வடகிழக்கு பருவமழை எதிரொலி; உஷாரா இருங்க மருத்துவர்களே...! மருத்துவமனைகளில் 24 மணிநேரம் மின்சாரம்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளுக்கு வெள்ள நீர் சூழ்ந்து நோய்த்தொற்று பரவும் அபயாம் உள்ளது. இதனால் பொது சுகாதாரத்துறை பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வடகிழக்கு பருவமழை காலங்களில் நோய்க்கிருமிகளால் கடுமையான வயிற்றுப்போக்கு, லெப்டோஸ்பிரோசிஸ், காய்ச்சல், H1N1, டெங்கு,...
உங்க வீட்டில் வைஃபை வேகத்தை அதிகரிக்கணுமா...? இதை செய்யுங்க... முதல்ல...!!
இணைய தேவை என்பது இன்று அனைவருக்குமே இன்றியமையாதது. அதிலும், குறைந்த இணைய வேகம் பலருக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. அப்படி, நீங்களும் வீட்டில் பலவீனமான வைஃபையுடன் போராடி வருகிறீர்களா? அப்படியெனில், நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய மாற்றங்களான ரூட்டர் வைப்பதற்கான சரியான இடம், எக்ஸ்டன்ஷன்களை பயன்படுத்துதல் மற்றும் நெட்வொர்க்கை பாதுகாத்தல் போன்ற எளிய உதவி குறிப்புகள் உங்கள்...
தமிழகத்தில் 1 லட்சத்தில் 100 பேருக்கு பக்கவாதம்: இளைஞர்களிடையே தொப்பையால் பக்கவாதம் அதிகரிப்பு; மருத்துவர்கள் தகவல்
* புரதச்சத்து உள்ள உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் * 4 1/2 மணிநேர கோல்டன் ஹவர்ஸ் * சிறப்பு செய்தி மனிதனின் வாழ்க்கை முறை மாற்றம் அடைந்து வருவதால் பக்கவாதம், மாரடைப்பு உள்ளிட்ட கார்டியோ வாஸ்குலர் நோய் பாதிப்பும் அதனால் ஏற்படும் மரணத்தின் விகிதமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதற்கு முக்கியக் காரணமே...
சிறப்பு சுருக்க முறை பட்டியல்: சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்; வித்தியாசம் என்ன?
* சிறப்பு செய்தி இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப் பணிகளை மேற்கொள்ளும். இந்த பணிகள் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறும். முன்னதாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதில் உள்ள பெயர் விவரங்களை சரிபார்த்து திருத்திக் கொள்ளவும், பெயர்...
கல்வி கனவுக்கு எந்த தடையும் இருக்கக்கூடாது; நடையாய் நடந்த மாணவர்களுக்கு ஜீப் வழங்கிய முதல்வர்: கரடு முரடான பாதையில் பள்ளிக்கு ஜாலி பயணம், சேர்க்கை மீண்டும் அதிகரிப்பு, மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி
தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை மூலம் மாணவ-மாணவிகள் இடைநிற்றலை தடுக்கவும், தொடர்ந்து அவர்களுக்கு தரமான கல்வி வழங்கவும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழ்நாட்டின் பெரும்பாலான மலைக்கிராமங்கள் மற்றும் அடர்ந்த வனப்பகுதியையொட்டி வசிக்கும் பகுதிகளில் இருந்து உரிய போக்குவரத்து வசதி இல்லாமல் பல கிலோ மீட்டர் தொலைவிற்கு நடந்து செல்லும் சூழல் உள்ளது. மேலும் வனப்பகுதிகளில் யானை,...
வெளிநாட்டினர் குவியும் சர்வதேச நகரமான ஆரோவில்லில் விரைவில் டிராம் சேவை: தெற்கு ரயில்வே அதிகாரிகள் குழு ஆய்வு
பரபரப்பான இவ்வுலகில் பொது போக்குவரத்துக்கு பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் என பல்வேறு நவீன வசதிகள் ஏராளம் இருக்கின்றன. ஆனால், இவை கண்டுபிடிப்பதற்கு முன்பாக, பழங்காலத்தில் மக்கள் ஓரிடத்தில் இருந்து வேறு ஊர்களுக்கு நடந்தே தான் சென்றனர். அதன்பிறகு மாட்டு வண்டி, குதிரை வண்டிகள் வந்தன. அதன்பின்னர் டிராம் வண்டி பயன்படுத்தப்பட்டு வந்தது. ரயில்...
கிண்டி கத்திப்பாரா சதுக்கத்தை போன்று இரவுநேர பொழுதுபோக்கு ஸ்பாட்டாகிறது வேளச்சேரி பறக்கும் ரயில் சர்வீஸ் ரோடு: இறுதிகட்ட பணிகள் தீவிரம்; அதிகாரிகள் தகவல்
* சிறப்பு செய்தி தென்சென்னையில் உள்ள முக்கியமான வர்த்தகப் பகுதியாக வேளச்சேரி திகழ்கிறது. இங்கிருந்து சென்னை கடற்கரை வரை எம்ஆர்டிஎஸ் பறக்கும் ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது. இந்த சூழலில் வேளச்சேரியில் இருந்து செயின்ட் தாமஸ் மவுண்ட் வரை ரயில் சேவையை நீட்டிக்கும் திட்டம் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. நடப்பாண்டு இறுதியில் இந்த சேவை...
வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தமிழகத்தின் மின்தேவை கணிசமாக குறைந்தது: சென்னையில் ஒரே வாரத்தில் 1,035 மெகாவாட் சரிவு
சிறப்பு செய்தி தமிழ்நாட்டில் தற்போது வீடு, வணிகம், விவசாயம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளையும் சேர்த்து மொத்தம் 3.37 கோடி மின் இணைப்புகள் உள்ளன. வீட்டு இணைப்புகள் மட்டும் 2.4 கோடி. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில்தான் மின் நுகர்வோர் அதிகளவில் உள்ளனர். தினமும் மின்சார நுகர்வு சராசரியாக 16,000 மெகாவாட்டாக உள்ளது. கோடைகாலங்களை பொறுத்தவரை வீடு,...
பல ஆண்டுகளாக தணிக்கை செய்யப்படாத மாநகராட்சி கணக்குகள் ரூ.2 லட்சம் கோடியின் மர்மம் என்ன? கைகொட்டி சிரிக்கிறது குஜராத் மாடல், அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி
2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் பாஜவால் முன்வைக்கப்பட்ட அல்லது கட்டமைக்கப்பட்ட பிரதான விஷயங்களில் ஒன்று ‘குஜராத் மாடல்’. அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியின் பிம்பத்தை உயர்த்தும் வகையில், குஜராத் மாடல் பிரசாரத்தை பாஜ முன்னெடுத்தது. குஜராத் மிளிர்கிறது; ஒளிர்கிறது; முன்னேறுகிறது என்றும், மோடி பிரதமரானால் இந்தியா குஜராத் போல உச்சபட்ச உயர்வுகளை...
