திருச்சியில் மனவளர்ச்சி குன்றியோருக்கான விளையாட்டு விழா
திருச்சி, செப்.11: திருச்சியில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு, அவர்களது பெற்றோர்கள் சிறகுகள் அமைப்பு சார்பில் நடத்திய விளையாட்டு விழா நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் சுந்தரம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சமூக செயல்பாட்டாளரும், கல்வி உளவியளாரும் மற்றும் யுகா பெண்கள் நல அமைப்பு தலைவருமான அல்லிராணி பாலாஜி கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில்,...
மணப்பாறையில் 4 நாட்களுக்கு பிறகு மீண்டும் திடீர் மழை
மணப்பாறை, செப், 11: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 4 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மணப்பாறையில் எல்.நினோ பருவகால மாற்றத்தால் கடுமையான வெயில் தாக்கம் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் லேசாக மழை பெய்து வருகிறது. மணப்பாறையில் கடந்த 4 நாட்களுக்கு முன் திடீரென மாலை...
துவரங்குறிச்சியில் போதை விழிப்புணர்வு பேரணி
துவரங்குறிச்சி, செப்.10: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி தனியார் பள்ளியில் கடந்த 1ம் தேதியில் இருந்து என்சிசி மாணவ, மாணவிகள் முகாம் அமைத்து பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதைத் தொடர்ந்து நேற்று காலை துவரங்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து மாணவர்கள் போதை விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பேரணியை துவரங்குறிச்சி இன்ஸ்பெக்டர் ரகுராமன் மற்றும் என்சிசி லெப்டினன் கர்ணல் சரவணன்...
துறையூர் கீழநடுவலூர் கிராமத்தில் குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை: காலிக்குடத்துடன் பெண்கள் திரண்டனர்
துறையூர், செப்.10: துறையூர் அருகே கீழ நடுவலூர் கிராமத்தில் குடிநீர் வேண்டி ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ளது கீழநடுவலூர் கிராமம். இக்கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கீழநடுவர் கிராமத்தில் உள்ள கிழக்குத் தெரு மற்றும் தெற்கு தெரு பகுதிகளுக்கு கடந்த ஒரு மாத...
லாட்டரி விற்றவர் கைது
திருச்சி, செப்.10: திருச்சி இ.பி ரோடு பகுதியில் லாட்டரி விற்றவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி கோட்டை பகுதியில் லாட்டரி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் செப்.8ம் தேதி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது இ.பி ரோடு பார்க் அருகே லாட்டரி விற்ற தாராநல்லுார் நாகசுந்தரம் நகரைச் சேர்ந்த வீரன் (38) என்பவரை...
மணப்பாறையில் வைக்கோல் போரில் தீ
மணப்பாறை, செப்.9: மணப்பாறையில் வைக்கோல் போரில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்புத்துறை வீரர்கள் போராடி அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். மணப்பாறை அடுத்த செவலூர் மாமுண்டி பாலம் அருகே அப்பகுதியில் வசித்து வரும் குடியிருப்புவாசிகள் வைக்கோல் போர்களை வைத்துள்ளனர். இதில் இரவு திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மணப்பாறை...
தா.பேட்டை அருகே 15 கிலோ குட்கா பறிமுதல்
தா.பேட்டை, செப்.9: தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் தா.பேட்டையில் இருந்து முசிறி செல்லும் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைத்தம்பாறை பிரிவு ரோடு அருகே வந்த மொபட் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது முசிறி தாலுகா தும்பலம் பகுதியை சேர்ந்த அபிஷேக் (26) என்பவர்...
சிறுகனூர் பகுதியில் இன்று மின்தடை
திருச்சி, செப்.9: திருச்சி ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட சிறுகனூர் துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று (செப்.9) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளதால், சிறுகனூர், ஆவாரவள்ளி, திருப்பட்டூர், எம்.ஆர்.பாளையம், சி.ஆர்.பாளையம், சனமங்கலம், மணியங்குறிச்சி, வாழையூர், சீதேவிமங்கலம், நெடுங்கூர், நெய்குளம், நம்புகுறிச்சி, ஊட்டத்தூர், ஜி.கே.பார்க்,...
உதவித்தொகையை ரூ.6ஆயிரமாக உயர்த்தக்கோரி முற்றுகை போராட்டம் நடத்திய 250 பேர் கைது
திருச்சி, செப்.8: மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.6 ஆயிரமாக உயர்த்தி, அரசு வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் மாநிலம் தழுவிய மாபெரும் முற்றுகை போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்துக்கு புறநகர் மாவட்ட தலைவர் ராஜேஸ், மாநகர் மாவட்ட தலைவர்...


