புரிந்தால் புரிந்து கொள்ளுங்கள், இல்லை என்றால் சும்மா இருங்கள்: நான் தூக்கி போட்ட ரிமோட்ட வேறு ஒரு ஆளு தூக்கிட்டு ஓடிட்டான்; ரிமோட் ஸ்டேட்டில் இருக்கவே திமுகவுடன் கூட்டணி சேர்ந்தோம்: கமல் பரபரப்பு பேச்சு

வல்லம்: ரிமோட் ஸ்டேட்டில் இருக்க வேண்டும், வேறு ஒரு அளு தூக்கிட்டு ஓடிட்டான். அந்த ரிமோட் ஸ்டேட்டில் இருக்கவே திமுகவுடன் கூட்டணி சேர்ந்தோம் என்று கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே புதுக்கரியப்பட்டியில் கவிஞர் சினேகன் தந்தை படத்திறப்பு மற்றும் ‘‘நம்மவர் நூலகம், நம்மவர் படிப்பகம், நம்மவர் கலைக்கூடம்’’ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழா...

விஜய்யுடன் கூட்டணி ஜனவரியில் முடிவு: நூல் விட்டு பார்க்கும் நயினார்

நெல்லை: விஜய் தலைமையிலான தவெகவுடன் கூட்டணி தொடர்பாக வரும் ஜனவரி மாதம் பேசி முடிவெடுக்கப்படும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். வ.உ.சிதம்பரனாரின் 89வது நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லையில் உள்ள வஉசி மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: கடந்த...

வெளிமாநில வாக்காளர்களை சேர்க்கவே எஸ்.ஐ.ஆர் பணி: வைகோ குற்றச்சாட்டு

திருச்சி: ‘வெளிமாநில வாக்காளர்களை சேர்க்கவே எஸ்.ஐ.ஆர் பணி’ என்று வைகோ தெரிவித்துள்ளார். திருச்சியில் வரும் ஜனவரி 2ம்தேதி சனாதன சக்திகளின் பிரித்தாளும் சூழ்ச்சி குறித்தும், போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் சமத்துவ நடைபயணத்தை மதிமுக பொது செயலாளர் வைகோ துவக்குகிறார். இதையொட்டி திருச்சியில் நடைபயணத்தில் பங்கேற்கும் மதிமுக தொண்டர்களை வைகோ நேற்று தேர்வு...

வாக்குரிமையை யார் பறிப்பது? நீக்கினால் கேள்வி கேளுங்கள்: பிரேமலதா ஆவேசம்

திண்டுக்கல்: நமது வாக்குரிமையை நீக்கினால், ஏன் நீக்கினீர்கள் என கேள்வி எழுப்புங்கள் என பிரேமலதா தெரிவித்தார். திண்டுக்கல்லில் தேமுதிக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, அளித்த போட்டி: தேமுதிக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தேமுதிக கூட்டணி அமைக்கும் கட்சி தான் இந்த முறை வெற்றி...

மதுரையில் 60% வாக்காளர்களை நீக்க முயற்சியா? எஸ்ஐஆர் பணியில் குழப்பத்தை ஏற்படுத்தி பாஜ குளிர் காய்கிறது: மார்க்சிஸ்ட் எம்பி கண்டனம்

மதுரை: மதுரை மக்களவைத் தொகுதி எம்பி சு.வெங்கடேசன் நேற்று அளித்த பேட்டி: எஸ்ஐஆர் எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை எவ்வளவு குளறுபடியாக நடத்த வேண்டுமோ, அவ்வளவு குளறுபடியாக இந்திய தேர்தல் ஆணையம் நடத்திக் கொண்டிருக்கிறது. மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை 2002, 2005 வாக்காளர் பட்டியலில் 40 சதவீத வாக்காளர்களே இருக்கின்றனர். 60 சதவீத...

விஜய்யின் எஸ்ஐஆர் எதிர்ப்பு போராட்டம் கண்துடைப்பு: சபாநாயகர் விளாசல்

நெல்லை: வ.உ.சிதம்பரனாரின் 89வது நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை டவுன் மணி மண்டபத்தில் உள்ள அவருடைய சிலைக்கு சபாநாயகர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எஸ்.ஐ.ஆருக்கு எதிராக விஜய் போராட வேண்டுமானால் டெல்லியில் உள்ள ஒன்றிய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்க வேண்டும்....

பீகார் தேர்தல்:விஜய்க்கு எச்சரிக்கை: தமிழிசை அட்வைஸ்

வேலூர்: வேலூரில் நேற்று தமிழக பாஜ மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கோவை வரும் பிரதமரிடம் நேரடியாக சென்று கோரிக்கைகளை வைத்து, தேவையான திட்டங்களை பெறலாம். பீகார் தேர்தலில் புதியவர்களுக்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது. இதை பார்த்து தவெக தலைவர் விஜய் பாடம் கற்க வேண்டும் என்பதுடன் எச்சரிக்கையாக இருக்க...

எஸ்ஐஆர் பணிகளை கண்டித்து வரும் 24ம் தேதி விசிக ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை கண்டித்து வருகிற 24ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் செய்தியாளர்களை சந்திதார். அப்போது அவர்...

கோவை மாவட்டத்தில் பெரும்பான்மையான தொகுதியில் திமுக வெற்றி பெற வேண்டும்: மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜிக்கு முதல்வர் உத்தரவு

சென்னை: திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘உடன் பிறப்பே வா’ என்ற தலைப்பில் ‘ஒன் டூ ஒன்’ மூலம் தொகுதி வாரியாக நிர்வாகிகளை கடந்த ஜூன் 13ம் தேதி முதல் நேரில் சந்தித்து பேசி வருகிறார். இதுவரை அவர் 87 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை சந்தித்து பேசியுள்ளார். இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுக...

செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு தமிழகத்தில் பிழைக்க வந்தவர்களை வாக்காளர்களாக இணைக்க முயற்சி

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்டுக் கோப்பாக ஒருங்கிணைந்து செயல்படுவதால் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், அதிமுக கூட்டணியில் பாஜவை தவிர வேறு எந்த கட்சியும் கூட்டணியில் சேர தயாராக இல்லை. தமிழ்நாட்டின்...