Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

யோகாவால் நிகரற்ற சக்தி கிடைக்கிறது: ஐநா கருத்து

வாஷிங்டன்: இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் நேற்று முன்தினம் 10வது ஆண்டு சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஐநா பொது செயலாளர் ஆன்டனியோ கட்டாரெஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பண்டைய நடைமுறையின் காலவரையற்ற மதிப்பு, மிகவும் அமைதியான, இணக்கமான எதிர்காலத்திற்கான அதன் அழைப்புக்களால் மக்கள் ஈர்க்கப்படவேண்டும். சர்வதேச யோகா தினம், குணப்படுத்துதல் , மன அமைதி, உடல் மற்றும் ஆன்மீக மற்றும் மனநலன் ஆகியவற்றை வழங்குவதற்கான பழங்கால நடைமுறையின் நிகரற்ற சக்தியை அங்கீகரிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகளுக்கான இந்தியாவின் நிரந்தர தூதகரத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில்,‘‘ அனைத்து மதங்கள் மற்றும் கலாசாரங்களை சேர்ந்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட யோகா, மக்களை ஒன்றிணைக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.