பெரியகோட்டை ஊராட்சியில் குடிநீர் இணைப்புக்கு தாமதம்: பொதுமக்கள் அவதி
உடுமலை, நவ. 19: உடுமலை அருகே உள்ள பெரியகோட்டை ஊராட்சியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், புதிதாக உருவான குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி, ஏராளமானோர் குடிநீர் இணைப்புக்கான டெபாசிட் தொகையை செலுத்தி உள்ளனர். பிவிசி குழாய்களையும் குடியிருப்புவாசிகளே வாங்கி தரவேண்டும் என ஊராட்சி நிர்வாகத்தால் கூறப்பட்டதாலும், பலரும் பிவிசி பைப்புகளை...
பாதுகாப்பற்ற நிலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம்
உடுமலை, நவ. 19: அணிக்கடவு ஊராட்சி ராமச்சந்திராபுரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் நகைகளை இங்கு அடகு வைத்து கடன் பெறுகின்றனர். மேலும், பல்வேறு சொத்து ஆவணங்களை பெற்றுக்கொண்டு விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படுகிறது. நகை, பணம் மற்றும் ஆவணங்கள் உள்ள இந்த கூட்டுறவு வங்கி வளாகம் பாதுகாப்பற்ற...
உத்தமபாளையம் வட்டமலைக்கரை ஓடை அணையில் சிசிடிவி கேட்டு மனு
திருப்பூர், நவ.18: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மனிஷ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த மணிகண்டன் அளித்த மனுவில், உத்தமபாளையத்தில் வட்டமலைக்கரை ஓடை அணை உள்ளது. பரம்பிக்குளம் ஆழியார் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் மழைநீர் அணைக்கு...
பெரியகுளம் கரையில் குப்பையால் சுகாதார சீர்கேடு
உடுமலை,நவ. 18: உடுமலை அருகே உள்ள பெரியவாளவாடி பிரிவில் பெரியகுளம் உள்ளது. திருமூர்த்தி அணை 8 குளம் பாசனத்தில் உள்ள இந்த குளம் பெரிய அளவில் நீர்பிடிப்பு உள்ள பகுதியாகும். நீர்வரத்து அதிகமாக இருக்கும்போது,இந்த குளம் நிரம்பி வழியும். தற்போது இந்த குளத்தின் கரையில் குப்பை, கூழங்களை குவித்து வைத்துள்ளனர். இறைச்சிக் கழிவுகளையும் கொட்டிச் செல்கின்றனர்....
எஸ்ஐஆர் பணி தொடர்பாக திமுக ஆலோசனைக்கூட்டம்
திருப்பூர், நவ.18: தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், பொதுமக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் மற்றும் குழப்பங்கள் உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகமான முரசொலி...
எஸ்ஐஆர் தொடர்பாக ஓட்டுச்சாவடிகளில் சிறப்பு மையம்
காங்கயம், நவ. 15: காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் எஸ்ஐஆர் 2025 சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட கணக்கிட்டு படிவங்களை, பூர்த்தி செய்து வழங்க வசதியாக தாங்கள் வாக்களிக்கும் ஓட்டுச்சாவடிகளில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக, வாக்குச்சாவடி நிலை அலுவலர், பிஎல்ஓ தன்னார்வலர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாக்காளர்கள் இன்றும் (சனி),...
எஸ்.ஐ.ஆர் பணியை புறக்கணித்து அலுவலர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
அவிநாசி, நவ. 15: எஸ்.ஐ.ஆர். பணியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களை ஈடுபடுத்துவதை கண்டித்து, எஸ்.ஐ.ஆர் பணியை புறக்கணித்து மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொருளாளர் ரமேஷ்குமார், வட்டாரத் தலைவர் ஆனந்தன், வட்டார செயலாளர்...
திருப்பூரில் திடீர் மழை: பொதுமக்கள் அவதி
திருப்பூர், நவ. 15: தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் அறிவித்திருந்தது. அதன்படி திருப்பூரில் நேற்று முன்தினம் மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை 6 மணி முதல் திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் மிதமான மழை பெய்தது. மழையால் திருப்பூர் அவிநாசி ரோடு, பி.என்.ரோடு, ஊத்துக்குளி...
திமுக கிரிக்கெட் போட்டி வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு
உடுமலை, நவ. 13: துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாளை முன்னிட்டு குடிமங்கலம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள வாகத்தொழுவு ஊராட்சி வி.வேலூர் கிராமத்தில் திமுக சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடந்தது. போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணியம் தலைமையில் குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் அணிகடவு கிரி,...


