சொல்லிட்டாங்க...
* என்னைப் பொறுத்தவரையில், தமிழ்நாடு ரைசிங் மட்டுமல்ல, திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு வில் கீப் ஆன்ரைசிங். - முதல்வர் மு.க.ஸ்டாலின் * எங்கள் கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறியதால், எந்த காரணத்தை கொண்டும் எங்களது கூட்டணிக்கு ஓட்டு எங்கேயும் குறைய போவதில்லை. - பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ...
எஸ்ஐக்கள் நிர்வகித்து வந்த 280 காவல் நிலையங்கள் தரம் உயர்வு: ரூ.1.19 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு நடவடிக்கை
சென்னை: தமிழகம் முழுவதும் உதவி ஆய்வாளர்கள் நிர்வகித்து வந்த 280 காவல் நிலையங்களை இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான காவல் நிலையங்களாக தரம் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 1,366 தாலுகா காவல் நிலையங்களில் 424 காவல் நிலையங்கள் உதவி ஆய்வாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது. தற்போதுள்ள விதிகளின்படி, கொலை, இறப்பு விபத்துகள், கொள்ளை போன்ற கடும் குற்றங்களை இன்ஸ்பெக்டர்கள்...
அஜித் குமார் கொலை வழக்கு சிறையிலுள்ள போலீசாரை ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு
மதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையின்போது மரணடைந்த வழக்கை சிபிஐ போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையிலுள்ள தனிப்படை காவலர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேரையும் காவலில் எடுத்து...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி மனைவி மனு: காவல்துறை பதில்தர ஐகோர்ட் உத்தரவு
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தாக்கல் செய்த மனு குறித்து பதில் அளிக்குமாறு தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் 2024 ஜூலை 5ம் தேதி அவரது வீட்டின்...
ஆசிய அலைச்சறுக்கு போட்டி அலையில் சறுக்கி வீரர்கள் சாகசம்: மாமல்லபுரத்தில் நேற்று துவக்கம்
சென்னை: மாமல்லபுரத்தில் ஆசிய அலைச்சறுக்கு போட்டியின் முதல் நாளான நேற்று, அலைகளில் சறுக்கி வீரர்கள் சாகசம் புரிந்தனர். தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளாக தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ஆசியன் அலைச்சறுக்கு கூட்டமைப்பு மற்றும் இந்திய அலைச்சறுக்கு கூட்டமைப்பு இணைந்து, தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்புடன் மாமல்லபுரம்...
லெக்சிங்டன் ஓபன் டென்னிஸ் ராம்குமார், அனிருத் இணை சாம்பியன்
கென்டக்கி: அமெரிக்காவில் நடந்த லெக்சிங்டன் ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் போட்டியில் இந்தியாவை சேர்ந்த ராம்குமார் ராமநாதன், அனிருத் சந்திரசேகர் இணை அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளது. அமெரிக்காவின் கென்டக்கி நகரில் லெக்சிங்டன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்தன. ஆடவர் இரட்டையர் பிரிவு போட்டிகளில் தொடர் வெற்றிகளை பெற்று வந்த இந்தியாவின்...
5வது டெஸ்டில் தகர்ந்த சாதனைகள்
* நேற்று முடிந்த 5வது டெஸ்டில் இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் வென்றது. டெஸ்ட் போட்டிகளில் இந்தியா, மிகக் குறைந்த ரன் வித்தியாசத்தில் அடைந்த வெற்றி இதுவே. இதற்கு முன், 2004ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 13 ரன் வித்தியாசத்தில் இந்தியா வென்றுள்ளது. * உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 6000 ரன் கடந்த முதல் வீரராக...
லியோனல் மெஸ்ஸி வலது காலில் காயம்
நியுயார்க்: மேஜர் லீக் கால்பந்து (எம்எல்எஸ்) போட்டிகளில் இன்டர் மியாமி அணிக்காக ஆடிவரும் அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த கால்பந்து போட்டி ஜாம்பவான் வீரர் லியோனல் மெஸ்ஸியின் (38) வலது கால் சதைப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக, அந்த அணி நிர்வாகம் கூறியுள்ளது. மருத்துவ சிகிச்சையில் உள்ள அவர் மீதமுள்ள போட்டிகளில் ஆடுவது சந்தேகமே எனக் கூறப்படுகிறது....
கனடா ஓபன் டென்னிஸ்: கிளாரா டாசனிடம் ஜகா வாங்கிய இகா; 4வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி
மான்ட்ரீல்: கனடா ஓபன் டென்னிஸ் போட்டியில் விம்பிள்டன் சாம்பியன் இகா ஸ்வியடெக்கை, டென்மார்க் வீராங்கனை கிளாரா டாசன் அபாரமாக வென்று அதிர்ச்சி அளித்தார். கனடா ஓபன் டென்னிஸ் போட்டி மான்ட்ரீல், டொரோன்டோ நகரங்களில் நடக்கின்றன. அதில் மான்ட்ரீல் நகரில் நடைபெறும் பெண்களுக்கான போட்டியில் நேற்று காலிறுதிக்கு முந்தைய 4வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. அதில் முன்னாள்...