரும் கோயில் வளாகமாகும். இக்கோயில் வளாகம் மற்றும் அதன் மேற்கே உள்ள `கமலாலயம்’ குளத்துடன் சுமார் 30 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 9 கோபுரங்கள், 80 விமானங்கள், தீர்த்த முக்கியத்துவம் வாய்ந்த...

திகட்டாத இன்பம் தரும் திருநீரகம்

காஞ்சிபுரத்தில் அருகாமையிலேயே பல திருத்தலங்களை நாம் சேவிக்கலாம். திருமங்கை ஆழ்வார் அத்தனைத் திருத்தலங்களையும் மங்களாசாசனம் செய்திருக்கின்றார்.திருமங்கையாழ்வாரின் சரம பிரபந்தம் அதாவது ஆறாவது பிரபந்தம் திருநெடுந்தாண்டகம். அதிலே ஒரு அருமையான பாசுரம். அதிலே காஞ்சியில் இருக்கக்கூடிய அத்தனைத் தலங்களையும் ஒரே பாசுரத்தில் பட்டியலிட்டு மங்களாசாசனம் செய்கின்றார். ``நீரகத்தாய் நெடு வரையின் உச்சி மேலாய் நிலாத்திங்கள் துண்டத்தாய்...

அகோர வீரபத்திரர் அச்சம்... ஆக்ரோஷம்... அழகு!

சிற்பமும் சிறப்பும் ஆலயம்: திருவேங்கடமுடையான் மண்டபம், ஸ்ரீ வைகுண்டநாதப் பெருமாள் ஆலயம், ஸ்ரீ வைகுண்டம், தூத்துக்குடி மாவட்டம். காலம்: விஜயநகர - நாயக்கர் காலம் (பொ.ஆ.16ஆம் நூற்றாண்டு). அகோர வீரபத்திரர் கடினமான கருங்கற்களால் உருவாக்கப்பட்ட இந்த அச்சமூட்டும் தோற்றம் கொண்ட ‘அகோர வீரபத்திரர்’, விஜயநகர காலத்தின் சிற்பக்கலையின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றாகும். அகோர வீரபத்திரர்,...

தீவினை போக்கும் திருவேட்களம்

திருவேட்களம் திருக்கோயில் மிகமிக புகழ் பெற்றது. இந்த ஊரில்தான் புகழ்பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழகம் இருக்கிறது.கோயில் என்றாலே சிதம்பரம் நடராஜப் பெருமானைத் தான் குறிக்கும். அதற்கு அருகாமையில் இருக்கக் கூடிய இந்த தலம் 274 சிவத்தலங்களில் இரண்டாவது தலமாகப் போற்றப்படுகின்றது. வேட்கள நன்னகர் என்று இத்திருக்கோயில் தேவாரத்தில் போற்றப்படுகின்றது. பாசுபதேஸ்வரர் இவ்வாலயத்தில் நல்ல நாயகி என்னும் பெயருடைய...