சோமனூரில் பரபரப்பு; டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டம்
சூலூர், செப்.8: கோவை மாவட்டம் சோமனூரில் பள்ளி, வழிபாட்டு தலம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை கருமத்தம்பட்டி நகராட்சி சோமனூரில் நொய்யல் ஆற்றுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடை எண் 2270 இயங்கி வருகிறது. இந்த. டாஸ்மாக் கடை பொதுமக்களுக்கு பெரும் இடையூறாகவும், வழிபாட்டுத்...
பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கோவை, செப்.8: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இஎஸ்ஐ ெதாகையை திரும்ப வழங்க கோரி பல்கலைக்கழக ஊழியர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக நிர்வாகத்தின் இஎஸ்ஐ சட்ட மீறல் மற்றும் தொழிலாளர் விரோத போக்கு நடைபெறுவதாக கூறி, அதனை கண்டித்து பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம் சார்பில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்....
ஓட்டல், பேக்கரி, இறைச்சி கடைகளில் விலைப்பட்டியல் வைக்க வலியுறுத்தல்
கோவை, செப். 7: கோவையில் உள்ள ஓட்டல்கள், பேக்கரிகள், இறைச்சி கடைகளில் விலைப்பட்டியல் வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ஓட்டல்கள், உணவகங்கள் மற்றும் இறைச்சி மற்றும் பேக்கரிகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் இதர பொருட்களின் விலைப்பட்டியல் பொதுமக்கள் எளிதில் பார்க்கக்கூடிய வகையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும். ஆனால்,...
சிறுமுகை பேரூராட்சியில் ரூ.1 கோடியில் ஆழ்துளை கிணறு, பம்பு செட் பணி துவக்கம்
மேட்டுப்பாளையம், செப்.7: சிறுமுகை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் 10 இடங்களில் ஆழ்துளை கிணறு, பம்பு செட் மற்றும் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு பணிகள் மாநில பேரிடர் நிவாரண நிதி 2026-2027ம் ஆண்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பில் நடைபெற உள்ளன. இப்பணிகளை சிறுமுகை பேரூராட்சி வாரச்சந்தை வளாகத்தில் நேற்று எம்எல்ஏ சுனில் ஆனந்த்...
டாஸ்மாக் கடையில் தகராறு: விற்பனையாளர் மண்டையை உடைத்தவர் கைது
கோவை, செப். 7: ராமநாதபுரம் மாவட்டம், அருணாச்சல தேவர் காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ் பாபு (45). இவர் கோவை வீரகேரளம் பகுதியில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடையில் சூபர்வைசராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 4ம் தேதி மாலை சுரேஷ் பாபு விற்பனையாளர்களான சரவணகுமார், மதியழகன் மற்றும் சேஷராஜா ஆகியோருடன் கடையில் பணியில் இருந்தார்....
இருப்பது 24... செயல்படுவது 5...
கோவை, செப். 5: கோவை வஉசி பூங்காவில் சாலையோரை உணவு பூங்கா திட்டம் 2023 அக்டோபரில் துவங்கப்பட்டது. இத்திட்டம், ரூ.1 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 2024 மார்ச் மாதத்திற்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில், 24 கடைகளும் அண்மையில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டன. இதனுடன் சிறிய உணவு அருந்தும் பகுதி மற்றும் சிறிய...
ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தினவிழா
கோவை, செப்.5: கோவை நவ இந்தியாவில் உள்ள ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாளையொட்டி ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி ராம்குமார் தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் ஆசிரியர் தினத்தின்...
பட்டுக்கூடு விலை உயர்ந்தது
கோவை, செப்.5: கோவை மாவட்டம் பாலசுந்தரம் ரோட்டில் பட்டு வளர்ச்சி துறை செயல்பட்டு வருகிறது. இந்த மைய வளாகத்தில் பட்டுக்கூடு ஏலம் வாரத்தின் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் நடைபெற்று வருகிறது. இங்கு கோவை மட்டுமின்றி அருகில் உள்ள திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்த ஆண்டு...
சத்துணவு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு, ஆக. 29: ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு பள்ளி சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் சம்பத் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாநில நிர்வாகி ஜெயலட்சுமி பங்கேற்று கோரிக்கைகள் குறித்து பேசினார். இதில், சத்துணவு...


