Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஜாக்டோ-ஜியோ சார்பில் இன்று வேலை நிறுத்த போராட்டம் அரசு பள்ளிகளில் கற்றல் பணி பாதிக்கும் அபாயம்

கோவை, நவ. 18: கோவையில் ஜாக்டோ ஜியோ சார்பில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் இன்று அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், பள்ளிகளில் கற்றல் பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் அடையாள வேலைநிறுத்த போராட்டம் இன்று நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் அரசு துவக்கபள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்கவுள்ளனர். இதனால், அரசு பள்ளிகளில் கற்றல் பணி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போன்ற முக்கிய சங்கங்கள் பங்கேற்கின்றன.

இதில், புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பகுதி நேர ஆசிரியர்கள், கிராமப்புற செவிலியர், அங்கன்வாடி ஊழியர்களை முழு நேர பணியாளர்களாக பணியமர்த்தி, அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். மேலும், கோவை மாவட்டத்தில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம், பொள்ளாச்சி தெற்கு வட்டார வளர்ச்சி அலுவலகம், வால்பாறை வட்டாட்சியர் அலுவலகம், சூலூர் வட்டாட்சியர் அலுவலகம், அன்னூர் வட்டாட்சியர் அலுவலகம், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம் உள்பட 6 இடங்களில் வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்தில் ஆசிரியர்கள் அதிகளவில் பங்கேற்க உள்ளதால் பள்ளிகளில் கற்றல் பணி கடுமையாக பாதிக்கும் என தெரிகிறது.

இந்நிலையில், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டாலும் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் எனவும், மாற்று ஆசிரியர்கள் மூலம் பள்ளிகளில் கற்றல் பணி தடையின்றி மேற்கொள்ள தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.