ரூ.5 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
நாமக்கல், நவ.19:நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், பருத்தி ஏலம் நேற்று நடைபெற்றது. நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களை சேர்ந்த விவசாயிகள், 230 மூட்டை பருத்தி கொண்டு வந்திருந்தனர். திருச்செங்கோடு, கொங்காணபுரம், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய ஊர்களை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். விவசாயிகள் முன்னிலையில், கூட்டுறவு சங்க...
இளையபெருமாள் கோயிலில் சிறப்பு யாகம்
திருச்செங்கோடு, நவ.19: திருச்செங்கோடு தாலுகா, இறையமங்கலம் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் (எ) இளைய பெருமாள் சுவாமி கோவிலில் விஷ்ணு புண்யகால சிறப்பு யாகம் நடைபெற்றது. மலைமீது வீற்றிருக்கும் இளையபெருமாள் கோயிலில் அருள்பாலிக்கும் கருடாழ்வாருக்கு பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள், இளநீர், திருமஞ்சனம், கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. இளையபெருமாளுக்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு,...
கலெக்டர் ஆபீஸ் முன் வாலிபர் திடீர் தர்ணா போலீசார் சமரசம்
நாமக்கல், நவ.18: ராசிபுரம் தாலுகா, கார்கூடல்பட்டி ஊராட்சி மெட்டாலாவை சேர்ந்தவர் பாலமுருகன் (29). இவர் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலககம் முன் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மெட்டாலா பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, ஒரு தனிநபர் கட்டிடம் கட்ட முயன்றார். இதுகுறித்து வருவாய்த் துறைக்கு நான் தகவல்...
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கேட்டு கலெக்டரிடம் மனு
நாமக்கல், நவ. 18: நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஜல்லிக்கட்டு விழா குழுவினர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், வருவாய் அலுவலரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, எருமப்பட்டி ஒன்றியம், பொன்னேரி கைகாட்டியில் வரும் ஜனவரி 18ம்தேதி நடந்த ஊர் பொதுமக்கள்...
மா.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
நாமகிரிப்பேட்டை, நவ. 18: நாமகிரிப்பேட்டை எடுத்த தொப்பப்பட்டி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள கழிப்பறையை, பயன்பாட்டுக்கு திறக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் கிளை செயலாளர் குப்பண்ணன் தலைமை வகித்தார். போராட்டத்தின் நோக்கங்களை விளக்கி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்...
ரூ.63 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம்
மல்லசமுத்திரம், நவ.15: மல்லசமுத்திரத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.63,717.10க்கு கொப்பரை விற்பனையானது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. இதில் பள்ளக்குழி, காளிப்பட்டி, செண்பகமாதேவி, சூரியகவுண்டம்பாளையம், ராமாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 60 கிலோ எடை கொண்ட 11 மூட்டை கொப்பரையை...
வாகன ஓட்டிகளுக்கு ஜில் மோர் வழங்கி விழிப்புணர்வு
நாமக்கல், நவ.15: நாமக்கல்லில், ஹெல்மெட் அணிந்து பைக்கில் செல்பவர்களுக்கு, மோர் வினியோகம் செய்து, போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நாமக்கல் நகரில், போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டும் நபர்கள் மீது, போக்குவரத்து போலீசார் தொடர்ந்து அபராதம் விதித்து வருகின்றனர். தமிழக அளவில், சாலை விபத்துக்கள் அதிகம் நடைபெறும் மாவட்டங்களில் நாமக்கல் 3வது இடத்தில் உள்ளது....
10,061 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல்
நாமக்கல், நவ.15: நாமக்கல் மாவட்டத்தில் நடப்பாண்டு 10,061 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட உள்ளதாக ராஜேஸ்குமார் எம்.பி., தெரிவித்தார். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நேற்று காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இருந்து காணொலி மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்...
பெண்ணை தாக்கிய விவசாயி கைது
மல்லசமுத்திரம், நவ.13: மல்லசமுத்திரம் ஒன்றியம், மொஞ்சனூர் கிராமம், கரட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (39), விவசாயி. திருமணம் ஆகாதவர். இவருக்கும், பக்கத்து தோட்டத்தை சேர்ந்த ரவி (49), அவரது மனைவி கோகிலா (45) என்பவருக்கும் இடையே, கடந்த பல வருடமாக வாய்க்கால் தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 28ம் தேதி வழக்கம் போல், இரு...


