விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் கட்டாயம்

தர்மபுரி, நவ. 7: தர்மபுரி வேளாண்மை இணை இயக்குநர்(பொ) ரரத்தினம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில், பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாய குடும்பங்களுக்கு, நான்கு மாதத்திற்கு ஒருமுறை தலா ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பட்டு...

அரூரில் தக்காளி விலை உயர்வு

அரூர், நவ.7: தர்மபுரி மாவட்டம் அரூர், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, பொம்மிடி, மொரப்பூர், கம்பைநல்லூர், இருமத்தூர், ஒடசல்பட்டி கூட்ரோடு உள்ளிட்ட இடங்களில், 20க்கும் மேற்பட்ட தக்காளி மண்டிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதி விவசாயிகளிடம் தக்காளியை கொள்முதல் செய்து சென்னை, பெங்களூரு, கோவை, பாண்டிசேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு வியாபாரிகள் விற்பனைக்கு அனுப்புகின்றனர். உள்ளூர் வியாபாரிகளும் மண்டிகளில் இருந்து...

செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலக ஜீப் ஏலம்

தர்மபுரி, நவ.7: தர்மபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலக ஈப்பு (வாகன எண் TN09 BG 2345) பொலிரோ எல் எக்ஸ் என்ற வாகனம் கழிவு செய்யப்பட்டுள்ளது. கழிவு செய்யப்பட்ட இவ்வாகனத்தை ரூ.75 ஆயிரம் என்ற விலைக்கு விற்பனை செய்ய...

ஜோதி பயணம் வரவேற்பு நிகழ்ச்சி

காவேரிப்பட்டணம், நவ.5: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பஸ் நிலையம் முன்பு, இந்திய தொழிற்சங்க மையம் 16வது மாநில மாநாட்டிற்கான சேலம் சிறை தியாகிகள் நினைவு ஜோதி பயணம் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநில செயலாளர் நாகராஜன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் உதயகுமார், நிர்வாகிகள் சந்திரன், சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கம்யூனிஸ்ட் கட்சியின்...

வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி வகுப்பு

ஊத்தங்கரை, நவ.5: ஊத்தங்கரை(தனி) சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் ஒப்புதல் மற்றும் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வாக்காளர் பதிவு அலுவலரும், மாவட்ட ஆதி திராவிடர்...

ரூ.7.81 லட்சத்திற்கு கொப்பரை விற்பனை

கிருஷ்ணகிரி, நவ.5: போச்சம்பள்ளியில் இ-நாம் முறையில் ரூ.7.81 லட்சத்திற்கு 4285 கிலோ கொப்பரை விற்பனையானது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இ-நாம் முறையில் கொப்பரை ஏலம் நடந்தது. இதில், 4285 கிலோ கொப்பரையை கொண்டு வந்தனர். கிலோ ஒன்றுக்கு அதிகப்பட்சம் ரூ.216க்கும், குறைந்தபட்சம் ரூ.86.99க்கும், சராசரியாக கிலோ ஒன்று ரூ.212க்கும் விற்பனையானது. அதன்படி...

டூவீலரில் இருந்து தவறி விழுந்து முதியவர் பலி

கிருஷ்ணகிரி, நவ.1: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே மரவாரனப்பள்ளியை சேர்ந்தவர் முத்தப்பா(65), கூலி தொழிலாளி. இவர் கடந்த 22ம் தேதி டூவீலரில் காசிரிகானப்பள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக டூவீலரில் இருந்து தவறி கீழே விழுந்தார். அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக...

அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம்

காவேரிப்பட்டணம், நவ.1: காவேரிப்பட்டணம் அருகே மணிநகர் அரசு நடுநிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை மற்றும் கழிப்பறை கட்டிடங்களை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் திறந்து வைத்தார். இக்கட்டிடங்கள், நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் கீழ், அமீகா அறக்கட்டளை அமைப்பால், வால்வாயில் புளூயிட் பவர் இந்தியா நிறுவனத்தின் சமூக பொறுப்பு திட்டத்தின் ஆதரவுடன் மார் ₹12...

ரூ.4.9 கோடியில் சாலை அமைக்கும் பணி

ஓசூர், நவ.1: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதி, ஓசூர் ஊராட்சி ஒன்றியத்தில் நபார்டு திட்டத்தின் கீழ், ஓசூர்-மாலூர் சாலை முதல் சிங்கசாதனப்பள்ளி வரை சுமார் ரூ.4.9 கோடி மதிப்பில் தார்சாலை அமைக்கப்படுகிறது. முதலமைச்சர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பெலத்தூர் முதல் தாளப்பள்ளி வழியாக கர்நாடக எல்லை வரை சுமார் ரூ.55 லட்சத்து...

2வது கணவர் மாயம் இளம்பெண் புகார்

ஊத்தங்கரை, அக்.31: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பெரியதள்ளபாடி அருகே ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை (25). இவரது மனைவி ஈஸ்வரி (20). கருத்து வேறுபாட்டால் ஈஸ்வரி, தனது முதல் கணவரை பிரிந்து இரண்டாவதாக ஏழுமலையை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த 27ம் தேதி, ஈஸ்வரி தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் வீடு...