பெட்டி, டீக்கடையில் குட்கா விற்ற 3 பேர் கைது

கரூர், ஜூலை. 5: கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வது சம்பந்தமாக, அந்தந்த காவல் நிலைய போலீசார்களும், மதுவிலக்கு போலீசார்களும் கடந்த சில மாதங்களாக தீவிரசோதனை மேற்கொண்டு வழக்கு பதிந்து வருகின்றனர். மேலும், மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில், குட்கா பொருட்கள் விற்பனை சம்பந்தமாக தனிப்படைகளும் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில்,...

கலைஞர் நினைவு நாள் அஞ்சலி தொடர்பாக கரூரில் இன்று திமுக செயற்குழு கூட்டம்

கரூர் ஆகஸ்ட் 5: கரூர் மாவட்ட கழகச் செயலாளர் வி. செந்தில் பாலாஜி ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: முத்தமிழ் அறிஞர் கலைஞர் கடந்த 7-8-2018ம் தேதி காலமானார். அன்னாரின் புகழ் தமிழ் இருக்கும் வரை ஓயாது உறங்காது. இது தொடர்பாக கரூர் மாவட்ட திமுக சார்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) கரூர் கலைஞர் அறிவாலயத்தில்காலை 10...

சம்பா சாகுபடிக்கு நெல் விதைகள்

கிருஷ்ணராயபுரம், ஆக. 4: கிருஷ்ணராயபுரம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் சம்பா நெல் சாகுபடிக்கு தேவையான விதை நெல்களை விவசாயிகள் மானிய விலையில் பெற்றுக்கொள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அரவிந்தன் கூறியுள்ளார். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் நடப்பு சம்பா பட்டத்திற்கு ஏற்ற நெல் விதை ரகங்களான ஆந்திராபொன்னி(BPT 5204), ADT 54, Co 50...

உலக நன்மைக்காக மதுரைவீரன் கோயிலில் சிறப்பு அபிஷேகம்

  க.பரமத்தி, ஆக.4: க.பரமத்தி அருகே புன்னம் ஊராட்சி சடையம்பாளையம் காலனியில் மதுரைவீரன் கோயிலில் உலக நன்மைக்காகவும் ஊர் கிராம பொதுமக்கள் நன்மைக்காக வேண்டி நடைபெற்ற சிறப்பு அபிஷேக விழாவில் சுற்று பகுதியினர் பங்கேற்று வழிபாடு செய்தனர். க.பரமத்தி ஒன்றியம் புன்னம் ஊராட்சி சடையம்பாளையம் காலனி பகுதிகளில் மதுரைவீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள், கருப்பண்ணசாமி, கன்னிமார்சுவாமி ஆகிய...

கரூர் மாவட்டத்தில் எதிர்பாராத கோடை மழை பொதுமக்கள் மகிழ்ச்சி

  கரூர், ஆக. 4: கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் கடுமையாக வெயில் வாட்டி வந்த நிலையில், கனமழை சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் குளிர்ந்த காலநிலை நிலவுகிறது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கரூர் நகரம், வெங்கமேடு, தாந்தோன்றிமலை, காந்திகிராமம் , உள்ளிட்ட இடங்களிலும், மண்மங்களம்,...

கிருஷ்ணராயபுரம் அருகே ஆளவந்தீஸ்வரர் கோயிலில் சுந்தரர் குருபூஜை

  கிருஷ்ணராயபுரம், ஆக. 3: கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரம்  ஆரணவல்லி சமேத ஆளவந்தீஸ்வரர் கோயிலில் சுந்தரர் குருபூஜை நடைபெற்றது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பழமை வாய்ந்த சிவாலயமான ஆரணவல்லி சமேத ஆளவந்தீஸ்வரர் கோயிலில் சுந்தரர் குருபூஜை நடந்தது. பூஜையை முன்னிட்டு சுவாமி, அம்பாள் மற்றும் சுந்தரர் (நால்வர்களுக்கு)...

குளித்தலை அருகே நாட்டுக்கோழிகள் விற்பனை அமோகம்

  குளித்தலை, ஆக. 3: இன்று ஆடி 18ட்டை முன்னிட்டு நாட்டுக்கோழிகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலையில் வாரந்தோறும் சனிக்கிழமை நாட்டுக்கோழி சந்தை நடைபெறுவது வழக்கம், நேற்று திருச்சி, கரூர், திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் நாட்டுக்கோழிகள் மற்றும் பண்ணை கோழிகளை...

பாரதிதாசன் பல்கலைக்கழக பேரவை உறுப்பினராக பேராசிரியர் தேர்வு

  கரூர், ஆக. 3: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினராக கரூர் அரசு கல்லூரி இணைப்பேராசிரியர் ப.பார்த்திபன் வெள்ளிக்கிழமை தேர்வு செய்யப்பட்டார். கரூர் அரசு கல்லூரியில் வெள்ளிக்கிழமை 01.08.2025 நடைபெற்ற ஆசிரியர் பிரநிதிக்களுக்கான திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினருக்கான தேர்தல் மூலம் பார்த்திபன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  தற்போது பார்த்திபன் கரூர் அரசு கலைக் கல்லூரியில்...

மகன் மாயம்: தாய் புகார்

  கரூர், ஆக 1: வீட்டை விட்டு வெளியே சென்ற தனது மகன் வீடு திரும்பவில்லை என தாய் போலீசில் புகாரளித்துள்ளார். கருர் வெங்கமேடு என்எஸ்கே நகரைச் சேர்ந்தவர் பாப்பாத்தி(70). இவர், வெங்கமேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கடந்த 24ம்தேதி, வீட்டில் இருந்து வெளியே சென்ற தனது மகன் வேலு இதுவரை வீடு திரும்பவில்லை...

கரூர் தாந்தோணிமலையில் வடிகால்களை தரம் உயர்த்த வேண்டும்

  கரூர், ஆக. 1: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை வெங்கடேஷ்வரா நகர்ப்பகுதியில் தாழ்வான நிலையில் உள்ள வடிகால்களை தரம் உயர்த்த வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை ராயனு£ர் இடையே வெங்கடேஷ்வரா நகர் பகுதி உள்ளது. நான்கு தெருக்கள் உள்ள இந்த பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த...